Home -- Tamil -- Perform a PLAY -- 016 (Gone without a trace 1)
16. தடயமின்றி காணப்படாமற் போனான் 1
என்ன ஒரு பெரிய தேடுதல் வேட்டை! அவர்கள் இங்கும் அங்கும் தேடினார்கள். ஆனால் காணவில்லை. யோர்தான் நதிக்கரையில் பார்த்தார்கள், பட்டணத்தில் பார்த்தார்கள், மலைப் பகுதியில் பார்த்தார்கள். அவர்கள் எங்கும் அவனுடைய தடயத்தைக் கூடப் பார்க்க இயலவில்லை.
மூன்று நாட்கள், ஐம்பது மனிதர்கள் இந்த தேடுதலில் ஈடுபட்டார்கள். ஒருவரும் அவனைக் காணவில்லை. அவனைக் குறித்து எந்தவொரு தகவலும் கொடுக்க இயலவில்லை. யார் அவன்? நீ அவனைக் கண்டுபிடிக்க இயலும். ஒரு முறையாவது அவனுடைய பெயரை நீ கேட்டிருப்பாய்.
அவனைக் குறித்த முக்கிய விபரங்கள்:
ஊர்: திஸ்பியன்.
வேலை: தீர்க்கதரிசி.
அவன் இறைவனுடைய வார்த்தையைப் பேசினான். அவன் சொன்னவை அனைத்தும் நிறைவேறியது. தைரியமாக இராஜாவின் பாவங்களை சுட்டிக் காட்டினான். ஒரு குறிப்பிட்ட காலம் காகங்கள் அவனுக்கு உணவைக் கொண்டு வந்தன. ஒரு மலையின் மீது அவன் விண்ணப்பம் பண்ணினான். “கர்த்தாவே அக்கினியை வானத்திலிருந்து அனுப்பும்”. அவனுடைய பெயரின் அர்த்தம் “இறைவன் கர்த்தராக இருக்கிறார்”.
இந்த நபர் யார் என்று உனக்குத் தெரியுமா? பதிலைக் காண ஒரு வேதபகுதி உனக்கு உதவும்.
1ராஜாக்கள் 17-ம் அதிகாரத்தில் இந்தப் பெயரைக் காண முடியும். நீ கண்டுபிடித்த பின்பு, எங்களுக்கு அந்த பதிலை அனுப்பு.
விரைவில் இந்த நபரைக் குறித்து நீ அதிகம் கற்றுக்கொள்வாய்.
மக்கள்: உரையாளர்.
© Copyright: CEF Germany