Home -- Tamil -- Perform a PLAY -- 011 (Jesus is born)
11. இயேசு பிறந்தார்
(அநேகர் நடப்பதைப் போன்ற காலடிச் சத்தம்)
இராஜாவின் செய்தியாளர்: “நாசேரத்தூர் மக்களே! இங்கு வந்து அரசரின் கட்டளையை கவனித்துக் கேளுங்கள். ஒரு குடிமதிப்பு கணக்கு எடுக்கப் போகிறார்கள். இந்த நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பதிவு செய்ய வேண்டும்.
இது உண்மையில் நல்ல செய்தி அல்ல. நீங்கள் பதிவு செய்து விட்டு, மறுபடியும் இங்கு திரும்பி வரலாம். இந்த கட்டளைக்கு கீழ்ப்படியுங்கள். நினைவில் கொள்ளுங்கள். இராஜா கண்டிப்பானவர்”.
நாசரேத்தூர் மக்கள் அனைவரும் பதட்டப்பட்டார்கள். அநேகர் மம் நொந்து போனார்கள். அவர்களுடைய திட்டங்களுக்கு அரசரின் கட்டளை ஒத்துப்போகவில்லை. ஆனால் அது இறைவனின் திட்டத்துடன் பொருந்துவதாக இருந்தது.
மரியாளும், யோசேப்பும் மிக நீண்ட பயணத்திற்காக ஆயத்தமானார்கள். யோசேப்பு தாவீது இராஜாவின் வம்சத்தைச் சேர்ந்தவர். எனவே அவர் தனது பிறப்பிடமான பெத்லகேமிற்கு செல்ல வேண்டும். பயணம் இனிமையானது தான். ஆனால் 106 மைல்கள் நடந்து செல்வதென்றால் கடினமான ஒன்று. குறிப்பாக மரியாளுக்கு இது கடினமான காலம். அவள் தனது முதற் குழந்தையை பெற்றெடுக்க, நிறைமாத கர்ப்பிணியாய் இருந்தாள். அவள் இறைவனின் குமாரனுக்கு தாயாகப் போவதையும் அறிந்திருந்தாள். ஏனெனில் இறைதூதன் மரியாளிடமும், யோசேப்பிடமும் இந்த நற்செய்தியைக் கூறியிருந்தான்.
இயேசு, உலகின் இரட்சகர் – இது இறைவனின் நல்ல திட்டம்.
பெத்லகேமை நோக்கிய பயணம் முடிவில்லாமல் தொடர்ந்தது. அவர்கள் ஏற்கெனவே ஐந்து நாட்கள் பயணம் செய்துவிட்டார்கள். மரியாளும், யோசேப்பும் இதைத் திட்டம்பண்ணவில்லை. இது இறைவனின் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அவர்கள் அதற்கு கீழ்ப்படிந்தார்கள்.
பெத்லகேமில் அவர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தார்கள்.
சத்திரக்காரன்: “அறை ஒன்றும் காலி இல்லை. எல்லா அறையும் நிரம்பியுள்ளது. வேறு எங்காவது போய் கேளுங்கள். உங்களுக்கு இங்கு இடம் இல்லை”.
அவர்கள் சென்ற இடமெல்லாம் கதவுகள் மூடப்பட்டன.
இறுதியாக அவர்கள் ஒரு மாட்டுத்தொழுவத்தைக் கண்டார்கள்.
மாட்டுத்தொழுவம் என்பது இறைவனின் திட்டம்.
அந்த நடு இரவில், அங்கே ஓர் அற்புதம் நிகழ்ந்தது.
இயேசு பிறந்தார். மரியாள் இயேசுவைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். இறைவனின் திட்டம் நிறைவேறியது.
இது நடப்பதற்கு 700 ஆண்டுகள் முன்பு, பெத்லகேமில் மேசியா பிறப்பார் என்று இறைவன் வாக்குப் பண்ணியிருந்தார்.
இறைவன் உலகத்தின் மீது அன்பு கூர்ந்தார். தனது திட்டத்தை நிறைவேற்றி, நமக்காக அவருடைய குமாரனைத் தந்தார்.
மக்கள்: உரையாளர், இராஜாவின் செய்தியாளர், சத்திரக்காரன்.
© Copyright: CEF Germany