Home -- Tamil? -- Perform a PLAY -- 156 (Esther – star of the East 1)
156. எஸ்தர் - கிழக்கு நட்சத்திரம் 1
சிறுமி: “உனக்கு என்னைத் தெரியுமா? எனது பெயர் அத்சாள். நான் பெர்சியாவில் வசிக்கிறேன். நான் இங்கு அந்நியப் பெண்ணாக இருக்கிறேன். எனது பெற்றோர்கள் இறந்துவிட்டார்கள். என் நினைவில் கூட அவர்கள் இல்லை. எனது உறவினர் மொர்தெகாய் என்னை வளர்த்தார். அவர் எனக்கு நல்ல வளர்ப்பு தகப்பன். நாங்கள் சூசான் என்னும் பெரிய நகரத்தில் வாழ்கிறோம். இங்கு ஒவ்வொருவரும் என்னை எஸ்தர் என்று அழைக்கிறார்கள். எனது பெர்சியப் பெயரின் அர்த்தம் 'கிழக்கு நட்சத்திரம்'”.
அறியப்படாத, எளிய ஓர் அனாதைப் பெண் ஒரு நாளில் பிரகாசிக்கிற நட்சத்திரம் போலவும் எல்லோராலும் அறியப்பட்டவளாகவும் இருப்பாள் என்று அவள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
எஸ்தர் ராணியாக மாறினாள். அவளது கதை வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ளது.
வலிமைமிக்க ராஜா அகாஸ்வேரு அவளைத் தெரிந்தெடுத்தான். இளம்பெண்களில் அவன் எஸ்தரை சிறந்தவளாகக் கருதினான். அவளின் தலைமீது கிரீடம் சூட்டினான். மிகப்பெரிய விருந்து ஆயத்தம் செய்தான்.
அந்த நாளில் முழு ராஜ்யத்திலும் அவன் எந்த ஒரு வரியையும் வசூலிக்கவில்லை. அதற்குப் பதிலாக பரிசுகளைக் கொடுத்து அனுப்பினான். அந்த நேரத்தில் எஸ்தர் ராணியாக மாறியது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல. ராஜாவாகிய அகாஸ்வேருவின் தெரிந்தெடுப்பில் இறைவன் செயல்பட்டார் என்று நிச்சயமாய் நான் சொல்ல முடியும்.
முழு உலகத்தையும் ஆள்பவர் இந்தக் காரியத்தில் ராஜாவின் இருதயத்தையும் வழிநடத்தினார் என்று எஸ்தர் நம்பினாள்.
எஸ்தர் அரண்மனைக்கு ஒரு இரகசியத்துடன் சென்றாள். அவள் ஒரு யூதப்பெண் என்பதை ஒருவரும் அறியவில்லை. இதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று அவளுடைய சித்தப்பா ஆலோசனை கூறியிருந்தார். அவர் வார்த்தைக்கு அவள் கீழ்ப்படிந்தாள். அவள் அமைதியாய் இருந்தாள். மொர்தெகாயும் ராஜா அரண்மனையில் வேலை பார்த்தான். ராஜாவின் வேலையாட்கள் ராஜாவிற்கு எதிராக செயல்படுவது ஒரு நாளில் மொர்தெகாய்க்கு தெரிய வந்தது. அவர்கள் ராஜாவைக் கொல்ல திட்டம் தீட்டியிருந்தார்கள்.
மொர்தெகாய் எஸ்தர் ராணியிடம் இதைக்குறித்து சொன்னான். அவள் ராஜாவிடம் இதை நேரடியாக முறையிட்டாள்.
இந்த சதித்திட்டம் வெளிச்சத்திற்கு வந்தது. குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட்டார்கள்.
அகாஸ்வேரு இதைக் குறித்து ஒரு அறிக்கையை ராஜாவின் பதிவேட்டில் எழுதும்படி தனது அமைச்சரிடம் கூறினான். அவன் அதைச் செய்தான்.
இந்த சமயத்தில் ஒருவன் அரண்மனையில் பிரவேசித்தான். அவன் பெருமையுள்ளவன், வஞ்சகன். அவன் பெயர் ஆமான். அவன் ராஜாவின் தயையைப் பெறும்படி செயல்பட தீர்மானித்தான்.
முழு பெர்சிய ராஜ்யத்திற்கும் இரண்டாவது மிகப்பெரிய வல்லமையுள்ள மனிதனாக ஆமான் இருந்தான்.
அவன் சாத்தானின் திட்டத்தை தனக்குள் கொண்டிருந்த ஒரு மனிதன்.
இதைக் குறித்து நீங்கள் அடுத்த நாடகத்தில் கேட்பீர்கள்.
மக்கள்: உரையாளர், சிறுமி.
© Copyright: CEF Germany