STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Tamil":

Home -- Tamil? -- Perform a PLAY -- 130 (God is love)

Previous Piece -- Next Piece

நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாங்ள்

130. இறைவன் அன்பாக இருக்கிறார்


சிறுமி: “காமி நோ அய் கஸிகோஸி”.

சிறுவன்: “ஈகோ டா ஸ்லாவிட்; பாக் எஸ்ட் ஜிபோ”.

சிறுமி: “இயேசு சேவ்கிதிர், சேவர் பெனி”.

கவலைப்படாதிருங்கள். நீங்கள் சரியாகத் தான் கேட்டுள்ளீர்கள்! எங்களது சிறிய மொழிப் பள்ளிக்கு உங்களை வரவேற்கிறோம். எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள். மிக முக்கியமான வாக்கியத்தை இன்றும் மூன்று நிமிடங்களில் உலகில் உள்ள மற்ற மொழிகளில் நீங்கள் கற்றுக்கொள்வீர்கள்.

அந்த மிக முக்கியமான வாக்கியம் என்ன? நான் அதற்கான பதிலை மகிழ்ச்சியுடன் கூறுகிறேன்.

இறைவன் அன்பாக இருக்கிறார். அவர் உன்னையும் நேசிக்கிறார்.

கற்பனை செய்துபார்! மிகப்பெரிய, சர்வ வல்லமையுள்ள இறைவன், வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவர் உன்னை நேசிக்கிறார், உனது பாவத்திற்கான தண்டனையை அவர் ஏற்றுக்கொண்டு, உனக்குப் பதிலாக மரிக்கும்படி அவர் தம்முடைய ஒரே பேறான குமாரனை பூமிக்கு அனுப்பினார். நீங்கள் இந்த உலகிலும், பரலோகிலும் அவருடன் ஒப்புரவாகி வாழும்படி அவர் இப்படிச் செய்தார்.

இறைவனின் அன்பு மிகப்பெரியது. அதற்கு முடிவே இல்லை. எனவே தான் நீ சொல்ல முடியும்: இறைவன் அன்பாக இருக்கிறார். அவர் உன்னையும் நேசிக்கிறார்.

ஒரு ஆப்பிரிக்க மொழியில், இதன் உச்சரிப்பு இப்படி வருகிறது. ஹட்டாலா சின்டா, டுடுடு டொமினி. ஹட்டாலா சின்டா, டௌ, டென் யாங்கோங்.

பாடல்: “ஹட்டாலா சின்டா, டு டுடு டொமினி …” (பாடல் இணைக்கப்பட்டுள்ளது)

மிக முக்கியமான வாக்கியத்தை ஜெர்மன் மொழியில் கற்றுக்கொள்ள உனக்கு விருப்பமா? ஹாட் இஸ்ட் டை லெய்பி, லாஸ்ட் மிச் இர்லோசென். ஹாட் இஸ்ட் டை லெஸ்பி, எர் லெய்ப்ட் எர் லெய்ப்ட் ஆச் மிச்.

பாடல்: “ஹாட் இஸ்ட் டை லெஸ்பி …” (பாடல் இணைக்கப்பட்டுள்ளது)

இது சத்தியம். வேதாகமம் நமக்கு கூறுகிறது.

“இறைவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்”. (யோவான் 3:16)

இறைவன் உன்னை அதிகமாக நேசிக்கிறார். இது உண்மையான வார்த்தை! எனவே டாமி செய்வதைப் போல, நீயும் உனது பெயரை இந்த வசனத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.

டாமி: “இறைவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிற டாமி, கெட்டுபோகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்”.

இறைவன் ஒவ்வொரு சிறுபிள்ளைகளையும் நேசிக்கிறார். அவர்கள் என்ன மொழி பேசினாலும் சரி அல்லது அவர்களின் தோல் நிறம் எதுவாக இருந்தாலும் சரி, அவர்களை நேசிக்கிறார். உனது நண்பர்கள் மற்றும் வகுப்பு மாணவர்கள் இதை அறிந்திருக்கிறார்களா? அவர்களுக்கும் சொல்! சிறிய மொழிப்பள்ளிக்கு வரும்படி அவர்களை அழைப்பு கொடுங்கள்.

இப்போது நீங்கள் துர்கிஷ் மொழியில் இதைக் கேட்கப் போகிறீர்கள் அல்லாஹ் சேவ்கிதிர், குர்டரிசிம்டிர், அல்லாஹ் சேவ்கிதிர், சேவர் பெனி.

பாடல்: “அல்லாஹ் சேவ்கிதிர், குர்டரிசிம்டிர் …” (பாடல் இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது)

இறைவன் அன்பாக இருக்கிறார். அவர் உன்னையும் நேசிக்கிறார் என்பதை நினைவிற்கொள். இறைவனுடைய அன்பைக் குறித்து நீ அதிகம் அறிய விருப்பமா? அப்படியென்றால் எனக்கு எழுது.


மக்கள்: உரையாளர், சிறுமி, சிறுவன், டாமி.

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on July 30, 2018, at 10:15 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)