Home -- Tamil? -- Perform a PLAY -- 125 (Deadly arrow 2)
125. சாவுக்கேதுவான அம்பு 2
உண்மையைப் பேசுவதற்கான துணிச்சல் ஒரு மனிதனுக்கு இருந்தது. 400 பேருக்கு எதிராக ஒருவன்.
மிகாயா: “ஆகாப் ராஜா! இறைவன் இந்த யுத்தத்தை விரும்பவில்லை. நீர் அவருடைய சத்தத்திற்கு செவி கொடுக்கவில்லையென்றால், உமது உயிருக்கு ஆபத்து நேரிடும்”.
ஆகாப்: “நீங்கள் இதைக் கேட்டீர்களா? அவன் எனக்கு மரணத்தீர்ப்பு கொடுக்கிறான். அவனை இப்பொழுதே சிறைச்சாலையில் தள்ளுங்கள்”.
இறைவனின் சத்தத்தைக் கேட்க ஆகாப் ராஜாவிற்கு விருப்பம் இல்லை. அவன் ராமோத் பட்டணத்தின் மீது தாக்குதல் தொடுத்தான்.
இறைவனுக்கு செவிகொடுக்காதவர்கள் தங்களுக்கு ஆபத்தை தேடிக் கொள்கிறார்கள். ஆகாபின் ஒற்றர்கள் எதிரியின் போர் திட்டத்தைக் குறித்த ரகசியத்தை கண்டறிந்து சொன்னார்கள்.
ஒற்றன்: “ஆகாப் மற்றும் அவனது படையுடன் யுத்தம்பண்ணும்போது படைவீரர்களை குறிவைக்காமல், ராஜாவை குறிவைத்து தாக்குங்கள்”.
ஆனால் ஆகாப் தந்திரமாய் செயல்பட்டான்.
ஆகாப்: “யோசபாத் ராஜாவே, நான் வேஷம் மாறி யுத்தகளத்திற்குள் செல்கிறேன். நீர் உமது ராஜ வஸ்திரத்தோடு வாரும். நாம் இணைந்து யுத்தம் செய்வோம்”.
யோசபாத் ராஜாவும் உடன் சென்றான். என்னால் இதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏன் அவன் இறைவனின் சத்தத்தைக் கவனிக்கவில்லை? பொதுவாக முடிவுகளை எடுக்கும்போது, அவன் எப்போதும் இறைவனின் உதவியை நாடுவான்.
அது கடினமான ஓர் யுத்தம். எதிரி ராஜாவை மட்டும் குறிவைத்தான். என்ன நடந்திருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடியும். யோசபாத் ராஜா ராஜ வஸ்திரத்துடன் இருப்பதை எதிரி கண்டான். அவன் தான் ஆகாப் ராஜா என்று நினைத்து அவனை குறி வைத்தார்கள். யோசபாத் தனது உயிரைக் குறித்து பயந்தான். இப்போது அவன் உண்மையை உணர்ந்து கொண்டான். இறைவனுடைய சத்தத்தைக் கவனியாதோர் தங்கள் உயிருக்கு ஆபத்தைக் கொண்டு வருகிறார்கள். யோசபாத் மரணத்திற்கு வெகு அருகில் இருந்தான். ஆனாலும் எதிரிகள் அவனைத் தாக்காதபடி இறைவன் செயல்பட்டார்.
எதிரியின் படைவீரர்களில் ஒருவன் அம்பை எய்த போது, அது ஆகாப் ராஜாவை தாக்கியது. அன்று சூரிய மறைவுக்குப் பின் அவன் இறந்தான். அவன் இறைவனின் சத்தத்தைக் கவனிக்கவில்லை. எனவே தனது உயிரை இழந்தான். இப்போது யோசபாத் நன்கு உணர்வடைந்தான்.
இனிமேல் இறைவனில்லாமல் அவன் முடிவு எடுப்பானா?
இறைவனின் சத்தத்தைக் கவனியாதோர் தங்கள் வாழ்விற்கு ஆபத்தைக் கொண்டு வருகிறார்கள். யோசபாத் ராஜா இறைவனின் வழிநடத்துதல் இல்லாமல் செயல்பட ஆரம்பித்தான். பின்பு தனது தவறைக் குறித்து மனம் வருந்தினான்.
உங்கள் நண்பர்கள் கூட இறைவனின் சத்தத்தைக் கேட்காதவர்களாக இருக்கக் கூடும். தூண்டிலில் சிக்கும் மீனைப் போல அவர்கள் இருக்கிறார்கள். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியம் அல்ல. இறைவனுக்குச் செவி கொடுங்கள். இயேசுவை அறிந்து, அவரை நேசிக்கும் மக்களிடம் இருந்து ஆலோசனையைக் கேளுங்கள்.
இறைவனின் சத்தத்திற்கு செவி கொடுக்காதவர்கள் தங்கள் வாழ்விற்கு ஆபத்தைக் கொண்டு வருகிறார்கள். இறைவனுக்கு செவி கொடுப்பதே மெய்யான சந்தோஷம். எனக்கு சிறந்ததை மட்டுமே அவர் தர விரும்புகிறார் என்பதை நான் அறிந்திருக்கிறேன்.
மக்கள்: உரையாளர், ஆகாப், மிகாயா, ஒற்றன்.
© Copyright: CEF Germany