STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Tamil":

Home -- Tamil? -- Perform a PLAY -- 099 (Safari quiz)

Previous Piece -- Next Piece

நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாங்ள்

99. சபாரி வினாவிடை


நாங்கள் சபாரி வண்டியில் போகிறோம். நீ எங்களுடன் வருகிறாயா?

சிறுவன்: “நாம் வேதாகமத்தின் ஊடாக ஒரு பயணம் செல்வோம். புகழ்மிக்க மிருகங்களைக் காண்போம்”.

சிறுமி: “அவற்றில் சில மிகவும் அற்புதமானவை”.

அவற்றில் சிலவற்றை நீ கண்டிப்பாக அறிந்திருப்பாய். அந்த மிருகங்களின் பெயரை நீ எனக்கு எழுதி அனுப்பு.

நாம் முதலாவது எகிப்திற்கு செல்கிறோம். சூரியன் மிக கடுமையாக தகிக்கின்றது. 400 ஆண்டுகளாக இஸ்ரவேலர்கள் இங்கு அடிமைகளாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களை காப்பாற்றும்படி இறைவனை நோக்கி முறையிட்டார்கள். இறைவன் அவர்களுடைய கூக்குரலை கேட்டார். ஆனால் பார்வோன் அவர்களை அனுப்ப விரும்பவில்லை. அவர்களை தண்டிக்க எகிப்தில் மிருகங்களை வர இறைவன் கட்டளையிட்டார். அவைகள் அந்த தேசம் முழுவதும் நிறைந்தது. வீடுகளில், படுக்கைகளிலும் காணப்பட்டது. அவைகள் என்ன மிருகங்கள்?

அநேக மைல்கள் தூரம் நடந்து சென்ற பின்பு, அவன் ஒரு ஆற்றைக் கண்டான். இறைவனுடைய செய்தியாளர் எலியா அங்கே அநேக நாட்கள் இருந்தான். பறவைகள் அவனுக்கு காலை உணவையும், இரவு உணவையும் கொண்டு வந்தன. அவனுக்கு அப்பத்தையும், இறைச்சியையும் கொண்டு வந்த பறவை எது?

நான் பிலேயாமைக் குறித்து சிந்திக்கிறேன். அவன் இறைவனை விட்டு விலகி வாழ்ந்தான். அவன் ஏறிப்போன மிருகத்தை அடித்தான். அது அவனிடம் மனித சத்தத்துடன் பேசியது. அது என்ன மிருகம்?

அரராத் மலையைக் குறித்து உனக்கு நிச்சயம் தெரியும். மிகப்பெரிய ஜலப்பிரளயத்திற்கு பின்பு நோவாவின் பேழை இந்த மலையில் தங்கியது. எந்தப் பறவை நோவாவிடம் திரும்பி வரும்போது ஒலிவ இலையைக் கொத்திக் கொண்டு வந்தது? அதன் மூலம் பூமியில் தண்ணீர் வற்றிப்போனதை நோவா அறிந்துகொண்டான்.

இப்போது சபாரி பாபிலோனிற்கு செல்கிறது. தானியேல் இங்கு சிறைபிடிக்கப்பட்டுச் சென்றான்.

சிறுமி: “அவன் எனக்கு முன்னுதாரணம். அவன் தினமும் மூன்று நாட்கள் விண்ணப்பம் பண்ணினான்”.

இதனால் அவன் மிருகங்களுக்கு இரையாக குகையில் போடப்பட்டான். அது என்ன மிருகம்?

வேதாகமம் தந்திரமுள்ள மிருகம் என்று எதைக் கூறுகிறது? பாம்பு. சாத்தான் இதைப் பயன்படுத்தி முதல் மக்களை இறைவனுக்கு கீழ்ப்படியாதபடி சோதித்தான்.

சிறுவன்: “அது மட்டும் நடக்காதிருந்தால், ஒவ்வொருவரும் இறைவனுக்கு சமீபமாய் இருந்திருப்போம்”.

ஆனால் நமது பாவ சுபாத்தினால் இறைவனை விட்டு நாம் பிரிக்கப்பட்டிருக்கிறோம். எனவே தான் இயேசு நம்மை எளிதில் வழிவிலகிச் செல்லும் மிருகத்துடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்? அது என்ன மிருகம்?

இயேசுவே நல்ல மேய்ப்பர். அவர் மக்களை பெயர் சொல்லி அழைக்கிறார். ஏனெனில் அவர் அவர்களை நேசிக்கிறார்.

குறைந்தது நான்கு மிருகங்களை உன்னால் கண்டுபிடிக்க முடிந்ததா? உனது பதிலை எனக்கு அனுப்பு.

(பதில்கள்: தவளை, காகம், கழுதை, புறா, சிங்கம், ஆடு)


மக்கள்: உரையாளர், சிறுவன், சிறுமி.

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on July 30, 2018, at 10:06 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)