Home -- Tamil -- Perform a PLAY -- 017 (So courageous 2)
17. அதி தைரியசாலி 2
மழை பொழிந்தது. மிகவும் அற்புதமான காரியம். ஒரு சில நாட்களில் பஞ்சத்திலிருந்து மீண்டு தோட்டங்கள், நிலங்கள் செழிப்பை அடைந்தன.
சரியான நேரத்தில் மழையை அனுப்பியவர் யார்? ஒவ்வொன்றையும் உயிருடன் பாதுகாக்கின்றவர் யார்?
ஒரே ஒரு இறைவன் இருக்கின்றார் என்பதை கிட்டத்தட்ட எல்லோரும் மறந்துவிட்ட காலமாக இஸ்ரேலில் காணப்பட்டது. அவரே மழையையும், சூரிய ஒளியையும் கொடுக்கின்றவர். மரத்திலும், கல்லிலும் மக்கள் தெய்வங்களை உருவாக்கினார்கள். அவைகளில் ஒன்றிற்கு பாகால் என்று பெயர். வறட்சியான காலத்தில் தானியங்களையும், கனிகளையும், அநேக மந்தைகளையும் இந்த தெய்வத்தின் மூலம் பெறலாம் என்று அவர்கள் நம்பினார்கள்.
இந்த தவறான நம்பிக்கைக்கு காரணமாக இருந்தவன் ஆகாப் இராஜா. அவன் ஒரு தவறான பெண்ணைத் திருமணம் செய்த போது இது ஆரம்பித்தது. உண்மையான இறைவனை அறியாத ஒரு நாட்டிலிருந்து அவனது மனைவி யேசபேல் வந்திருந்தாள். அவள் தனது மதத்தையும், பாகால் ஆராதனையையும் இஸ்ரேலுக்குள் கொண்டு வந்தாள். ஆகாப் அரசனும் அந்த பாகாலை ஆராதிப்பவனாக மாறினான். முழு தேசமும் இப்படி மாறிப்போனது.
இல்லை. எல்லோரும் இல்லை. எலியா அப்படிச் செய்யவில்லை. இறைவனுக்கு உண்மையாய் இருந்த மீதியானவர்களில் அவனும் ஒருவன். ஒரு நாள் அவன் விண்ணப்பம் பண்ணினான்:
எலியா: “இறைவனே மூன்று ஆண்டுகளுக்கு மழை பெய்ய வேண்டாம். அப்போது நீரே ஒரே இறைவன் என்பதையும், மழைக்கும், வளர்ச்சிக்கும் காரணர் நீரே என்பது முழு தேசமும் உணர்ந்துகொள்ளும்”.
ஒவ்வொருவரும் அவரே இறைவன் என்பதைக் காண்பார்கள் என்பதில் எலியா நம்பிக்கையுள்ளவனாய் இருந்தான். விரைந்து எலியா இராஜாவின் அரண்மனையை அடைந்தான். ஆகாப் அமர்ந்திருந்த அரியணையை நோக்கி, எவ்வித முன் அனுமதியுமின்றி சென்றான். பயமின்றி அரசன் முன்பு நின்று கூறினான்.
எலியா: “ஆகாப் இராஜாவே, இறைவன் உயிருடன் இருக்கிறார் என்பது உண்மை. அடுத்த மூன்று ஆண்டுகள் தேசத்தில் மழை பெய்யாது. இதன் மூலம் ஒரே ஒரு உயிருள்ள இறைவன் இருப்பதை நீ அறிந்து கொள்வாய்”.
ஆகாப் மறு வார்த்தை சொல்லும் முன்பே, எலியா கடந்து சென்றுவிட்டான். பிறகு? அடுத்து என்ன நிகழ்ந்தது என்பதை நீ அடுத்த நாடகத்தில் காண்பாய்.
மக்கள்: உரையாளர், எலியா.
© Copyright: CEF Germany