STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Tamil":

Home -- Tamil -- Perform a PLAY -- 014 (A slap for the King)

Previous Piece -- Next Piece

நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாங்ள்

14. இராஜாவிற்கு அதிர்ச்சி


கடல் கடந்து வந்த இவர்கள் பயத்தையும், நடுக்கத்தையும் ஏற்படுத்தினார்கள். அவர்கள் திருடினார்கள், கொன்றார்கள், வீடுகளையும், சபைகளையும் எரித்தார்கள். ஆல்பிரட் என்ற இராஜா ஒரு முறை அவர்களை வென்றார். சிலகாலத்திற்குப் பின்பு அவர் தோற்கடிக்கப்பட்டார். அவருடைய எதிரிகள் அவரை மேற்கொண்டார்கள். எனவே அவர் அந்த இடத்தை விட்டு ஓடிப்போனார்.

அவர் மரங்களுக்கிடையில் மறைந்து வாழ்ந்தார். ஒரு அறியப்படாத இராஜா. சிலருக்கு மட்டுமே அவர் இராஜா என்பது தெரியும். அவர்களுக்குள் மேய்ப்பனாகிய உல்பிரிக் என்பவனும் ஒருவன். அவன் ஒரு போதும் தனது இராஜாவைக் காட்டிக் கொடுக்கவில்லை. அவன் தனது வீட்டிற்கு அவரை அழைத்தான். அவனுடைய மனைவிக்கு கூட அவர் யார் என்பது தெரியவில்லை. அந்த இராஜா மேசையில் ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருந்தார். அவள் அவர் ஒரு இராஜா என்பதை அறியவில்லை.

ஒரு நாள் அவள் திட்டினாள்.

பெண்: “நாள் முழுவதும் இங்கேயே உட்கார்ந்து, ஒரு வேலையும் செய்வதில்லை. நான் எவ்வளவு வேலை செய்கிறேன். அங்கே ரொட்டி சுடுவதைப் பார்த்து கவனமாக எடு. நான் கிணற்றிற்கு தண்ணீர் எடுக்க செல்கிறேன்”.

அந்த ஆல்பிரட் இராஜா அமைதியாக சமயலறை சென்றார். அவருடைய சிந்தனைகள் முழுவதும் எதிரிகளைக் குறித்து இருந்தது. வெற்றி பெறுவதற்கான வழி என்ன என்று யோசித்திருக்கலாம் ...

அவருடைய பகல் கனவுகள் கலையும் வண்ணம் முகத்தில் ஓர் அறை விழுந்தது. அந்த பெண் வந்துவிட்டாள். ரொட்டி கருகிவிட்டது. கருகிப்போன வாசனை எழுந்தது.

பெண்: “சோம்பேறியே! இங்கிருந்து தொலைந்து போ!”

அந்த நேரம் அவருடைய கணவன் அங்கு வந்தான்.

மனிதன்: “என்ன தைரியம் உனக்கு? இராஜாவிடம் இப்படியா பேசுவது? நீ அவரை அறிந்து கொள்ள முடியவில்லையா?”

அதன்பின்பு என்ன நடந்தது? நமக்குத் தெரியவில்லை.

ஆனால் அறியப்படாத இராஜாவைக் குறித்த இக்கதை எனக்கு ஆண்டவராகிய இயேசுவை நினைவுபடுத்துகிறது. அது இதை விட மோசமான ஒன்று. 2000 ஆண்டுகள் முன்பு அவர் முன்னணையில் கிடத்தப்பட்டார். அநேகர் அவரை அறியவில்லை. மக்கள் இறைவனின் குமாரனை ஏற்றுக் கொள்ளவில்லை. அவரை பரியாசம் பண்ணினார்கள், நியாயம் தீர்த்தார்கள். அவர் சிலுவையில் மரித்தார். ஆம்! இன்றும் அவர் அறியப்படாத இராஜாவாக இருக்கிறார்?

உன் வாழ்வில் அவர் இராஜாவாக இருக்க அனுமதிப்பாயா?


மக்கள்: உரையாளர், பெண், மனிதன்.

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on July 25, 2018, at 03:03 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)