STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Tamil? -- Perform a PLAY -- 080 (A bill for Mom) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- TAMIL -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாடகங்கள்
80. அம்மாவிற்கு ஒரு விலைப்பட்டியல்ஜாஸ்மீனுக்கு மிகவும் பிடித்த ஒன்று பொம்மை பகுதியின் அலமாரியில் வைக்கப்பட்டிருந்தது. ஜாஸ்மீன்: “அதற்கு தேவை பணம். பெரியவர்கள் சிலாக்கியம் பெற்றவர்கள். அவர்கள் என்ன விரும்பினாலும் வாங்க இயலும். எனக்கு ஒரு யோசனை”. ஜாஸ்மீன் பரபரப்பாக இருந்தாள். மதிய உணவிற்கு பின்பு அவள் தனது அறைக்குச் சென்றாள். அவளுக்குத் தேவை ஒரு பென்சில் மற்றும் ஒரு சிறிய காகிதம். ஜாஸ்மீன்: “ஜாஸ்மீனின் பட்டியல். நான் எதற்கும் சம்பளம் வாங்காத ஒரு அடிமை அல்ல. மறு உபயோக பாட்டில்கள் ரூ 2.50 குளியலறை சுத்தப் பணி ரூ 4 இரவு உணவு பாத்திரங்கள் தூய்மை ரூ 8 அறை சுத்தம் (கடினப் பணி) ரூ 13.50 பாத்திரம் கழுவுதல் ரூ 5 குப்பையை அகற்றுதல் ரூ 8 (என்ன ஓர் துர்நாற்றம்!) மொத்தம் ரூ 41 விரைவாக இதை செலுத்துங்கள் கடினமாக வேலை செய்யும் உங்களின் ஜாஸ்மீன்”. அவள் இரகசியமாக அதை உணவு மேஜையில் வைத்தாள். இரவு உணவின் போது அவளது தட்டின் கீழே ஒரு கடிதத்தை கண்டாள். அவள் தனியாக இருக்கும் போது அதை திறந்து படித்தாள். ஜாஸ்மீன்: (அவள் அதைத் திறக்கும் போது பணம் கீழே விழுந்தது. சரியாக ரூ.41) “இவ்வளவு பணம் இதற்கு முன்பு எனக்கு இருந்ததில்லை. ஓ! இங்கே இன்னொரு குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது. எனது அருமை ஜாஸ்மீன்! நீ செலுத்த வேண்டிய பட்டியல் இங்கு உள்ளது. நீ நிச்சயமாக அறிவாளிப் பெண். உனக்கு நேரம் இருக்கும் போது எனது விலைப்பட்டியலை வாசித்துப்பார். 10 ஆண்டுகள் உனக்கு துணி துவைத்தது -கட்டணம் இல்லை. ஜாஸ்மீன் வெட்கம் அடைந்தாள். வேகமாக ஓடி அம்மாவை அணைத்துக் கொண்டாள். ஜாஸ்மீன்: “அம்மா, எனது பட்டியலை இனி ஒரு போதும் நான் கொடுக்கமாட்டேன். உங்கள் பணத்தை திரும்ப தருகிறேன். நான் உன்னை நேசிக்கிறேன்”. மற்றவர்களுக்கு உதவுவது மகிழ்ச்சியைத் தருகிறது. அம்மா தினம் விரைவில் வரப்போகிறது. நீ அம்மாவிற்கு மகிழ்ச்சியைத் தர விரும்புகிறாயா? நிச்சயம் நல்ல பரிசை கொடுக்கும்படியான யோசனை உனக்கு தோன்றியிருக்கும். நினைவிற்கொள்: மற்றவர்களுக்கு பணி செய்வது மகிழ்ச்சியைத் தரும். அம்மா தினத்தில் மட்டுமல்ல, எல்லா நாளிலும். மக்கள்: உரையாளர், ஜாஸ்மீன். © Copyright: CEF Germany |