STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Tamil -- Perform a PLAY -- 045 (The catastrophe 4) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- TAMIL -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாடகங்கள்
45. பேரழிவு 4ஹெய்தி மலைகளின் கடும்புயல் வீசியது. விளை நிலங்கள் பாழாகின. மந்திரவாதி ஒரிஸ்டில் மழை பெய்து கொண்டிருந்த இருட்டு வேளையில் மலைமேல் ஏறினான். மின்னல் இருட்டு வேளையில் பிரகாசித்தது. மலைமீது விக்டர் இருப்பதை அறிந்து கொண்டான். ஒரிஸ்டில்: “நான் அவனை கொல்லப் போகிறேன். எல்லாவற்றிற்கும் அவன் தான் காரணம். அவன் எப்போதும் இயேசுவைக் குறித்துப் பேசுகிறான். இந்த புயலுடன் சேர்ந்து ஆவிகளும் வந்திருக்கின்றன. நான் அவனை கொல்லப் போகிறேன். அவன் மலை மீதிருந்து விழுந்து விடுவான் என்று எல்லோரும் எண்ணினார்கள்”. கொலை சிந்தனையுடன் ஒரிஸ்டில் முன்னேறினான். ஆனால் திடீரென்று ஒரு பெரிய குழிக்குள் விழுந்து விட்டான். கால்கள் அதில் சிக்கிக் கொண்டது. அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரிஸ்டில்: “உதவி! உதவி!” இடிசத்தத்தின் மத்தியிலும் விக்டர் இந்த சத்தத்தைக் கேட்டார். மந்திரவாதி தன்னைப் பின்தொடர்வது விக்டருக்குத் தெரியாது. ஒரிஸ்டில்: “எனக்கு உதவுங்கள். மலைமீது உள்ள என் மூத்த மகளை நான் சந்திக்க வேண்டும்”. ஒரிஸ்டில் மிகப்பெரிய பொய்யன். இருப்பினும் விக்டர் அவனுக்கு உதவி செய்தார். காயப்பட்ட அவனை கவனமாக குழியில் இருந்து தூக்கியெடுத்து, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுவந்தார். அப்போது ஒரு சத்தம் கேட்டது. அந்த சத்தம் வரவர அதிகமாகியது. அந்த மலை குலுங்கியது. மிகப்பெரிய மண்சரிவு ஏற்பட்டு கிராமமே புதைந்து போனது. ஒரிஸ்டில் அதிர்ச்சியுற்றான். ஒரிஸ்டில்: “என் மனைவி என் டிபாம் நாம் அவர்களுக்கு உதவ வேண்டும்”. விக்டர்: “ஒரிஸ்டில் நீ ஏன் நான் சொன்னதை கவனிக்கவில்லை? நான் மண்சரிவு குறித்து எச்சரித்தேன். அவர்கள் இறந்துபோனால் நீ தான் குற்றவாளி ஆவாய்”. விக்டர் உதவியுடன் மந்திரவாதி அங்கு சென்றான். தனது வீடு இருந்த பகுதியில் தோண்ட ஆரம்பித்தான். ஒரிஸ்டில்: “என் மனைவி இறந்துவிட்டாள். அங்கே பாருங்கள் டிபாம்!” அவள் தனது மகளை சகதியில் இருந்து தூக்கினான். ஒரிஸ்டில்: “டிபாம்! என் டிபாம்!” விக்டர்: “ஆண்டவராகிய இயேசுவே, எங்களுக்கு உதவும். உணவு மற்றும் மருந்துகளுடன் இறைப்பணியாளர்களை அனுப்பும்”. இயேசு விக்டரின் விண்ணப்பத்திற்கு பதில் கொடுத்தார். குறுகிய நேரத்தில் உதவி கிடைத்தது. ஒரு மிஷன் மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் டிபாம் கொண்டு செல்லப்பட்டாள். அவளுக்கு அங்கு என்ன நிகழ்ந்தது என்பதை அடுத்த நாடகத்தில் காணலாம். மக்கள்: உரையாளர், ஒரிஸ்டில், விக்டர். © Copyright: CEF Germany |