STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Tamil -- Perform a PLAY -- 031 (Alarm on the farm) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- TAMIL -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாடகங்கள்
31. விளை நிலத்தில் அலாரம்உனக்கு டாமைத் தெரியுமா? அவன் தென் அமெரிக்காவில் விவசாய நிலத்தில் வசிக்கிறான். அவனுடைய பிறந்த நாளின் போது, உண்மையான கோழிக் குஞ்சு அவனுக்கு கிடைத்தது. டாம் அதை மிக கவனமாக வளர்த்தான். அது வளர்ந்து பெரிய கோழியாக மாறியது. மஞ்சள் கலர் வெள்ளை இறக்கைகளாக மாறியது. எனவே தான் டாம் அதற்கு திருமதி. ஒயிட் என்று பெயர் வைத்தான். அவன் அதற்கு ஒரு கூடு கட்டினான். ஒவ்வொரு முறை திருமதி.ஒயிட் முட்டையிடும் போது, சத்தம் போட்டு அதைத் தெரிவிக்கும். சில நாள் கழித்து திருமதி. ஒயிட் ஒரு முட்டையும் இடவில்லை. டாம்: “அம்மா. என்ன ஆயிற்று! ஒரு முட்டையும் இடவில்லையே. அது தானியங்களின் விளை நிலங்களுக்குள் சென்று மறைந்து விடுகிறது”. அம்மா: “டாம். கொஞ்சம் பொறுத்திரு“. அவன் அம்மா பேசிய போது புன்னகைத்தான். சில வாரங்கள், பின்பு டாம் ஏன் என்பதை அறிந்து கொண்டான். டாம்: “அம்மா, அம்மா, பாருங்கள்!” திருமதி. ஒயிட் அநேக கோழிக் குஞ்சுகளுடன் அங்கிருந்து வெளியே வந்தது. டாம் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். (தீயணைப்பு வண்டி சத்தம்) ஒரு நாள் தீயணைப்பு வண்டி சத்தம் கேட்டது. தானியங்கள் கருகிப்போயின. தீ அந்த வீட்டையும் நெருங்கி வந்தது. டாம்: “எங்கே திருமதி.ஒயிட்?” டாம் எல்லா இடங்களிலும் சென்று அதைத் தேடினான். அந்தக் கோழியைக் கண்டான். அது இறகுகளை விரித்திருந்தது. அதன் கீழ் பயத்துடன் காணப்பட்ட கோழிக் குஞ்சுகள் இருந்தன. டாம்: “இது எப்படி சாத்தியம்?” அம்மா: “மிருகங்களுக்கு ஆபத்துகளை முன் கூட்டியே உணரும் தன்மை உள்ளது. நெருப்பு நெருங்கிய போது, கோழிக்குஞ்சுகள் அம்மாவிடம் பாதுகாப்பைத் தேடுகின்றன. அவைகளை திருமதி. ஒயிட் நேசித்த படியினால், தனது இறக்கைகளை விரித்து, அதன் கீழ் அவைகளைப் பாதுகாத்தது. நெருப்பானது அதை சுட்டது. அவள் உயிரை தியாகம் செய்து, தனது குஞ்சுகள் உயிரோடிருக்கும்படி செய்தது”. அப்பா: “இயேசுவின் அன்பை நாம் இதனுடன் ஒப்பிட முடியும். நாம் வாழும்படி, இயேசு மனப்பூர்வமாக தமது உயிரைக் கொடுத்தார் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ளுவோம்”. மக்கள்: உரையாளர், டாம், அம்மா, அப்பா. © Copyright: CEF Germany |