STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Tamil -- Perform a PLAY -- 032 (Does God answer every prayer) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- TAMIL -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாடகங்கள்
32. இறைவன் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் பதில் அளிக்கிறாராஉனக்கு பிடித்தமான நிறம் உண்டா? எமிக்கு பிடித்த நிறம் நீலநிறம். அவளுக்கு நீலவானம், நீலக்கடல் பிடிக்கும். மிகவும் பிடித்த நீல நிறம் என்றால், அவளுடைய அம்மாவின் நீலநிறக் கண்கள் ஆகும். ஆனால் அவளின் கண்கள் பழுப்பு நிறமாய் இருந்தன. எமி இப்படி நினைத்தாள். எமி: “அம்மா, இறைவன் என்னுடைய எல்லா விண்ணப்பங்களையும் கேட்பாரா?” அம்மா: “ஆமாம். இறைவன் எல்லா விண்ணப்பங்களையும் கேட்கிறார்”. எமி: “சிறு பிள்ளைகளின் ஜெபங்களைக் கேட்பாரா?” அம்மா: “நிச்சயமாக கேட்பார். இப்போது படுக்கைக்குச் செல்லும் நேரம். நன்றாகத் தூங்கு”. எமி: “சரி அம்மா! குட் நைட்!” விளக்கு அணைந்த பின்பு, எமி தனது படுக்கையில் விண்ணப்பம் பண்ணினாள். எமி: “அன்புள்ள இறைவனே, நீர் எதையும் செய்ய முடியும். எனது பழுப்பு நிறக் கண்களை நீலநிறக் கண்களாக மாற்றும். ஆமென்”. இறைவன் எமியின் விண்ணப்பத்தைக் கேட்பவர் என்ற நம்பிக்கை இருந்தது. பின்பு அவள் தூங்கினாள். அடுத்த நாள் காலை அவள் எழுந்து தனது விண்ணப்பத்தை எண்ணிப் பார்த்தாள். அவள் படுக்கையை விட்டு வேகமாக எழுந்து, கண்ணாடி முன்பு நின்றாள். மீண்டும் அவளது பழுப்பு நிறக் கண்கள் அவளைப் பார்த்தன. இறைவன் தனது விண்ணப்பத்தை கேட்க மாட்டார் என்று எமி எண்ணினாள். பின்பு ஒருவர் அவளிடம் இப்படிக் கூறினார். “இல்லை என்பதும் ஒருபதில் தான்”. அநேக ஆண்டுகள் கடந்தன. எமி வாலிபப் பருவத்தை அடைந்த போது, இந்தியாவிற்கு அருட்பணியாளராக சென்றாள். அங்கு அவள் மொழியைக் கற்றுக்கொண்டாள். அவர்கள் சாப்பிட்ட உணவுகளை தானும் சாப்பிட்டாள். அவர்களைப் போல உடைகளை உடுத்தினாள். அவள் வெளிநாட்டுப் பெண்ணைப் போல தோற்றமளிக்கவில்லை. ஒரு நாள் நண்பன் எமியிடம் கூறினான். நண்பன்: “எமி, உனது கண்கள் நீலநிறமாக இல்லாமல் பழுப்பு நிறமாய் இருப்பது நல்லது. உன்னை இந்த நாட்டவர் போல மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்”. பழுப்பு நிறக் கண்கள்? எமி சிறுமியாய் இருந்த போது செய்த விண்ணப்பத்தை எண்ணிப் பார்த்தாள். இல்லை என்பதும் ஓர் பதில். இறைவனிடம் இருந்து வரும் நல்ல பதில். சில சமயங்களில் இறைவன் நாம் விரும்புகிறதை உடனடியாகத் தருகிறார். சில சமயங்களில் காத்திருக்கச் செய்கிறார். சில சமயங்களில் அவர் “இல்லை” என்கிறார். ஆமாம், இல்லை அல்லது காத்திரு என்று எப்படிப்பட்ட பதிலாக இருந்தாலும் சரி, அவர் தமது அன்பை நமக்கு காண்பிக்கிறார். அவருடைய பதில் எப்போதும் நமக்கு நன்மையானதாக உள்ளது. அவர் எப்போதும் உனக்கு சரியான காரியத்தை செய்கிறார். மக்கள்: உரையாளர், எமி (சிறுமியாக), எமியின் அம்மா, நண்பன். © Copyright: CEF Germany |