STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Tamil":

Home -- Tamil? -- Perform a PLAY -- 126 (So close – and yet so far)

Previous Piece -- Next Piece

நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாங்ள்

126. மிகவும் அருகில்-ஆனாலும் வெகு தொலைவில்


மனிதன்: “எனக்கு இது மட்டும் இருந்திருந்தால், அதற்காக எதையும் செய்ய நான் ஆயத்தம், நான் ஏதோ ஒன்றை இழந்திருக்கிறேன். இந்த உலகில் நான் அதை எப்படி அடைய முடியும்?”

வாலிப தலைவனின் வாழ்வில் ஏதோ ஒரு குறைவு இருந்தது. வெளியில் யாருக்கும் அது தெரியவில்லை. அவன் வெற்றியுள்ளவனாக, பார்வைக்கு அழகுடன், மிகுந்த வசதியுடன் வெளியில் காணப்பட்டான்.

ஆனாலும் ஏதோ ஒரு குறைவு இருந்தது. அவன் அதை அறிந்திருந்தான். அதைப் போல உன் வாழ்விலும் ஏதோ ஒரு குறைவு இருக்கின்றதா? அவனுக்கு சமாதானம் இல்லை. அவன் அதை எப்படிப் பெற முடியும்? இயேசு அதற்கானப் பதிலை அறிந்திருந்தார்.

மனிதன்: “நல்ல போதகரே, நித்திய ஜீவனைப் பெற நான் என்ன செய்ய வேண்டும்?”

அவனிடம் இல்லாமல் இருந்த காரியம் அது தான். இயேசுவின் மீதான விசுவாசத்தில் தான் நித்திய ஜீவன் ஆரம்பிக்கிறது. நாம் மரித்த பின்பும் பரலோகில் அந்த வாழ்க்கை தொடர்கிறது. அவன் இந்த வாழ்வை விரும்பினான்.

இயேசு: “நீ நித்திய ஜீவனைப் பெற விரும்பினால், கட்டளைகளைக் கைக்கொள். திருடாதிருப்பாயாக, விபசாரம் செய்யாதிருப்பாயாக, பொய் சொல்லாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, உன் தகப்பனையும், தாயையும் கனம் பண்ணுவாயாக”.

மனிதன்: “நான் என் வாழ்வில் சிறு வயது முதல் இவைகளைக் கைக்கொண்டிருக்கிறேன்”. நீயும் இதைப் போன்றே ஒரு பதிலைக் கொடுக்க முடியுமா?”

இயேசு: “அப்படியென்றால் உனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று தரித்திரருக்ககுக் கொடு, பின்பு என்னைப் பின்பற்றிவா”.

வாலிபத் தலைவன் இதைக் கேட்ட போது, அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாய் இருந்தபடியால் அதிர்ச்சியடைந்தான். துக்கத்துடன் அவன் திரும்பிப் போனான். இயேசுவையும் நித்திய ஜீவனையும் விட அவனுக்கு பணம் மிகவும் முக்கியமாக இருந்தது.

சிறுமி: “ஒரு மனிதன் பணக்காரனாக இருந்து கொண்டு இயேசுவைப் பின்பற்ற முடியாதா?”

முடியும். ஆனால் எது முதலாவது என்பது முக்கியம்? நாம் ஒரு பரிசோதனை செய்வோம்.

சிறுமி: “இந்த மெழுகுவர்த்தி எதைக் குறிக்கிறது?”

நான் இதை இயேசுவுக்கு ஒப்பிடுகிறேன். அவர் உலகின் ஒளியாய் இருக்கிறார்.

சிறுவன்: “நான் அதை எரியச் செய்ய வா?” (தீக்குச்சி உரசும் சத்தம்)

சிறுமி: “எவ்வளவு அழகாக இப்போது எரிகின்றது”.

சிறுவன்: “நான் ஒரு 100 ரூபாய் தாளை மெழுகுவர்த்தி முன்பு கொண்டு சென்றால் என்ன ஆகும்?”

சிறுமி: “நெருப்பில் பணம் எரிந்துவிடும்”.

சிறுவன்: “இப்போது எனக்குப் புரிகின்றது. அவன் பணத்திற்கு அதிக மதிப்பு கொடுத்தான். இயேசுவுக்கு இரண்டாம் தர மதிப்பு தான் கொடுத்தான்”.

சிறுமி: “இந்தக் காரியம் அவனை இயேசுவிடம் இருந்து பிரித்தது”.

இப்போது நாம் இப்படிச் செய்வோம். நான் எனது கையில் பணத்தை மூடிக்கொண்டு, மெழுகுவர்த்தி பின்னால் கொண்டு செல்கிறேன்.

சிறுவன: “இப்போது இயேசு முதலாவது இருக்கிறார். பணம் அடுத்த இடத்தில் இருக்கிறது”.

முக்கியத்துவங்களின் வரிசையை நீ கவனித்துப் பார்க்கிறாயா? பணக்கார வாலிபத் தலைவனின் வாழ்வில் பணம் முதல் இடத்தில் இருந்தது. இந்தக் காரணத்தினால் தான் அவன் பரலோக நித்திய ஜீவனை இழந்து போனான்.

இந்தக் கதை இப்படி முடிவது வேதனைக்குரியது. இயேசுவுடன் உள்ள உன் வாழ்வு மகிழ்ச்சியான முடிவைக் கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன். இயேசுவை விட வேறு ஏதேனும் காரியங்கள் உன் வாழ்வில் முதலிடம் பெறுகின்றதா என்று உன்னை நீயே கேட்டுக்கொள்.


மக்கள்: உரையாளர், மனிதன், இயேசு, சிறுமி, சிறுவன்.

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on July 27, 2018, at 08:23 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)