STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Tamil":

Home -- Tamil? -- Perform a PLAY -- 115 (The greatest Christmas present)

Previous Piece -- Next Piece

நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாங்ள்

115. மிகப்பெரிய கிறிஸ்துமஸ் பரிசு


சிறுமி: “கிறிஸ்துமஸ் வரை காத்திருப்பது எனக்குக் கடினமான காரியம் இந்த ஆண்டு என்னுடைய விருப்பப்பட்டியல் ஒரு மைல் தூரம் நீளமாக இருக்கும்”.

சிறுவன: “என்னுடைய ஆசையும் நிறைவேறப் போகிறது என்று நம்புகிறேன். ஒரு புதிய ஸ்மார்ட்-போன் எனக்கு வேண்டும்”.

சற்று நீண்ட காலம் இதற்காக நீ காத்திருக்க வேண்டும்.

சிறுமி: “ஆமாம்! என்ன செய்வது?”

ஆனால் சிமியோன் காத்திருந்த அளவிற்கு நீ காத்திருக்க தேவையில்லை.

சிறுவன்: “யார் அது?”

வேதாகமம் அவனை இவ்விதமாக அறிமுகப்படுத்துகிறது: அவன் ஒரு வாலிபன் அல்ல, அவன் வயது முதிர்ந்தவன். எருசலேமில் வாழ்ந்து வந்தான். இறைவனுக்கு உண்மையாக வாழ்ந்தவன். அவன் 40 நீண்ட ஆண்டுகளாகக் காத்திருந்தான். அவனுடைய ஆசை நிறைவேறியது.

சிறுமி: “அவ்வளவு நீண்ட காலமா? அவனுடைய பெரிய ஆசை என்ன?”

அவனுடைய ஆசை இறைவனுடைய வாக்குத்தத்தங்களில் ஒன்றுடன் தொடர்புடையது.

இறைவன்: “சிமியோனே! நீ உலக இரட்சகரைக் காணும் முன்பு மரிக்கமாட்டாய்”.

சிமியோன் தொடர்ந்து காத்துக்கொண்டே இருந்தான். அவன் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவே இல்லை. இறைவனை நம்பி வாழ முடியும் என்பதை அவன் அறிந்திருந்தான்.

ஒரு நாள் அவன் தேவாலயத்திற்குச் சென்றான். அந்த நேரம் மரியாளும், யோசேப்பும் குழந்தை இயேசுவுடன் அங்கு வந்திருந்தார்கள். சிமியேன் அந்தக் குழந்தைக் கண்ட போது, ஒரு காரியத்தை அறிந்து கொண்டான்: இவரே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இரட்சகர்!

சிமியோன் இயேசுவைக் கண்டான். அவனுடைய பெரிய ஆசை இப்போது நிறைவேறியது. உலகில் உள்ள அனைத்துப் பரிசுப் பொருட்களை விட, இது அவனுக்கு அதிகமான மகிழ்ச்சியைத் தந்தது!

மகிழச்சியுடன் தனது கரங்களில் அந்தக் குழந்தையை ஏந்திக்கொண்டு விண்ணப்பம் செய்தான்:

சிமியோன்: “ஆண்டவரே உமது அடியானை சமாதானத்துடன் போக விடுகிறீர். நீர் உமது வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினீர். எனது கண்கள் உலக இரட்சகரைக் கண்டன.”

சிமியோனைக் குறித்து ஒருவர் இவ்விதம் பாடல் எழுதியுள்ளார்:

(பின்னணி இசை)
வயது முதிர்ந்த ஒருவன் இருந்தான். அவன் பெயர் சிமியோன். அவனது பெரிய ஆசை நிறைவேறியது. அவன் இறைவனின் குமாரனைக் கண்டான்.
என்னிடம் வாரும், இரட்சகரே! நான் கதவைத் திறக்கிறேன். என்னிடம் வாரும், இரட்சகரே, நான் கதவைத் திறக்கிறேன்.

கிறிஸ்துமஸ் காலத்தில் உனது எல்லா ஆசைகளும் நிறைவேறுமா என்பது எனக்குத் தெரியாது. இந்தப் பாடலில் உள்ளதைப் போல, இயேசு உனது வாழ்வில் வரும்படி நீ விரும்பினால், அந்த ஆசையை இன்று இயேசு நிறைவேற்றுவார்.


மக்கள்: உரையாளர், சிறுமி, சிறுவன், இறைவன், சிமியோன்.

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on July 26, 2018, at 05:59 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)