Home -- Tamil -- Perform a PLAY -- 062 (Finally at the goal 2)
62. இறுதியாக இலக்கை அடைதல் 2
எருசலேமின் அரண்மனையை விட்டு ஞானிகள் கடந்து சென்றார்கள். அவர்கள் தேடிய புதிய இராஜா இயேசு, இதோ இங்கே இருக்கிறார். அவரை ஆராதிக்கும்படியாக அவர்கள் வந்தார்கள். அவர்கள் வாழ்வில் அவரே ஆண்டவராக இருக்கிறார் என்பதை பிறருக்கு காண்பிக்க விரும்பினார்கள். ஆனால் எருசலேமில் அவரைக் காண முடியவில்லை. அவர்கள் நகரத்தை விட்டுச் சென்ற போது இருளாய் இருந்தது.
ஞானி 1: “ஏன் ஏரோது இராஜா மிகவும் கலக்கமுற்றான்?”
ஞானி 2: “நட்சத்திரம் தோன்றிய காலத்தை ஏன் அவன் அறிய விரும்பினான்?”
ஞானி 1: “அங்கே பாருங்கள் மீண்டும் அந்த நட்சத்திரம். யூதர்களுக்கு இராஜா பிறந்திருப்பதை இந்த நட்சத்திரம் நமக்கு காண்பிக்கிறது”.
பாபிலோனின் மனிதர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது மிகவும் சந்தோஷப்பட்டார்கள். கற்பனை செய்து பாருங்கள், அந்த நட்சத்திரம் வானத்தில் அவர்களுக்கு முன்பு சென்றது. பெத்லகேமிற்கு செல்லும் வழியை அவர்களுக்கு காண்பித்தது. ஒரு குறிப்பிட்ட வீட்டின் முன்பு சென்றவுடன் அந்த நட்சத்திரம் அப்படியே நின்றது. அந்த வீட்டில் தான் மரியாளும், யோசேப்பும் குழந்தை இயேசுவுடன் இருந்தார்கள். குடிமதிப்பு எழுதப்பட்டபின்பு மற்றவர்கள் தங்கள் வீட்டிற்கு சென்றுவிட்டார்கள். இவர்கள் அங்கே ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தார்கள்.
இறுதியில் ஞானிகள் அந்த வீட்டிற்குள் சென்று மரியாளையும், யோசேப்பையும் கண்டார்கள். தங்கள் சொந்தக் கண்களினால் குழந்தை இயேசுவைக் கண்டார்கள். அந்தக் குழந்தையே இறைவன் அனுப்பிய இராஜா. அவர்கள் ஆச்சரியப்பட்டு இயேசுவை தாழவிழுந்து பணிந்து கொண்டார்கள். அவரைச் சார்ந்து வாழ விரும்பினார்கள். தங்கள் வாழ்வில் அவர் இராஜாவாக ஆளுகை செய்ய விரும்பினார்கள்.
இயேசு உனது இராஜாவா? உனது வாழ்வை அவர் வழிநடத்துகிறாரா? இயேசுவை நமது வாழ்வில் இராஜாவாகப் பெற்றிருப்பதைத் தவிர இந்த முழு உலகிலும் சிறப்பான ஒரு காரியம் உனக்கும், எனக்கும் இல்லை.
ஞானிகள் அவரைப் பணிந்துகொண்டார்கள். அவர்கள் நன்றியுணர்வுடன் தங்கள் பரிசுகளைக் கொடுத்தார்கள். தங்கள், விலையேறப்பெற்ற தூபவர்க்கம் மற்றும் வெள்ளைப் போளத்தை நித்திய இராஜாவிற்கு பரிசாகக் கொடுத்தார்கள். நாம் அவருக்கு கொடுக்கக் கூடிய விலையேறப்பெற்ற பரிசு, நமது வாழ்வை அவருக்கு கொடுப்பது ஆகும். தனது வாழ்வை இயேசுவிற்கு கொடுக்கும் ஒவ்வொருவரும் மிகப்பெரிய பலனைப் பெறுவார்கள்.
மக்கள்: உரையாளர், இரண்டு ஞானிகள்.
© Copyright: CEF Germany