Home -- Tamil -- Perform a PLAY -- 042 (TiFam, daughter of the witch doctor 1)
42. டிபாம், மந்திரவாதியின் மகள் 1
ஹெய்டி மலைகளின் மீது சூரியன் எழும்பியது. டிபாம் தனது பெற்றோர்களுடன் ஒரு சிறிய குடிசை வீட்டிற்குள் வாழ்ந்து வந்தாள் அவர்கள் பரம ஏழைகள். தீய ஆவிகளைக் குறித்த பயத்துடன் வாழ்ந்தார்கள். அவர்களுக்கு உண்மையான இறைவனைக் குறித்து தெரியாது. “பயப்படதேயுங்கள்” நான் உங்களுடனே இருக்கிறேன்” என்று சொன்ன அன்புள்ள இறைவனை அவர்கள் அறியவில்லை. டிபாமின் அப்பா ஒரு மந்திரவாதி. அவர் பெயர் ஒரிஸ்டில். அவளது அம்மா வீட்டு வேலை மற்றும் வயல் வேலை செய்வாள். டிபாம் சில உதவிகள் செய்வாள்.
அம்மா: “டிபாம். உருளைக்கிழங்குகளை தோண்டி எடுத்து, நாளை சந்தைக்குக் கொண்டு செல்ல வேண்டும். வாழை இலையை வெட்டி வந்து, அந்தக் கூடையில் வை”.
டிபாம்: “நான் அதைச் செய்தால், எனக்கு புதிய ஆடை வாங்கித் தருவீர்களா?”
அம்மா: “பார்ப்போம்”.
டிபாம் வாழைத் தோட்டத்திற்கு சென்றாள். அவளது தோழிகள் அங்கு வேகமாக ஓடி வந்தார்கள்.
மேரி: “டிபாம்! டிபாம்!”
டிபாம் மேரி நாளை நான் புதிய ஆடையை வாங்கப் போகிறேன். அதில் வார்த்தைகள் போடப்பட்டிருக்கும்.
மேரி: “வார்த்தைகளா? உனக்கு வாசிக்கத் தெரியாதே. நான் முதலில் வாசிக்கக் கற்றுக்கொள்வேன். பின்பு நானும் வாங்குவேன்”.
டிபாம்: “என்னுடைய அப்பாவிடமிருந்து தாயத்து கயிறை உன் பாதுகாப்பிற்காக நீ வாங்கி கொள்வாயா?”
மேரி: “இல்லை. நான் அதை அணிவதில்லை. நாங்கள் கிறிஸ்தவர்களாக மாறிவிட்டோம். நாங்கள் ஒரு வேதாகமம் வாங்கப் போகிறோம்”.
டிபாம்: “மேரி, முட்டாள்தனமாக செயல்படாதே. தீய ஆவிகளுக்கு அது பிடிக்காது. நீ கஷ்டப்படப் போகிறாய்”.
மேரி: “டிபாம். நான் பயப்படத் தேவையில்லை. இயேசு தீய ஆவிகளை விட வல்லமையுள்ளவர். அவர் கூறுகிறார். “பயப்படாதேயுங்கள். நான் உங்களுடனே கூட இருக்கிறேன். விக்டர் இதை எங்களுக்கு வேதாகமத்தில் இருந்து கூறியுள்ளார்”.
டிபாம்: “அவைகள் அனைத்தும் பொய்கள். முழுப்பொய்”.
டிபாம் தனது தாயத்து கயிறை பிடித்துக் கொண்டு ஓடினாள்.
டிபாம்: “அம்மா, இனிமேல் மேரி தாயத்து கயிறு அணிய மாட்டாள். அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறிவிட்டார்கள்”.
கிறிஸ்தவர்கள் இயேசுவைப் பின்பற்றுபவர்கள். அவர்கள் மந்திரம் பில்லிசூனியம், தாயத்து போன்ற காரியங்களை விரும்புவதில்லை. இறைவன் தமது வார்த்தையால் இவைகளை தடை பண்ணியிருக்கிறார். நீ இப்படிப்பட்ட காரியங்களை நம்புகிறாயா? அல்லது இயேசுவை நம்புகிறாயா? அவர் மட்டுமே உனது பாதுகாப்பு. அவரே உனக்கு உதவி செய்பவர். அவர் உன்னிடமும் கூறுகிறார். “பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்”. நாம் இயேசுவிடம் விண்ணப்பம் பண்ணலாம் என்பதை டிபாம் அறியவில்லை. அவள் எப்போதும் பயத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்தாள்.
மேரியும், அவளது பெற்றோர்களும் கிறிஸ்தவர்களாக மாறியதை கேள்விப்பட்டவுடன், மந்திரவாதி ஒரிஸ்டில் முகம் கறுத்துப்போனது. பின்பு … என்ன நிகழ்ந்தது என்பதை இந்த உண்மை இறைப்பணியாளர் சம்பவத்தின் மூலம் காணலாம்.
மக்கள்: உரையாளர், டிபாம், அம்மா மேரி.
© Copyright: CEF Germany