Home -- Tamil -- Perform a PLAY -- 043 (Good news 2)
43. நல்ல செய்தி 2
சந்தைக்கு போகும் பாதையில் கூட்ட நெரிசல் இருந்தது. டிபாம் மற்றும் அவளது அம்மா இனிப்பு உருளைக் கிழங்குகள் நிறைந்த கூடைகளை தலை மீது வைத்து சுமந்து வந்தார்கள். நிறைய பணம் சம்பாதிக்கலாம். அதில் மகளுக்கு ஒரு புதிய ஆடை வாங்கலாம் என்று திருமதி. ஒரிஸ்டில் நம்பினாள். மகளுக்கு ஏற்கெனவே இருப்பது ஒரே ஒரு பழைய, கிழிந்த ஆடை. டிபாமின் பெற்றோர்கள் ஏழைகள். அவளது அப்பா எப்போதும் தீய ஆவிகளுக்கு சிறந்த பலிகளை செலுத்துவார். ஆனால் அவர் ஒரு போதும் தன் உள்ளத்தில் அமைதியைப் பெறவில்லை. திடீரென்று டிபாமிற்கு மேரியின் நினைவு வந்தது. அவளது தோழி மேரி கிறிஸ்தவள். எனவே அவள் தாயத்து கயிறு அணிவதில்லை. இறுதியாக சந்தையை அடைந்தார்கள். அங்கே நிறைய காரியங்கள் காணப்பட்டன.
விற்பனையாளர்: “சுத்தமான காய்கறிகள்! சூப்பரான பீன்ஸ்கள்!”
விற்பனையாளர்: “புதிய அறுவடையில் வந்த மக்காச் சோளம்”.
விற்பனையாளர்: “மலிவு விலையில் தரமான பொருள்!”
திருமதி ஒரிஸ்டில் தனது கூடையை ஒரு மனிதன் முன்பு இறக்கினாள். அவன் அதை சோதித்துப் பார்த்தான்.
விற்பனையாளர்: “உருளைக் கிழங்குகள் முழுவதும் புழுக்கள்!”
திருமதி.ஒரிஸ்டிலுக்கு மிகுந்த ஏமாற்றம். குறைவான பணமே கிடைத்தது. அவள் பிற பொருட்களை வாங்கச் சென்றாள். ஆனால் டிபாமிற்கு ஒரு அற்புதம் நிகழ்ந்தது. ஒரு அன்புள்ள மனிதன் அவளது கூடையில் இருந்த எல்லா உருளைக் கிழங்குகளையும் வாங்கிக் கொண்டான். இந்த மனிதன் மூலம் தான் தனது தோழி கிறிஸ்தவளாக மாறினாள் என்பது அவளுக்குத் தெரியாது. பணத்தைப் பெற்றுக் கொண்ட அவள், தனக்குப் பிடித்த ஆடையை வாங்கினாள். அவளுக்கு மிகுந்த சந்தோஷம். பின்பு அவள் விக்டருடன் பேசினாள்.
டிபாம்: “அங்கே பாருங்கள். என்னுடைய உருளைக் கிழங்குகளை வாங்கிய மனிதன். அவருடைய கையில் என்ன புத்தகம் இருக்கிறது?”
டிபாமும், அவளது அம்மாவும் நின்று, அவர் மக்களிடம் பேசிக் கொண்டிருந்த காரியங்களை கவனித்தார்கள்.
விக்டர்: “நான் உங்களுக்கு நல்ல செய்தி கூறுகிறேன். இறைவன் உங்களை நேசிக்கிறார். உங்கள் இருதயத்தில் சமாதானம் தர விரும்புகிறார். நீங்கள் எதற்கும் பயப்படத் தேவையில்லை”.
திருமதி.ஒரிஸ்டில்: “டிபாம் அவர் பேசுவது உண்மை என்று நான் நம்புகிறேன்”.
மந்திரவாதி ஒரிஸ்டில் தனது மனைவி விக்டர் பேசியதை கேட்டாள் என்று அறிந்தவுடன் கோபத்துடன் கத்தினான்.
ஒரிஸ்டில்: “விக்டர் உங்களை ஏமாற்றுகிறான். அவனை நம்ப வேண்டாம். ஆவிகள் நம்மை துன்புறுத்தும்”.
திருமதி.ஒரிஸ்டில்: “ஓரிஸ்டில், என் இருதயத்தில் சமாதானம் காணப்படுகிறது. விக்டரின் இறைவன் தீய ஆவிகளை விட வல்லமையுள்ளவர்”.
அந்த நேரம் ஒரிஸ்டில் டிபாமின் புதிய ஆடையை எடுத்தான். ஒரு பொம்மைக்கு அதை உடுத்தினான். அதில் அநேக குச்சிகளை சொருகி வைத்தான்.
ஒரிஸ்டில்: “இது தான் விக்டர். இவன் சாகவேண்டும். இந்த குச்சிகள் அதை செய்யும்”.
டிபாம் அதிர்ச்சியடைந்தாள். அவளது அப்பா இதற்கு முன்பு இப்படிச் செய்ததில்லை. யார் வல்லமையுள்ளவர்? மந்திரவாதியா அல்லது இயேசுவா? அடுத்த நாடகத்தில் இதைக் காண்போம்.
மக்கள்: உரையாளர், திருமதி.ஒரிஸ்டில், டிபாம், விற்பனையாளன், விக்டர், ஒரிஸ்டில்.
© Copyright: CEF Germany