Home -- Tamil -- Perform a PLAY -- 044 (The witch doctor rants 3)
44. மந்திரவாதி கூச்சலிடுதல் 3
டிபாம்: “அம்மா. மழைபெய்யப் போகின்றது”.
அம்மா: “ஆ! அருமை! டிபாம் மழை பெய்து தூசியை எல்லாம் சுத்தம் செய்து விடும்”.
டிபாம்: “விக்டரைக் காணவில்லை. அவர் இறந்து விட்டாரா?”
அம்மா: “அப்படி இருக்காது”.
டிபாம்: “தீய ஆவிகள் அவரைக் கொன்றுவிடும் என்று அப்பா சொன்னாரே. ஏனெனில் அவர் எப்போதும் இயேசுவைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்”.
அம்மா: “அவருடைய இறைவன் பெரியவர் என்று நான் நம்புகிறேன்”.
டிபாமின் அம்மா கால் தவறி கீழே விழுந்தாள். அவளது பாதத்தில் காயம் ஏற்பட்டது. அவள் எவ்விதம் வீட்டிற்கு திரும்ப முடியும்? மழையில் நனைந்து கொண்டே இறைப்பணியாளர் வீட்டை நெருங்கினார்கள். கதவைத் தட்டினார்கள். யார் கதவைத் திறந்தது. விக்டர். அவர் உயிருடன் இருந்தார்.
விக்டர்: “வாருங்கள் நெருப்பில் குளிர் காயுங்கள்”.
டிபாமின் அம்மா பாதத்தில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்து போட்டுக் கொண்டாள்.
டிபாம்: “நீங்கள் சாகப் போகிறீர்கள். எனது அப்பா உங்களை சபித்துவிட்டார். எனக்கு பயமாக உள்ளது. நாம் இங்கே இருக்கக் கூடாது”.
விக்டர்: “நீ பயப்படத் தேவையில்லை. இயேசு எனது ஆண்டவர். அவர் என்னை பாதுகாப்பார். தீய ஆவிகள் என்னை சேதப்படுத்த முடியாது”.
அம்மா: “விக்டர், நீங்கள் சந்தையில் பேசும் போது கேட்டிருக்கிறேன். உங்களது வார்த்தைகளை நான் நம்புகிறேன். என்னுடைய இருதயத்தில் இப்போது சமாதானம் உள்ளது”.
டிபாமின் அம்மா சமாதானத்தை உணர்ந்தார். ஆனால் டிபாமிற்கு அப்பாவைக் குறித்த பயம் இருந்தது. அப்பா இதைக் குறித்து கேள்விப்பட்டால் … அவர்கள் வீட்டை அடைந்த போது மிகவும் களைப்புடன் இருந்தார்கள். கால சூழ்நிலை மிகவும் மோசமாக இருந்தது. புயல் காற்று வீசியது. மழை தொடர்ந்து பெய்தது. ஆறு கரையைத் தாண்டி ஓடியது. தெருக்களில் வெள்ளம் புகுந்தது. யாரும் வெளியே செல்ல இயலவில்லை. (தட்டும் சத்தம்)
டிபாம்: “யார் அங்கே?” (கதவை திறக்கும் சத்தம்)
ஒரிஸ்டில்: “விக்டர், நீ ஏன் இங்கு வந்தாய்?”
விக்டர்: “அங்கு மலைச் சரிவு ஏற்பட்டுள்ளது. பாறைகள் உடைந்துள்ளன. இந்த வீட்டை விட்டு உடனே வெளியேறுங்கள். இல்லையெனில் மண்சரிவு ஏற்பட்டு உயிருடன் புதைந்து விடுவீர்கள்”.
ஒரிஸ்டில்: “இது முட்டாள்தனம் நாங்கள் இங்கு தான் இருப்போம். ஆவிகள் எங்களை பாதுகாக்கும்”.
விக்டர்: “அவைகள் உதவி செய்யாது. ஒரே உயிருள்ள இறைவன் மட்டுமே உதவ முடியும். நீங்கள் அவரை நம்ப வேண்டும்”.
ஒரிஸ்டிஸ்: “நான் இதைக் கேட்க விரும்பவில்லை. என் வீட்டை விட்டு வெளியேறு!”
விக்டர் வெளியேறும் போது திருமதி.ஒரிஸ்டிலுக்கு தைரியம் கூறினார்.
விக்டர்: “திருமதி.ஒரிஸ்டில், பயப்படாதிருங்கள். இறைவன் உங்களுடன் இருக்கிறார்”.
விக்டர் வெளியேறும் போது, ஒரிஸ்டில் தனது வெட்டுக்கத்தியை கீழே வைத்து விட்டு கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறினான்.
டிபாம்: “அப்பா நிறுத்துங்கள். அப்படிச் செய்யாதீர்கள்!”
அடுத்த நாடகத்தில் இதன் தொடர்ச்சியை காண்போம்.
மக்கள்: உரையாளர், அம்மா, டிபாம், விக்டர், ஒரிஸ்டில்.
© Copyright: CEF Germany