Home -- Tamil -- Perform a PLAY -- 035 (Rendezvous in Jerusalem)
35. எருசலேமில் வழக்கமாக கூடும் இடம்
மக்கள் எல்லா இடங்களிலும் இருந்து வந்திருக்கிறார்கள். சிலர் வெளிநாடுகளில் இருந்து வந்தார்கள். அவர்கள் பெந்தெகொஸ்தே நாளைக் கொண்டாடும் படி எருசலேமில் கூடியிருந்தார்கள். தெருக்களில் ஆயிரக்கணக்கானோர். நடந்து சென்றார்கள். அந்த நாளில் ஆண்டவராகிய இயேசுவின் சீஷர்கள் விண்ணப்பம் பண்ணும்படி ஒரு வீட்டில் கூடியிருந்தார்கள். திடீரென்று அவர்கள் இடிமுழக்க சத்தத்தையும், பலத்த காற்று சத்தத்தையும் கேட்டார்கள். வெளியில் இருந்த மக்களும் அந்த சத்தத்தைக் கேட்டார்கள். அது என்னவாக இருக்கும்?
ஒரு காரியம் நிகழ்ந்தது. சீஷர்களின் தலைகளின் மேல் அக்கினிமயமான நாவுகள் தோன்றின. இந்த அற்புதத்தின் அர்த்தம் என்ன?
இந்த அற்புதமான அனுபவம் இயேசுவிடம் இருந்து வந்த அருட்கொடை ஆகும். அவர் தமது சீஷர்களுக்கு பரிசுத்த ஆவியைக் கொடுத்தார். அவர் தமது நண்பர்களை மறக்கவில்லை. பரிசுத்த ஆவியின் மூலமாக இயேசு தமது பிள்ளைகளுடன் இருக்கிறார். அவர் ஆறுதல் தருபவர், ஆலோசகர், உடனிருப்பவர். அவர் மூலமாக பரலோகில் இயேசுவுடன் அவர்கள் எப்போதும் இணைக்கப்படுகிறார்கள். வீட்டின் முன்பு மக்கள் ஆச்சரியப்பட்டு நின்றார்கள்.
மனிதர்கள்: “இதன் அர்த்தம் என்ன?”
மகிழ்ச்சி நிறைந்தவர்களாக சீஷர்கள் இயேசுவைக் குறித்து கூட்டத்தாரிடம் பேசினார்கள். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களும் அவர்கள் பேசியதைப் புரிந்து கொண்டார்கள். இயேசுவின் சீஷர்கள் பேசியதை தங்கள் சொந்த மொழியில் ஒவ்வொருவரும் கேட்டார்கள். அவர்கள் ஒரு போதும் கற்றிராத மொழிகளில் பேசினார்கள். இப்படி நிகழ்வதற்கு இயேசுவே காரணம்.
சிலர் பரியாசம் பண்ணினார்கள்:
பரியாசக்காரன்: “ஹா ஹா! நீங்கள் அனைவரும் அதிகாலையிலேயே குடித்து வெறுத்திருக்கிறீர்கள்!”
அப்போது பேதுரு எழுந்து நின்றான்.
பேதுரு: “இல்லை. நாங்கள் குடித்து, வெறித்திருக்கவில்லை. இறைவன் தமது வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுகிறார். தமது பரிசுத்த ஆவியை நமக்கு அனுப்பியிருக்கிறார்”.
அவன் தைரியமாக இயேசுவைக் குறித்துப் பிரசங்கித்தான். அவருடைய மரணம், உயிர்த்தெழுதல், பரமேறுதல் குறித்துப் பேசினான்.
மனிதன்: “இது பேதுருவா? சமீபத்தில் இயேசுவை மறுதலித்தவன் இவன் தானே?”
பெண்: “அது அவன் தான். அவனிடத்தில் கொஞ்சம் கூட பயம் இல்லை. அவன் முற்றிலும் மாறிவிட்டான்”.
பரிசுத்த ஆவியின் மூலமாக இறைவன் பேதுருவை தைரியமிக்க சாட்சியாக மாற்றினார். கூட்டத்தாரிடம் பேதுரு ஆவியானவர் தந்த வார்த்தைகளைப் பேசினான்.
மனிதன்: “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?”
பெண்: “நாங்கள் அநேக தவறான காரியங்களை செய்திருக்கிறோம்”.
பேதுரு: “ஆண்டவராகிய இயேசுவை விசுவாசியுங்கள். இறைவன் உங்களை மன்னிப்பார். நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறுவீர்கள்”.
3000 பேர் இப்படிச் செய்தார்கள். அவர்கள் இயேசுவை நோக்கி விண்ணப்பம் செய்து, இரட்சிப்பை அடைந்தார்கள். இந்த பெந்தெகொஸ்தே கொண்டாட்டத்திற்கு பின்பு, சீஷர்கள் புதிய மகிழ்ச்சியை அடைந்தார்கள்.
மக்கள்: உரையாளர், பரியாசக்காரன், பேதுரு, மனிதன், பெண்.
© Copyright: CEF Germany