Home -- Tamil -- Perform a PLAY -- 033 (Farewell from the mountain)
33. மலையில் ஓர் பிரியாவிடை நிகழ்வு
சிறுவன்: “ஆஹா! வியாழக்கிழமை பள்ளி செயல்படாது. ஏனெனில் அது விடுமுறை நாள்”.
சிறுமி: “என்ன விடுமுறை அது?”
சிறுவன்: “இயேசு பரமேறிய நாள்”.
சிறுமி: “அதன் அர்த்தம் என்ன?”
சிறுவன்: “எனக்கு முழுமையாகத் தெரியாது”.
நான் அதை உங்களுக்கு விளக்கிச் சொல்லட்டுமா?
சிறுவன்: “நிச்சயமாக, நாங்கள் அதை அறிய விரும்புகிறோம்”.
இயேசு பூமியில் தனது பணியை நிறைவேற்றி முடித்த பின்பு பரலோகிற்கு திரும்பிப் போனதை பரமேறிய நாள் நமக்கு நினைவுபடுத்துகிறது. அது ஈஸ்டர் நாளில் இருந்து, நாற்பது நாட்கள் கழித்து நிகழ்ந்தது. இந்த நாற்பது நாட்களில் இயேசு மீண்டும், மீண்டும் தனது சீஷர்களுக்கு காட்சியளித்தார். அவர்கள் அவரைக் கண்டார்கள், அவரைக் கேட்டார்கள். அவருடன் சாப்பிட்டார்கள். ஒரு நாளில் அவர் ஒரே சமயத்தில் 500 பேருக்கும் மேலானவர்களுக்கு தரிசனமானார்.
ஈஸ்டருக்குப் பின்பு நாற்பது நாட்கள் கழித்து ஒலிவ மலையை நோக்கி இயேசு தமது சீஷர்களை நடத்திச் சென்றார். அவர்களுடன் தனியாக இருக்க விரும்பினார். அவர் கடந்து செல்லும் முன்பு, முக்கியமான காரியங்களை அவர்களுக்கு கூற விரும்பினார்.
இயேசு: “நான் இறைவனுடைய பணியை நிறைவேற்றியுள்ளேன். நீங்கள் உலகமெங்கும் சென்று ஒவ்வொருவருக்கும், நான் அவர்களுக்காக மரித்து, உயிர்த்தெழுந்த நற்செய்தியைக் கூறுங்கள். அப்போது அவர்கள் என்னை ஆண்டவராக ஏற்றுக்கொள்வார்கள். ஒரு நாளில் என்னுடன் பரலோகில் இருப்பார்கள். நான் எப்பொழுதும் உங்களுடனே இருக்கிறேன். மற்றவர்களுக்கு என்னைக் குறித்துப் பேசுவதற்கான பெலனைத் தருவேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்”.
பின்பு இயேசு தமது கைகளை உயர்த்தி, சீஷர்களை ஆசீர்வதித்தார். அப்போது திடீரென அவர் மறைந்து போனார். அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்த போது, ஒரு மேகம் அவரை மறைத்தது. அவர் இறைவனின் காணமுடியாத உலகிற்கு சென்றார்.
சிறுவன்: “இயேசு இப்போது பரலோகில் என்ன செய்து கொண்டிருக்கிறார்?”
அவர் ஒவ்வொன்றையும் ஆளுகை செய்கிறார். நமது விண்ணப்பங்களுக்கு பதில் தருகிறார். நமக்காக இறைவனிடம் பரிந்து பேசுகிறார். அவரை விசுவாசிப்பவர்கள் அவருடன் இருக்கும்படியாக வாழும் இடத்தை ஆயத்தம் பண்ணுகிறார்.
சிறுமி: “நான் வேதாகமத்தில் வாசித்திருக்கிறேன். இதோ அந்த வசனம். இயேசு கூறினார்: என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு … நான் உங்களுக்காக ஒரு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணப் போகிறேன்”.
சிறுவன்: “இயேசு இனி அவர்களுடன் இருக்க மாட்டார் என்பதைக் குறித்து சீஷர்கள் கவலைப்படவில்லையா?”
இல்லை. ஏனெனில் அவர் ஒரு வாக்குத்தத்தம் கொடுத்திருந்தார்.
சிறுவன்: “என்ன வாக்குத்தத்தம்?”
அடுத்த நாடகத்தில் நாம் அதைக் காண்போம்.
மக்கள்: உரையாளர், சிறுவன், சிறுமி, இயேசு.
© Copyright: CEF Germany