Home -- Tamil? -- Perform a PLAY -- 137 (The destination indicator 5)
137. முடிவைக் காட்டும் அடையாளம் 5
சிறுமி: “வாழ்க்கைப் பள்ளி பகுதி 4. முடிவைக் காட்டும் அடையாளம்”.
(போக்குவரத்து சத்தங்கள்)
லீனா: “இப்போது எந்த வழி?”
கேத்தி: “இது முட்டாள் தனமானது. என்னுடைய வீட்டு அறிவிப்பு பலகையில் அந்த வழிகாட்டி வரைபடம் இருக்கின்றது”.
லீனா(ஏளனத்துடன்): “அருமை! இப்போது நாம் என்ன செய்யப் போகிறோம்?”
கேத்தி: “அஙகே அடையாளக் குறியீடுகள் காணப்படுகின்றன”.
அந்த சிறுமிகள் தங்கள் இடத்தை அடைந்தார்களா? அங்கே முடிவைக்காட்டும் அடையாளங்கள் இருந்தது நன்மையைக் கொண்டு வந்தது. போக்குவரத்திற்கு மட்டுமல்ல, நமது வாழ்விற்கும் தேவை. இறைவன் நமக்கு வழிகாட்டியைத் தந்திருக்கிறார் என்பது உனக்குத் தெரியுமா?
சிறுவன்: “அவர்கள் எப்படித் தோன்றுகிறார்கள்?”
அவர்களுக்கு கைகள், கால்கள், காதுகள் உள்ளது. பிலிப்புவைப் போல் உள்ளது. இந்த வழிகாட்டி இறைவனிடம் செல்லும் ஒரே வழியை அறிந்துள்ளார். அதைக் குறித்து விவரித்துச் சொல்லுவார். அநேகருக்கு இயேசுவிடம் செல்லும் வழியைக் காண்பித்துள்ளார்.
தூதன்: “பிலிப்பு, எருசலேமில் இருந்து காசாவிற்கு செல்லும் வழியில் தெற்கு நோக்கிப் போ”.
இறைவனுக்கு பிலிப்பு தேவைப்பட்டார். இறைவனுக்கு நீயும் தேவைப்படுகிறாய். வழியை அறிந்திருக்கும் மக்கள் அவருக்குத் தேவை. இயேசுவிடம் செல்லும் வழியைக் காட்டும் அடையாளமாக நீ இருப்பாயா?
பிலிப்புவிடம் இருந்து நீ நிறைய கற்றுக்கொள்ள முடியும். அவன் இப்படிச் சொல்லவில்லை: எனக்கு அது பிடிக்கவில்லை.
அவன் உடனடியாகக் கீழ்ப்படிந்தான். அந்த தூசி மிகுந்த சாலையில் அவன் தனியாக இல்லை. எத்தியோப்பிய ராணியின் நிதி மந்திரி ஒரு பெரிய இரதத்தில் போய்க் கொண்டிருந்தான். இவன் 120 மைல்கள் தூரம் பிரயாணம் செய்து எருசலேமுக்கு வந்திருந்தான். அங்கே தேவாலயத்தில் அதிக விலையுள்ள தோற்சுருளை தனக்காக வாங்கினான். பயணம் செய்யும் போது, அந்த தோற்சுருளில் இருந்து வேதவசனங்களை சத்தமாக வாசித்தான். பிலிப்பு இரதத்தை நோக்கி ஓடினான்.
பிலிப்பு: “நீ வாசிப்பதன் அர்த்தம் உனக்குப் புரிகின்றதா?”
எத்தியோப்பியன்: “இல்லை, இதை விளக்கிச் சொல்வதற்கு என்னிடத்தில் யாரும் இல்லை. என்னுடன் வந்து இரதத்தில் அமர்ந்து கொள். இதன் அர்த்தத்தை எனக்கு விளக்கிச் சொல்”.
பிலிப்பு: “நீ இயேசுவைக் குறித்து வாசிக்கிறாய். அவர் மட்டுமே இறைவனிடம் செல்லும் ஒரே வழியாக இருக்கிறார். அவர் மீது நம்பிக்கை வை. இந்த வாழ்விலும் வரப்போகின்ற வாழ்விலும் உன்னை அவர் வழிநடத்துவார்”.
எத்தியோப்பியன்: “இயேசு இறைவனுடைய குமாரன் என்று நான் விசுவாசிக்கிறேன்”.
முடிவைக் காட்டும் அடையாளமாக பிலிப்பு செயல்பட்டான். இயேசுவை அவனுக்குக் காண்பித்தான். எத்தியோப்பிய நிதிமந்திரி பிலிப்புவின் வழிநடத்துதலைப் பின்பற்றி நடந்தான்.
அவனுடைய இருதயம் சரியான பாதையைக் கண்டது. மகிழ்ச்சியுடன் அவன் தன்னுடைய வீட்டிற்குத் திரும்பிப்போனான். அவனுடைய கதையைக் குறித்து இவ்வளவு தான் நமக்குத் தெரியும்.
இறைவனுடைய ஒரே வழியை நீ அறிந்திருக்கிறாய் என்று நம்புகிறேன். இயேசுவைக் காண்பிக்கும் அடையாளமாக வீட்டில், பள்ளியில், நண்பர்கள் மத்தியில் இருக்க வேண்டும். நமது இந்திய நாட்டிலும் இயேசுவைக் காண்பிக்கும் அடையாளங்கள் அதிகம் தேவை. ஆசியாவின் பிறநாடுகளிலும், ஐரோப்பாவிலும், ஆப்பிரிக்காவிலும் தேவை. மில்லியக்கணக்கான மக்களுக்கு வழிகாட்டி இல்லை. இயேசுவே இறைவனிடம் செல்லும் ஒரே வழி என்பதை அவர்கள் கேள்விப்படவே இல்லை.
மக்கள்: உரையாளர், சிறுவன், சிறுமி(டிலீனா), கேத்தி, தூதன், பிலிப்பு, எத்தியோப்பியன்.
© Copyright: CEF Germany