STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Tamil? -- Perform a PLAY -- 136 (First aid 4) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- TAMIL -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாடகங்கள்
136. முதலுதவி 4(போக்குவரத்து சத்தங்கள்) சிறுமி: “வாழ்க்கைப் பள்ளி பகுதி 3 – முதலுதவி”. மருத்துவர்கள் அல்லது தாதிமார்கள் இல்லாத ஒரு மருத்துமனையை நீ எப்போதாவது பார்த்ததுண்டா? அப்படி ஒரு இடம் இருந்தது. அது ஒரு மருத்துமனையைப் போல தோற்றமளிக்கவில்லை. ஆனால் இரண்டு தனிக்குளங்கள் உடைய ஒரு நீச்சல் குளத்தைப் போல இருந்தது. நான்கு மண்டபங்கள் மற்றும் இரண்டு குளங்களைப் பிரிக்கக் கூடிய நடைபாதையுடன் அது காணப்பட்டது. அநேக வியாதியஸ்தர்கள் அங்கே படுத்திருந்தார்கள். மருத்துவர்கள் அவர்களுக்குச் சிகிச்சையளிக்கவில்லை. அங்கே முதலுதவி இல்லை. அவசர உதவிக்காக அங்கே ஆம்புலன்ஸ்(அவசர ஊர்தி) இல்லை. வியாதியஸ்தர்கள் அடிக்கடி அந்த தண்ணீரைப் பார்த்துக் கொண்டேயிருந்தார்கள். ஒருதூதன் எப்போதாவது அந்தத் தண்ணீரைக் கலக்குவான் என்று சொல்லப்பட்டிருந்தது. தண்ணீர் கலக்கப்படும்போது முதலாவது தண்ணீரில் இறங்குபவன் சுகமடைந்து விடுவான். அவர்கள் அனைவரும் குணமடைய விரும்பினார்கள். அங்கே ஒரு சப்பாணி மனிதன் இருந்தான். அவன் தண்ணீரில் இருந்து முதலுதவியைப் பெறலாம் என்று நம்பியிருந்தான். மனிதன்: “என்னால் தண்ணீரைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அங்கே நீர் அசைகின்றது! நான் முதலாவது தண்ணீரில் இறங்கிவிட வேண்டும். (தண்ணீர் சத்தம்) நான் மறுபடியும் தாமதித்துவிட்டேன். என்னால் இதை சரியாகச் செய்ய முடியவில்லையே”. சோர்வடைந்தவனாக, அவன் தனது படுக்கையில் மீண்டும் படுத்துக்கொண்டான். அவன் 38 ஆண்டுகளாக “முதலுதவி” பெறக் காத்துக்கொண்டிருந்தான். ஒரு நாள் அவனை ஒருவர் சந்தித்தார். இயேச: “நீ குணமடைய விரும்புகிறாயா?” மனிதன: “ஆமாம்! ஆனால் என்னைத் தண்ணீருக்குள் இறக்கிவிட யாரும் இல்லை. நான் இறங்கும் முன்பு, வேறொருவன் தண்ணீரில் இறங்கிவிடுகிறான்”. இயேசு: “எழுந்திரு, உனது படுக்கையை எடுத்துக்கொண்டு நட”. அந்த மனிதன் எழுந்து நின்றான். குணமடைந்தான். ஊசி அல்லது மருந்து இல்லாமல் முதலுதவி செய்யப்பட்டது. நிச்சயம் அடுத்து 38 ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்திருப்பான். மற்றவர்கள் அவனைப் பார்த்து சந்தோஷப்பட்டிருப்பார்கள். பரிசேயன்: “நீ செய்ததைக் குறித்து என்ன நினைக்கிறாய்? இன்று ஓய்வுநாள். இந்த ஓய்வு நாளில் உனது படுக்கையை சுமந்துகொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது”. மனிதன்: “என்னை குணமாக்கியவர் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று என்னிடம் சொன்னார்”. பரிசேயன்: “யார் அவன்?” மனிதன்: “எனக்குத் தெரியாது. நான் அவரை மறுபடியும் காணவில்லை”. அவர் யார் என்பது உனக்குத் தெரியுமா? அவர் ஆண்டவராகிய இயேசு. அவர் முதலுதவியை சிறப்பாகத் தருகிறார். நமது சரீரங்களுக்கு மட்டும் அல்ல, நமது ஆத்துமாக்களுக்குத் தருகிறார். அவர் உதவி செய்கிறார், மகிழ்ச்சியுடன் காப்பாற்றுகிறார். அவர் குணமான மனிதனிடம் மறுபடியும் பேசினார். அவனுக்கு நல்ல ஆலோசனையைக் கொடுத்தார். இயேசு: “நீ குணமடைந்து விட்டாய். உனக்கு அதிகக் கேடு எதுவும் வராதபடி, இனிப் பாவம் செய்யாதே!” இயேசு என்ன அர்த்தத்தில் கூறியிருப்பார் என்று நான் கற்பனை செய்து பார்க்கிறேன். உன்னாலும் அதை நினைத்துப் பார்க்க முடிகிறதா? மக்கள்: உரையாளர், மனிதன், இயேசு, பரிசேயன், சிறுமி. © Copyright: CEF Germany |