STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Tamil? -- Perform a PLAY -- 131 (The death penalty for God’s Son) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- TAMIL -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாடகங்கள்
131. இறைவனின் குமாரனுக்கு மரண தண்டனை தீர்ப்புநியாயதிபதி மரண ஆக்கினைத்தீர்ப்பு கொடுத்துவிட்டார். தண்டனை நிறைவேற்ற நேரம் வந்துவிட்டது. ஆண்டவராகிய இயேசு, அவருடைய எதிரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர்கள் அவர் மீது துப்பினார்கள். இறைவனின் குமாரனை கன்னத்தில் அறைந்தார்கள். வாரினால் அடித்தார்கள். இவைகள் தண்டனையை நமக்கு நினைவுபடுத்துகிறது. இயேசு தண்டனை அடைய வேண்டியவர் அல்ல. அவர் பாவம் எதுவும் செய்யவில்லை. இருந்தாலும், மிகவும் மோசமான முறையில் அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. இரத்தம் ஒழுகிக்கொண்டிருந்த முதுகில், அவர் பாரமான சிலுவையை சுமந்து கொண்டு எருசலேம் வீதிகளில் நடந்தார். நகரத்திற்கு வெளியே கொல்கதா என்ற இடம் இருந்தது. அவருடைய இடப்பக்கம் மற்றும் வலப்பக்கத்தில் குற்றவாளிகள் மத்தியில் கொடூரமான போர்ச் சேவகர்களால் சிலுவையில் அறையப்பட்டார். சிலுவையில் மரிப்பது ஒரு பயங்கரமான அனுபவம். இயேசுவிற்கு சரீர வேதனை, கடுமையான தாகம், மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவருக்கு திகில் ஏற்பட்டது. மேலும் அவருடைய எதிரிகள் அவரைப் பரியாசம் பண்ணினார்கள். பரியாசக்காரன்: “நீ உண்மையாகவே இறைவனுடைய குமாரன் என்றால், சிலுவையில் இருந்து இறங்கி வா”. போர்ச்சேவகன்: “நீ யூதரின் இராஜாவானால், உன்னை நீயே காப்பாற்றிக்கொள்”. இயேசு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பியிருந்தால், அவர் பரலோகத்திலிருந்து பூமிக்கு வர வேண்டிய அவசியமே இல்லை. அவர் நம்மை இரட்சிப்பதற்காகவே வந்தார். அவர் நம்மை நேசிக்கிறார். அவர் தனது எதிரிகளையும் நேசிக்கிறார். இயேசு: “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்கள் அறியாதிருக்கிறார்கள்”. மூன்று சிலுவைகளை நினைத்துப் பாருங்கள். வலதுபக்கத்திலும் இடதுபக்கத்திலும் குற்றவாளிகள் தொங்கிக்கொண்டிருக்க, இயேசு நடுவில் இருக்கிறார். இயேசு தனது கைகளை இந்த இரண்டு பாவிகளுக்கு நேராக நீட்டிக் கொண்டிருப்பதைப் போல் காட்சியளிக்கிறது அல்லவா? குற்றவாளி: (வெறுப்பின் தொனியுடன்) “நீர் தான் வாக்குப்பண்ணப்பட்ட இரட்சகர் அல்லவா? அப்படியென்றால் உன்னையும், எங்களையும் காப்பாற்று”. கொலைகாரன்: “அமைதியாய் இரு. நீ இறைவனை நிந்திக்கிறாயா? நாம் இந்தத் தண்டனைக்கு தகுதியானவர்கள். ஆனால் இவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை. ஆண்டவராகிய இயேசுவே, நீர் உமது ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்”. இயேசு: “நான் உனக்குச் சொல்லுகிறேன். இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசில் இருப்பாய்”. கொலைகாரன் தனது பாவத்தை ஒத்துக்கொண்டான். எனவே பரலோகத்த்தில் நுழையும் தகுதியை அவன் அடைந்தான். அவன் சரியானதைச் செய்தான். நாம் அனைவரும் குற்றவாளிகள். ஆனாலும் இயேசு மன்னிக்கிறார். அவருடைய கைகள் எப்போதும் பாவிகளை நோக்கி நீட்டப்பட்டிருக்கின்றன. மூன்று சிலுவைகளை மறுபடியும் எண்ணிப்பாருங்கள். வலப்பக்கம் மற்றும் இடப்பக்கத்தில் குற்றவாளிகள், இயேசு நடுவில் இருக்கிறார். ஒருவன் இயேசுவை நம்பினான். மற்றவன் அவரை பரியாசம்பண்ணினான். ஒருவன் இரட்சிக்கப்பட்டான். மற்றவன் இரட்சிப்பை இழந்தான். நீ எந்தப் பக்கம் இருக்கின்றாய்? இயேசு தனது கைகளை உனக்கு நேராக நீட்டிக் கொண்டிருக்கிறார். அவருடைய அன்பு உனது பாவத்தை விடப் பெரியது. மக்கள்: உரையாளர், பரியாசக்காரன், போர்ச்சேவகன், இயேசு, கொலைகாரன், குற்றவாளி. © Copyright: CEF Germany |