STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Tamil -- Perform a PLAY -- 018 (Breakfast per airmail 3) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- TAMIL -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாடகங்கள்
18. ஆகாய மார்க்கமாக காலை உணவு 3இராஜாவின் அரண்மனையை விட்டு விரைவாக எலியா வெளியேறினான். ஒரு காரியம் தெளிவாக இருந்தது. இறைவனற்ற இராஜா தனது அதிகார வல்லமையால் எலியாவைக் கொல்லும்படி அவன் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கவில்லை. இறைவன் உண்மையுள்ளவர் என்பதை அறிந்திருந்ததால், அவன் பயப்படவில்லை. இறைவன் தீர்க்கதரிசி மூலம் தெளிவாகப் பேசினார். இறைவன்: “எலியா, இங்கிருந்து போ. கிழக்குப் பக்கம் சென்று கேரீத் ஆற்றண்டையில் ஒளிந்து கொள். அங்கே ஓடையின் நீரைக் குடிப்பாய். தேவையான உணவை நான் உனக்கு தருவேன்”. இறைவன் அதை எப்படி செய்தார் என்பது உனக்குத் தெரியுமா? அவர் காகங்களை அனுப்பி எலியாவிற்கு இறைச்சியும், ரொட்டியும் கிடைக்கச் செய்தார். இந்த அற்புதமான காரியம் உண்மையில் நிகழ்ந்தது. இறைவன் எலியாவிற்கு காலை உணவையும், இரவு உணவையும் “ஆகாய மார்க்கம்” மூலம் அனுப்பினார். இறைவன் உண்மையுள்ளவர். தனது ஊழியக்காரனின் ஒவ்வொரு தேவையையும் அவர் சந்திக்கிறார். அவனுக்கு மறைவிடம், உணவு மற்றும் தண்ணீரைக் கொடுத்தார். அச்சமயம் மக்கள் கடினமான சூழ்நிலைகளில் இருந்தார்கள். அங்கே மழை இல்லை. அறுவடை இல்லை. உண்பதற்கு உணவு இல்லை. பின்பு கேரீத் ஆறும் வறண்டு போனது. அப்போது சாறிபாத்துக்கு போகும்படியான வழியை இறைவன் எலியாவிற்கு காண்பித்தார். அந்த ஊருக்குள் நுழையும் போது அவன் ஒரு பெண்ணிடம் கேட்டான். எலியா: “எனக்கு குடிக்க நீரும், அப்பமும் தா”. அவள் துக்க முகத்துடன் அவனைப் பார்த்து, தழுதழுத்த குரலில் சொன்னாள். பெண்: “என்னிடத்தில் ஒன்றுமில்லை. எனது பாத்திரத்தில் ஒரு கை மாவும், கொஞ்சம் எண்ணெயும் உள்ளது. அதை எனது மகனுக்கும், எனக்கும் அடை செய்து, சாப்பிட்டப் பின்பு நாங்கள் சாக வேண்டும்”. எலிய: “பயப்படாதே, இறைவன் என்னை உன்னிடம் அனுப்பினார். உன் பஞ்சகாலம் முடியும் வரை பானையில் மாவும் குறைந்து போகாது. பாத்திரத்தில் எண்ணெய் நிரம்பியிருக்கும்”. இறைவன் உண்மையுள்ளவர்! அவர் வாக்குப்பண்ணியவை நிச்சயம் நிறைவேறும். தினந்தோறும் சாப்பிட்டார்கள். எலியா தீர்க்கதரிசி, அந்தப் பெண், அவளுடைய மகன் போதுமான உணவைப் பெற்றார்கள். இது எவ்வளவு அற்புதமான காரியம்! இறைவன் உண்மையுள்ளவர்! நீ எப்போதும் அவரை சார்ந்திருக்க வேண்டும்! மக்கள்: உரையாளர், இறைவன், எலியா, பெண். © Copyright: CEF Germany |