STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Tamil -- Perform a PLAY -- 013 (Gifts for Jesus) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malagasy -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Sindhi -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- TAMIL -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாடகங்கள்
13. இயேசுவிற்கு பரிசுகள்தாமஸ் என்பவன் தனது தாத்தா உருவாக்கிய கலைப் பொருட்களை கவனித்துப் பார்த்தான். அவைகள் தத்ரூபமாக இருந்தன. மேய்ப்பர்கள், யோசேப்பு, மரியாள், குழந்தை இயேசு. பின்பு அவன் களைப்புற்றவனாய் தூங்கச் சென்றான். அவன் பெத்லகேமில் உள்ள முன்னணை குறித்து கனவு கண்டான். அவன் அதை நெருங்கிச் சேர்வதைப் போல் உணர்ந்தான். அவன் மிக அருகில் வந்த போது, திடீரென்று கவலை அவனை ஆட்கொண்டது. அப்போது இயேசு அவனிடம் பேசினார். இயேசு: “நீ ஏன் கவலையுடன் இருக்கிறாய்?” தாமஸ்: “ஏனெனில் நான் பரிசுகள் எதையும் கொண்டு வரவில்லை”. இயேசு: “கவலைப்படாதே. நான் உன்னிடம் மூன்று காரியங்களை மட்டும் விரும்புகிறேன்”. தாமஸ்: “நான் வைத்திருக்கும் எல்லாவற்றையும் உமக்குக் கொடுப்பேன். எனது எலக்ட்ரிக் டிரெய்ன், எனது கம்ப்யூட்டர் கேம்ஸ், …” இயேசு: “அவைகளெல்லாம் வேண்டாம். அதற்காக நான் பரலோகில் இருந்து இந்த பூமிக்கு வரவில்லை”. தாமஸ்: “பிறகு எதற்கு?” இயேசு: “உனது கடைசி கணிதத் தேர்வு மதிப்பெண்ணை எனக்குத் தா!” தாமஸ: “நான் மிகக் குறைவான மார்க் எடுத்துள்ளேன்”. இயேசு: “எனவே தான் நான் அதைக் கேட்கிறேன். உனது வாழ்வில் குறைவானதை எனக்குத் தருவாயா?” தாமஸ்: “நிச்சயம் தருவேன்”. இயேசு: “நான் விரும்பும் இரண்டாவது பரிசு, உன்னுடைய கண்ணாடிக் கிண்ணம்”. தாமஸ்: “என்னால் தர இயலாது. நான் அதை உடைத்துவிட்டேன்”. இயேசு: “எனவே தான் அதை நான் கேட்கிறேன். உனது வாழ்வில் உடைந்த ஒவ்வொன்றையும் என்னிடம் கொண்டுவா? நீ அப்படிச் செய்வாயா?” தாமஸ்: “நிச்சயம், செய்வேன்”. இயேசு: “இப்போது எனது மூன்றாவது விருப்பம். தாமஸ்! எப்படி அந்த கண்ணாடிக் கிண்ணம் உடைந்தது என்று அம்மா உன்னிடம் கேட்ட போது நீ சொன்ன பதில் என்ன?” இப்போது தாமஸ் அழுகிறான். அவனுடைய உள்ளம் உடைந்தது. தாமஸ்: “நான் … நான் அம்மாவிடம் பொய் சொல்லிவிட்டேன்”. இயேசு: “தாமஸ்! உனது பொய்கள், உனது தோல்வி, உனது வாழ்வின் ஒவ்வொரு மோசமான காரியத்தையும் என்னிடம் கொண்டு வா. உனது முழுவாழ்வையும் தா, நான் உன்னை மன்னிப்பேன். நீ சரியான வழியில் வாழ உதவுவேன். நான் எப்போதும் உன்னிடம் இருப்பேன். உனக்கு வாழ்வின் வழியைக் காண்பிப்பேன். நீ இதை விரும்புகிறாயா?” தாமஸ் இதை விரும்பினான். அவன் இயேசுவை விசுவாசித்தான் அவருடைய வார்த்தையைக் கவனித்துக் கேட்டான். மக்கள்: உரையாளர், தாமஸ், இயேசுவின் சத்தம். © Copyright: CEF Germany |