Home -- Tamil? -- Perform a PLAY -- 150 (Very brave 2)
150. தைரிய சாலி 2
அது தைரியமான ஒரு செயல். மந்திரவாதியின் பானத்தை இனாம் குடிக்க விரும்பவில்லை. எனவே தான் அவள் ஜன்னல் வழியே, அதை வெளியே ஊற்றிவிட்டாள்.
இனாம்: “நான் உம்மை நம்புகிறேன். ஆண்டவராகிய இயேசுவே, என்னை குணமாக்கும்”.
அந்த இந்தோனேஷிய சிறுமி சுகம் பெற்றாள்.
அவள் சுகமடைந்தவுடன் முதலாவது காட்டில் உள்ள சிறிய சபையின் ஆராதனைக்கு சென்றாள்.
(பின்னணி இசை)
அவள் மற்றவர்களுடன் இணைந்து மகிழ்ச்சியுடன் அருமையான பாடல்களைப் பாடினாள். பின்பு அவள் தனது விண்ணப்பத்தை இயேசு கேட்டு சுகம் தந்ததைக் குறித்துச் சொன்னாள்.
பெண்: “உன்னை சுகமாக்கியது யார் என்று உன் அம்மா நினைக்கிறாள்?”
இனாம்: “எனக்கு ஏதோ ஒரு பானத்தைக் குடிக்கக் கொடுத்த மந்திரவாதி தான் என்னை சுகமாக்கினான் என்று அம்மா நினைக்கிறாள்”.
பெண்: “நீ அவளிடம் உண்மையைச் சொல்லப் போகிறாயா?”
இனாம் வீட்டிற்குத் திரும்பிச் சென்ற போது, இதைக் குறித்து நினைத்துப் பார்த்தாள். இயேசுவின் மீது விசுவாசம் வைத்திருப்பதால், அவள் அடிக்கடி அடிகளை வாங்கினாள்.
அடுத்த நாள் அவளுடைய அம்மா சமையலறையில் வேலைபார்த்துக் கொண்டிருக்கும் போது இனாம் சென்றாள்.
இனாம்: “அம்மா, மந்திரவாதி மருத்துவரின் பானம் தான் என்னை சுகமாக்கியது என்று நீ எண்ணலாம். ஆனால் அது உண்மை அல்ல. நான் ஜன்னல் வழியே அந்த பானத்தை வெளியே ஊற்றிவிட்டேன். இயேசு என்னை சுகமாக்கினார்”.
அம்மா: “அப்படியா? அப்படியென்றால் நீ எங்களை ஏமாற்றிவிட்டாய்”.
அவர்கள் இப்படி கடினமாக எதுவும் பேசவில்லை. மாறாக அவளுடைய பெற்றோர்கள் தைரியமிக்க இனாமைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். இவ்வளவு அடிகள் வாங்கியும் இயேசுவை விசுவாசித்த இனாமைக் கண்டு வியந்தார்கள்.
அவளது அம்மா சூரியனை கவனித்துக் கொண்டிருந்தாள்.
அம்மா: “இனாம். இப்போது சபைக்குச் செல்லும் நேரம்”.
இனாம் அவளது அம்மாவை கட்டி அணைத்துக்கொண்டாள்.
முதல் முறையாக தனது பெற்றோர்களின் அனுமதியுடன் அவள் ஆராதனைக்குச் சென்றாள். பிறகு அவளது பெற்றோர்களும் அவளுடன் இணைந்து சென்றார்கள். தனது அப்பாவுக்கும், அம்மாவுக்கும் நடுவே அமர்ந்திருந்தது. அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. அவர்கள் இயேசுவைக் குறித்த கதைகளைக் கேட்டார்கள்.
அந்த சிறிய சபையில் கேட்டதைக் குறித்து அவளது பெற்றோர்கள் அதிகமாக சிந்திக்க ஆரம்பித்தார்கள். இயேசுவின் மீது விசுவாசம் வைக்கும் இந்த மார்க்கத்துடன், அவர்கள் தங்கள் மதத்தை ஒப்பிட்டுப் பார்த்தார்கள். இயேசுவின் மீதான விசுவாசத்தில் இனாம் நிலைத்திருந்தது, அவள் அடிகள் வாங்கிய போதும் தொடர்ந்து விசுவாசத்துடன் இருந்ததைக் குறித்து சிந்தித்துப் பார்த்தார்கள். ஒரு நாள் அவளுடைய பெற்றோர்களும் இயேசுவை பின்பற்ற தீர்மானித்தார்கள். இயேசு உயிருடன் இருக்கிறார் என்பதை இனாமின் வாழ்வு நிரூபித்தது. அநேக அடிகள் மத்தியிலும் அவள் இயேசுவின் மீதான விசுவாசத்தில் நிலைத்திருந்தாள். இயேசுவை இன்னும் அதிகமதிகமாக நேசித்தாள்.
மக்கள்: உரையாளர், பெண், இனாம், அம்மா.
© Copyright: CEF Germany