Home -- Tamil? -- Perform a PLAY -- 151 (Donkey heads are expensive 1)
151. கழுதையின் தலைகளுக்கு அதிக விலை 1
மலையின் மேல் பாதுகாப்பாக உள்ள சமாரியா பட்டணத்தை உன்னால் வரையமுடியுமா? இஸ்ரேல் நாடு பிரிக்கப்பட்ட போது, இதுதான் வட பகுதியின் தலைநகரமாக இருந்தது. இந்த குறிப்பிட்ட பட்டணத்தை எதிரிகள் ஒன்றும் செய்ய முடியவில்லை.
சீரியர்கள் இதைக் கைப்பற்ற நினைத்தார்கள். ஆனால் இதை ஆயுதங்களினால் கைப்பற்றவில்லை. அவர்கள் பட்டணத்தை முற்றுகையிட்டார்கள். பட்டணத்தைச் சுற்றிலும் அவர்கள் கூடாரம் போட்டு பதிவிருந்தார்கள். பட்டணத்து வாசல்களை கண்காணித்துக் கொண்டே இருந்தார்கள். அது முதற்கொண்டு பட்டணத்து மக்கள் அனைவரும் கெட்ட செய்திகளை மட்டுமே கேட்டார்கள். உணவின் அளவு குறைந்தது. எல்லாம் விற்று தீர்ந்தது, கழுதையின் தலை, மிகவும் மலிவான பொருள் 10,000 ரூபாய்க்கு விற்றது. பிள்ளைகள் பட்டினியால் அழுதார்கள். தெருக்களில் உணவிற்காக அழுதார்கள்.
தேசம் அதன் முடிவை நெருங்கிக்கொண்டிருந்தது. ராஜாவுக்கும் முடிவு நெருங்கியது. அவன் எலிசாவைக் குற்றம்சாட்டினான். இறைவனின் செய்தியாளரைக் கொல்ல தீர்மானித்தான். அவனுடைய அரண்மனை அலுவலரும் அவனுடன் இணைந்து வந்தான். அவர்கள் வருவதை எலிசா கண்டான்.
எலிசா: “ராஜாவே, இறைவன் கூறுவதைக் கவனி! நாளை உண்பதற்கு உணவு கிடைக்கும் என்று இறைவன் வாக்குப்பண்ணுகிறார். அது மலிவான விலையில் கிடைக்கும்!”
அரண்மனை அலுவலர் கிண்டலாகப் பதிலளித்தான்.
அதிகாரி: “முடியாது! இறைவன் வானத்தில் ஜன்னலைத் திறந்து நமக்காக உணவைப் போடுவார் என்று நீ நினைக்கிறாயா?”
எலிசா: “நீ அதைக் காண்பாய். ஆனால் அதை நீ சாப்பிடமாட்டாய். இதுதான் உனக்குத் தண்டனை!”
இது இறைவனிடம் இருந்து வந்த நல்லசெய்தி ஆனால் ஒருவரும் அதை நம்பவில்லை. தேவை மிக அதிகமாக இருந்தது. பட்டணத்து வாசலின் வெளியே அமர்ந்திருந்த நான்கு மனிதர்களுக்கு இது நல்ல செய்தியாக இருந்தது. அவர்கள் சாக்கு உடை அணிந்திருந்தார்கள். அவர்கள் பாதிப்பட்டினியுடன் இருந்தார்கள். அவர்கள் தொழுநோயாளிகள். இந்தக் கொடிய தோல் வியாதியினால், அவர்கள் வெளியே துரத்தப்பட்டிருந்தார்கள்.
அவர்களின் மரணத்தைக் குறித்த கெட்ட செய்தியை அந்தப் பட்டணத்தார் விரைவில் கேட்கப் போகிறார்களா?
நம்பிக்கையின்றி, பயத்துடன் அவர்கள் தூரத்தில் நின்றார்கள். திடீரென்று அவர்களில் ஒருவன் பேச ஆரம்பித்தான்.
தொழுநோயாளி: “எப்படியாயினும் மரணம் நம்மை ஆட்கொள்ளும். நாம் இங்கேயே இருந்தாலும் சாவோம். பட்டணத்திற்குள் போனாலும் சாவோம். நாம் எதிரிகளிடம் சென்றால் … ஒரு வேளை நம்மை உயிருடன் விடலாம். அவர்கள் நம்மைக் கொன்றாலும் பரவாயில்லை. நாம் அங்கே சாவோம்”.
நம்பிக்கையின் ஒரு பொறி அவர்கள் இருதயங்களில் ஏற்பட்டது.
சூரியன் மறைந்த பின்பு, அவர்கள் எதிரிகளின் பாளயத்திற்குள் நுழைந்தார்கள்.
மிகவும் பரபரப்பாக அவர்கள் இருந்தார்கள்!
அவர்கள் முதல் கூடாரத்தை அடைந்தார்கள்.
கவனமாயிரு! அமைதியாயிரு! அடுத்து என்ன நிகழ்ந்தது என்பதை அடுத்த நாடகத்தில் நான் உங்களுக்குச் சொல்வேன்.
மக்கள்: உரையாளர், எலிசா, தொழுநோயாளி, அதிகாரி.
© Copyright: CEF Germany