Home -- Tamil? -- Perform a PLAY -- 135 (The schedule 3)
135. பயணத் திட்டம் 3
(போக்குவரத்து சத்தங்கள்)
சிறுவன்: “வாழ்க்கைப்பள்ளி பகுதி 2: பயணச்சீட்டு”.
(வெற்றி எக்காளத்தின் சத்தம்)
வெற்றி கொண்டாடப்பட்டது. ஆயுதங்கள் இல்லை. ஆனால் அவர்கள் எக்காளம் ஊதிய போது, நகரத்தின் அலங்கச் சுவரை இறைவன் இடிந்த விழும்படி செய்தார்.
இறைவன் அவர்கள் பக்கம் இருந்ததால், இஸ்ரவேலர் விரைவில் முழு தேசத்தையும் சுதந்தரித்துக் கொள்வார்கள். வெற்றியாளர்கள் கொண்டாடினார்கள். ஆனால் ஒரு மனிதன் இரகசியமாக தனது கூடாரத்தில் பதுங்கியிருந்தான். போக்குவரத்து விதியை மீறுபவரைப் போல, அவன் இறைவனுடைய “திருடாதே” என்ற அடையாளக் குறியீட்டிற்கு எதிராக துணிகரமாகச் செயல்பட்டான்.
இறைவன் கூறினார்: “பயப்படாதே! நகரம் உங்களுடையது. ஆனால் என்னுடைய கட்டளையைக் கடைபிடியுங்கள். ஒருவனும் கொள்ளைப் பொருளில் இருந்து, தனக்கென்று எதையும் எடுத்து வைத்துக்கொள்ள கூடாது”.
இறைவன் ஒரு காரியத்தை கட்டளையிடுகிறார் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கும் ஆனால் ஆகான் இதை பொருட்படுத்தவில்லை.
ஆகான்: “எரிகோவின் இடிபாடுகளுக்கு அடியில் நான் காண்பது என்ன? அற்புதமான பாபிலோனிய சால்வை! தங்கம்! வெள்ளி! இதை இப்படியே விட்டுவிட்டு என்னால் போக இயலாது. நான் எடுத்து வைப்பதை ஒருவரும் பார்க்கவில்லை”.
அவனுடைய செயல்களை எந்த ஒரு ரேடார் கருவியும் பதிவு செய்யவில்லை. ஆனால் இறைவனுடைய “வீடியோ காமிரா” அனைத்தையும் கண்டது. ஆகானுடைய கூடாரம் வரைக்கும் இறைவனுடைய கண்கள் தொடர்ந்து பார்த்தது. அங்கு அவன் திருடியவைகளை புதைத்து வைத்தான்.
அடுத்த பட்டணத்தை அவர்கள் பிடிக்கச் செல்ல வேண்டும். ஒற்றர்கள் நல்ல செய்தியைக் கொண்டு வந்தார்கள்.
ஒற்றன்: “யோசுவா, ஆயி ஒரு சிறிய பட்டிணம். 3000 வீரர்கள் சென்றால் அதை எளிதாகப் பிடித்துவிடலாம்”.
ஆனால் அவர்கள் தோற்றுப் போய் வந்தார்கள். 36 மனிதர்கள் யுத்தத்தின் போது இறந்தார்கள். யோசுவா இறைவனை நோக்கி கதறினான்.
யோசுவா: “ஆண்டவரே, இது ஏன் நிகழ்ந்தது? நீர் ஏன் எங்களுக்கு உதவவில்லை?”
இறைவன் அவனுடைய கேள்விக்குப் பதில் அளித்தார்.
இறைவன்: “நீங்கள் பாவம் செய்திருக்கிறீர்கள். ஒருவன் திருடியிருக்கிறான். அதை சரி செய்யுங்கள். அப்போது நான் உங்களுக்கு உதவி செய்வேன்”.
பின்பு எல்லாக் காரியங்களுக்கும் வெளியரங்கமாயின. ஆகான் திருடியதை ஒத்துக்கொண்டான். ஒரு மனிதன் பாவம் செய்தான். மற்றவர்கள் துன்பப்பட்டார்கள். ஒருவன் சிவப்பு விளக்கு எரிந்தும், அதை மீறிச் செல்லும்போது, சிலர் மீது மோதி, அவர்களைக் கொன்று விடுகிறான்.
போக்குவரத்து விதியை மீறுபவர்கள் அபராதத் தொகையை செலுத்த வேண்டும். ஆனால் நாம் இறைவனுக்கு பணம் கொடுக்க முடியாது. அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியாதவர்களுக்கு நீதியுள்ள இறைவன் மரணதண்டனைத் தீர்ப்பைக் கொடுக்கிறார். துன்பத்தின் பள்ளத்தாக்கு என்ற இடத்தில் ஆகான் கற்களால் எறியப்பட்டு கொல்லப்பட்டான்.
இப்போது நன்றாகக் கவனி, நீதியுள்ள இறைவன் அன்புள்ள இறைவனாகவும் இருக்கிறார். நானும், நீங்களும் அடைய வேண்டிய தண்டனையை இயேசு சிலுவையில் மரித்தபோது அடைந்துவிட்டார். உனக்காக மரித்து உயிர்த்தெழுந்த இயேசுவை நீ விசுவாசிக்கும் போது, இறைவன் உனது “பயணச்சீட்டை” தருகிறார்.
மக்கள்: உரையாளர், சிறுவன், இறைவனின் சத்தம், ஆகான், ஒற்றன், யோசுவா.
© Copyright: CEF Germany