Home -- Tamil? -- Perform a PLAY -- 109 (Who is the thief)
109. யார் திருடன்
ஸ்மித் குடும்பத்தினர் மதிய உணவு உட்கொண்டார்கள். அப்போது தான் லிசாவும், பெலிக்ஸீம் பள்ளியை விட்டு வந்திருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் பேசுவதற்கு நிறைய காரியங்கள் இருந்தன. ஆனால் அன்று அவர்களின் அம்மா மிகவும் கோபத்துடன் இருந்தாள். அவள் திடீரென்று ஒரு கேள்வியைக் கேட்டாள்.
அம்மா: “நேற்று காலை எனது பையில் 25 டாலர் பணம் வைத்திருந்தேன். இன்று பலசரக்கு கடையில் பணம் செலுத்தப் பார்த்த போது, பையில் பணம் இல்லை. நீங்கள் யாராவது அதை எடுத்தீர்களா? பெலிக்ஸ்? அல்லது லிசா நீ எடுத்தாயா?”
பெலிக்ஸ: “அம்மா, நாங்கள் திருடர்கள் அல்ல!”
லிசா: “உங்களுடைய பணத்தை நாங்கள் எடுக்கவில்லை”.
அம்மா: “என்னுடைய பணம் எப்படி மாயமாய் போனது என்று நான் ஆச்சரியப்படுகிறேன்”.
அவர்கள் உணவு மேஜையை சுத்தம் செய்தார்கள். பெலிக்ஸீம், லிசாவும் தங்களது வீட்டுப்பாடத்தை செய்யப் போனார்கள். ஆனால் லிசாவின் மனச்சாட்சி உறுத்தியது. அவள் சரீரமும் பெலவீனப்பட்டது. ஏனெனில் அம்மாவின் பையில் இருந்து பணத்தை அவள் தான் எடுத்திருந்தாள்.
லிசா: “ஏன் புதிய காதணிகள் வாங்குவதற்கு அம்மா பணம் தரவில்லை? தந்திருந்தால் நான் திருடியிருக்க மாட்டேன். உண்மையில் நான் திருடவில்லை. கடனாக வாங்கியிருக்கிறேன். ஒரு நாளில் நான் அதை திருப்பிக் கொடுத்து விடுவேன்”.
இந்த சிந்தனைகள் எல்லாம் அவளது மனச்சாட்சியை அமைதிப்படுத்தவில்லை. சமீபத்தில் குடும்ப ஜெபத்தில் சிறுவர்களின் நேரத்தின் போது, திருடுதலைக் குறித்து அவர்கள் பேசியிருந்தார்கள். திருடுவது ஒரு பாவம் என்று வேதாகமம் கூறுகின்றது. பாவமானது சுவரைப் போல உள்ளது. அது பிரிக்கின்றது. லிசா இதைத் தெளிவாக உணர்ந்தாள். அவள் பணத்தை எடுத்த நேரத்தில் இருந்து, அவளுக்கும், அவளுடைய அம்மாவிற்கும் இடையே ஓர் பிரிவினைச் சுவர் நின்றது. மேலும் அது அவளுக்கும், இயேசுவிற்கும் இடையிலும் நின்றது.
இதற்கு மேல் எந்த சாக்குப்போக்கையும் லிசாவால் சொல்ல முடியவில்லை. மதிய உணவின் போது அவள் பொய் கூறியது, நிலைமையை இன்னும் மோசமாக்கியது. அந்த நாள் முழுவதும் அவளுடைய இருதயத்தில் மகிழ்ச்சி இல்லை. அவள் தனது படுக்கையின் கீழ் மறைத்து வைத்திருந்த காதணிகளைக் குறித்தும் சந்தோஷப்பட முடியவில்லை. அன்று இரவு படுக்கைக்குச் சென்ற போது, அவள் அழ ஆரம்பித்தாள்.
அம்மா: “லிசா! என்ன நடந்தது?”
லிசா: “உங்கள் பணத்தை திருடியது நான் தான். இனிமேல் நீங்கள் என்னை நேசிக்க மாட்டீர்கள்”.
அம்மா: “நீ செய்தது தவறான காரியம். ஆனால் நீ அதை மறைக்காமல் என்னிடம் கூறியது நல்ல காரியம். நான் உன்னை மன்னிக்கிறேன். உனக்குரிய பணத்திலிருந்து அந்த 25 டாலர் பணத்தை திரும்பக் கொடுத்துவிடு. இயேசுவும் உன்னை மன்னிக்கும்படி அவரிடம் கேட்பாயா?”
லிசா: “ஆமாம். ஆண்டவராகிய இயேசுவே! நான் பணத்தைத் திருடியதற்காக மனம் வருந்துகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள். நீர் என்னை நேசிப்பதற்கு நன்றி!”
லிசாவின் தோள்களில் இருந்து மிகப்பெரிய சுமை இறங்கியது. அவள் மீண்டும் சந்தோஷம் அடைந்தாள். மேலும் அம்மாவும், ஆண்டவராகிய இயேசுவும் அவளை தொடர்ந்து நேசித்தார்கள்.
மக்கள்: உரையாளர், அம்மா, லிசா, பெலிக்ஸ்.
© Copyright: CEF Germany