Home -- Tamil? -- Perform a PLAY -- 105 (The sign on the door 5)
105. கதவில் ஒரு அடையாளம் 5
அன்று காலையில் வீட்டின் முன்பு வேன் நின்றது.
சிறுவன்: “அம்மா! அவர்கள் வருகிறார்கள்”.
அம்மா: “உனது பறவைக் கூண்டை கொண்டு வா!”
சிறுவன்: “ஓ! உங்களுக்கு சத்தம் கேட்கிறதா? நாங்கள் வீட்டைக் காலி செய்கிறோம். (பறவைகளின் சத்தம்) உங்களுக்கு சந்தோஷமா? எனக்கு மிகவும் சந்தோஷம்”.
பெரியவர்களுக்கு பல்வேறு வேலைகளினால் ஏற்பட்ட மன அழுத்தம் காணப்பட்டது.
அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகவும் எகிப்தைவிட்டு வெளியேறவும் விரும்பினார்கள். ஆனால் பார்வோன் அவர்களைப் போகவிடவில்லை. அவர்களை கடினமாக நடத்தினான். அவர்கள் கடினமாக உழைத்தார்கள். தங்கள் கஷ்டத்தின் மத்தியில் இரவும் பகலும் இறைவனை நோக்கி அவர்கள் கூக்குரலிட்டார்கள். இறைவன் அநேக அற்புதங்களைச் செய்தார். ஆனாலும் பார்வோன் இருதயத்தை கடினப்படுத்தினான். இறைவன் மோசேயிடம் மீண்டும் பேசினார்.
இறைவன்: “மோசே! பார்வோனிடம் போ. இன்று நான் எகிப்து தேசம் முழுவதிலும் கடந்து வருவேன். ஒவ்வொரு குடும்பத்திலும் மூத்த மகன் சாவான்”.
ஒரு இஸ்ரேலிய சிறுவன் தனது தகப்பன் ஒரு ஆட்டுக்குட்டியை வெட்டுவதை மாலை நேரத்தில் கவனித்துப் பார்த்தான்.
யோசுவா: “அப்பா, ஏன் இந்த ஆட்டுக்குட்டி சாக வேண்டும்?”
அப்பா: “யோசுவா! அப்போது தான் நீ வாழ முடியும். இறைவன் இதைச் சொல்லியிருக்கிறார்”.
அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, வாசலின் நிலைக்கால்களின் இடதுபக்கம், வலதுபக்கம், மேற்புரத்தில் அப்பா பூசினார்.
அப்பா: “இந்த இரத்தம் ஓர் அடையாளமாக உள்ளது. இன்று இரவு இறைவன் நம் வீட்டைக் கடந்து செல்வார். அவர் இரத்தத்தைக் காணும்போது, நம்மை பாதுகாப்பார்”.
யோசுவா: “அந்த ஆட்டுக்குட்டி பாவம்! ஆனாலும் அது எனது உயிரைப் பாதுகாக்கிறது”.
ஒவ்வொரு இஸ்ரவேல் குடும்பத்தாரும் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை வாசல்களின் நிலைக்கால்களில் பூசினார்கள்.
அப்பா: “யோசுவா! உள்ளே வா. இருட்டிவிட்டது. ஆடைகளை உடுத்திக்கொள். நாம் ஆயத்தமாக வேண்டும்”.
அவர்கள் நின்றுகொண்டே சாப்பிட்டார்கள். அன்று நடுஇரவில் மிகப்பெரிய சத்தத்தையும், அழுகுரலையும் கேட்டார்கள். ஒவ்வொரு எகிப்திய குடும்பத்திலும் மூத்த மகன் இறந்தான்.
பார்வோன்: “சீக்கிரமாக எகிப்தை விட்டுச் செல்லுங்கள். உங்களுக்கு உரிய அனைத்தையும் எடுத்துச்செல்லுங்கள். சீக்கிரம் செல்லுங்கள்!”
அன்று இரவு மில்லியன் கணக்கான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எகிப்தை விட்டு வெளியேறினார்கள். யோசுவா உயிருடன் இருந்தான். அவனது அப்பா அவனை அணைத்துக் கொண்டார். வாசல் நிலைகளில் இருந்த அடையாளம் அவர்களைப் பாதுகாத்தது. அவர்களது உயிரை காப்பாற்றியது.
இறைவன் பாதுகாக்க விரும்புகிறார். அவர் மரணத்தை அல்ல, ஜீவனையே விரும்புகிறார்.
ஆண்டவராகிய இயேசு காயப்பட்டவராக சிலுவையில் தொங்கினார். அவர் மரித்தார். நித்திய மரணத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க இறைவன் விரும்பினார். அதற்கு ஓர் அடையாளம் தான் இயேசுவின் இரத்தம். எனவே தான் இயேசு கூறினார்: “என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்”. (யோவான் 11:25)
மக்கள்: உரையாளர், சிறுவன், அம்மா, இறைவன், யோசுவா, அப்பா, பார்வோன்.
© Copyright: CEF Germany