Home -- Tamil? -- Perform a PLAY -- 106 (End of the line 6)
106. இறுதி முடிவு 6
வலப்பக்கம் திரும்பு - ஒரு வழிப்பாதை – பாதை இல்லை – வாகன நிறுத்தம் கூடாது – இடப்பக்கம் திரும்பு - நில்!
போக்குவரத்து அடையாளச் சின்னங்கள் இல்லையென்றால், நமது நகரங்களின் நிலைமை எப்படியிருக்கும்? வழிகாட்டி பலகைகள் இல்லையெனில் நமது நாட்டின் நிலைமை?
மிகப்பெரிய தேசம் வனாந்தரத்தில் சென்று கொண்டிருந்தது. அங்கே தெருக்கள் இல்லை. பாதைகள் இல்லை. ஆனால் ஒரு வழிகாட்டி இருந்தது. மேகஸ்தம்பத்தில் இறைவன் அவர்களுக்கு முன்பு சென்றார். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து அவர்களை விடுவித்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு வழிநடத்தினார்.
அற்புதமாக நம்மை வழிநடத்துகின்ற இறைவனுக்கு ஒப்பானவர் யார்?
மேகஸ்தம்பம் நிற்கும்போது, மக்கள் ஓய்வெடுத்துக் கொண்டார்கள். அது நகரும் போது, அவர்கள் பயணத்தை தொடர்ந்தார்கள். இரவு நேரத்தில் அக்கினிஸ்தம்பம் அவர்களை வழிநடத்தியது. இரவு நேரத்திலும் அவர்களுக்கு வெளிச்சம் காணப்பட்டது.
அற்புதமாக நம்மை வழிநடத்துகின்ற இறைவனுக்கு ஒப்பானவர் யார்?
இஸ்ரவேலன்: “மேகம் நின்றுவிட்டது. நாம் இங்கே நமது கூடாரங்களைப் போடுவோம்”.
இஸ்ரேலிய பெண்: “செங்கடல் அருகில் வந்துவிட்டோம்”.
சிறுவன்: “நாம் நீச்சல் அடித்து கடக்கப் போகிறோமா?”
இஸ்ரவேலன்: “நான்! நான் பார்ப்பது தெளிவாகத் தெரியவில்லை. சற்று பின்னால் பாருங்கள்!”
இஸ்ரேலிய பெண்: “ஐயோ! அவர்கள் திரும்பி வருகிறார்கள்!”
இஸ்ரவேலன்: “எகிப்தியர்கள் நம்மை வேட்டையாடப் போகிறார்கள். நாம் தப்பிக்க வழியே இல்லை”.
இஸ்ரேலிய பெண்: “மோசே! இந்தப் பாழான வனாந்தரத்திற்கு நீர் ஏன் எங்களை அழைத்து வந்தீர்?”
மோசே: “பயப்படாதேயுங்கள்! நமது இறைவனைப் போல ஒருவருமில்லை. அவர் நமக்காக யுத்தம்பண்ணுவார்”.
அப்போது இஸ்ரவேலர்களுக்கும், எகிப்தியர்களுக்கும் இடையே ஓர் மேகம் தோன்றியது. எதிரிகளின் பக்கம் அது இருளாகக் காணப்பட்டது. ஆனால் இஸ்ரவேலரின் பக்கமோ, வெளிச்சமாகக் காணப்பட்டது.
இவ்விதமாக நமக்கு உதவி செய்யும் நமது இறைவன் ஒப்பற்றவர். அவரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை!
மோசே கையில் வைத்திருந்த கோலை செங்கடல் மீது நீட்டினான். (தண்ணீர் பிளக்கும் சத்தம்)
இஸ்ரவேலன்: “அற்புதம்! அங்கே பாருங்கள்! கடலின் நடுவே பாதை தெரிகின்றது”.
இஸ்ரேலிய பெண்: “வலப்பகத்திலும், இடப்பக்கத்திலும் தண்ணீர் மதில் போல் நிற்கிறது. இறைவன் நமக்காக இதைச் செய்திருக்கிறார்”.
இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யும் நமது இறைவனுக்கு ஒப்பானவர் யார்?
இது உண்மையாகவே நடந்தது. காய்ந்ததும் ஈரமற்றதுமான பாதை கடலின் நடுவே உண்டானது. இஸ்ரவேலர் இதன் வழியாக கடந்து சென்று மறுபக்கத்தை அடைந்தார்கள்.
எகிப்தியன் 1: “அவர்கள் பின்னாகச் செல்லுங்கள். அந்த வழியில் நாமும் செல்வோம்”.
எகிப்தியன் 2: “ஏய்! ரதத்தின் சக்கரங்கள் சகதியில் சிக்குகின்றன. நாம் சாகப் போகிறோம். இறைவன் நமக்கு எதிராக யுத்தம்பண்ணுகிறார்”.
இவைகள் தான் எகிப்தியரின் கடைசி வார்த்தைகள். இருபுறமும் தண்ணீர் மீண்டும் கடந்துவந்து அவர்களை மூழ்கடித்தது. முழு எகிப்திய ராணுவத்தையும் அந்தக் கடலில் இறைவன் மூழ்கடித்தார்.
இஸ்ரவேலர்: “நாம் காப்பாற்றப்பட்டுவிட்டோம்! நாம் பிழைத்துவிட்டோம்! எதிரிகள் மீது நமது இறைவன் முழுமையான வெற்றி பெற்றிருக்கிறார்”.
சந்தோஷத்தின் மிகுதியினால், அவர்கள் இறைவனுக்கு நன்றி செலுத்திப் பாடினார்கள்.
மக்கள்: உரையாளர், இஸ்ரவேலன், இஸ்ரேலிய பெண், சிறுவன், மோசே, 2எகிப்தியர்கள்.
© Copyright: CEF Germany