Home -- Tamil -- Perform a PLAY -- 065 (Missing for three days)
65. தொலைந்து போய் மூன்று நாட்களாகியது
(பயணிகள் சாலையில் செல்லும் சத்தம்)
பயணி 1: “இந்த கொண்டாட்டத்தை நான் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது”.
பயணி 2: “அது அற்புதமானது”.
பயணி 1: “நாம் சிலாக்கியம் பெற்ற மக்கள். நம்மை விடுவித்த இறைவன் நமக்கு இருக்கிறார். அடுத்த ஆண்டும் நான் எருசலேமிற்கு வருவேன்”.
மரியாள்: “உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக. எனது மகனை நீங்கள் பார்த்தீர்களா?”
யோசேப்பு: “அவன் தொலைந்துவிட்டான். அவனுக்கு 12 வயது”.
பயணி 2: “ஒருவேளை வேறு யாருடனாவது அவன் சென்றிருப்பான்”.
மரியாளும், யோசேப்பும் இயேசுவைத் தேடினார்கள். எருசலேமில் பெற்றோர்களுடன் இயேசு இருப்பது இதுவே முதல்முறை. வீட்டிற்கு திரும்பி வரும்போது, அவரைத் திடீரென்று காணவில்லை.
மரியாள்: “யோசேப்பு, எனக்கு இயேசுவை நினைத்து மிகுந்த கவலையாய் இருக்கிறது”.
யோசேப்பு: “நாம் மறுபடியும் எருசலேமிற்கு திரும்பிச் சென்று அவனைத் தேடுவோம்”.
அவர்கள் எல்லா இடங்களிலும் 12 வயது மகனைக் குறித்து விசாரித்தார்கள். ஒருவரும் இயேசுவைக் காணவில்லை. மூன்று நாட்களுக்கு பின்பு தேவாலயத்தில் இயேசுவைக் கண்டுபிடித்தார்கள். அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். ஏனெனில் இயேசு தேவாலயத்தில் வேதபாரகர்களிடம் விவாதம் பண்ணிக்கொண்டிருந்தார். அவர்களும் இயேசு கேட்ட கேள்விகள் மற்றும் அவர் அளித்த பதில்களைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
மரியாள்: “நீ ஏன் இங்கே இருக்கிறாய்? நாங்கள் மிகுந்த கவலையோடு எல்லா இடங்களிலும் உன்னைத் தேடினோம்”.
இயேசு: “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் பிதாவின் வீட்டில் இருக்க வேண்டியது என்பது உங்களுக்குத் தெரியாதா?”
முதல்முறையாக இயேசு, இறைவனை தனது பிதா என்று அழைத்தார். தான் இறைவனின் குமாரன் என்பதை இயேசு இவ்விதமாக அறிமுகப்படுத்தினார். இறைவனின் குமாரன் இயேசு உன்னைப் போல ஒரு குழந்தையாக இருந்தார். அவர் முழுவதும் மனிதன். அவர் உன்னைப் போல அழுதார், சிரித்தார், சாப்பிட்டார், தூங்கினார். அவர் உன்னைப் போல கற்றுக்கொண்டார். அவர் உன்னைப் போல தன்னுடைய பெற்றோர்களுக்கு கீழ்ப்படிந்தார். உனது சிரிப்பு சத்தம் எனக்கு கேட்கிறது, நீ உனது பெற்றோர்களுக்கு கீழ்ப்படிவது கிடையாதா?
வேதாகமம் கூறுகிறது: பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்கு கீழ்ப்படியுங்கள். இயேசு எப்போதும் கீழ்ப்படிந்தார். அவர் ஒருபோதும் பாவமான ஒன்றையும் பேசவில்லை. பொய் பேசவில்லை, திருடவில்லை. அவர் பாவமற்றவராக இருந்தார். கீழ்ப்படிவது அவருக்கு மகிழ்ச்சியான ஒன்றாக இருந்தது. எனவே அவர் மரியாளுடனும், யோசேப்புடனும் சேர்ந்து மீண்டும் நாசரேத்திற்கு வந்தார். நீ இயேசுவிற்கு கீழ்ப்படிய விரும்பினால், அவருடைய முன்மாதிரியை பின்பற்ற, அவர் உனக்கு உதவுவார். அவரிடம் கேள். உனது எல்லா கீழ்ப்படியாமையையும் அவர் உனக்கு மன்னிப்பார்.
நீ அவருடன் வாழ தீர்மானித்தால், இறைவனுக்கு பிரியமான வழியில் நீ வாழும்படி உதவி செய்வார். உனது இருதயத்தில் இயேசுவானவர் வாழும் போது, அவர் உனக்கு எல்லாக் காரியங்களிலும் உதவி செய்வார். இயேசுவுடன் வாழ முயற்சிப்பது தகுதியான ஒன்றாகும்.
மக்கள்: உரையாளர், இரண்டு பயணிகள், மரியாள், யோசேப்பு, இயேசு.
© Copyright: CEF Germany