Home -- Tamil -- Perform a PLAY -- 064 (On the run)
64. எகிப்திற்கு தப்பிச்செல்லுதல்
நீங்கள் அனைவரும் அருமையாக கவனிக்கிறீர்கள்! நீங்கள் அனைவரும் கிறிஸ்துமஸை சந்தோஷமாய் கொண்டாடினீர்களா? உலகம் முழுவதிலும் உள்ள அநேக மக்கள் நித்திய இராஜா இயேசுவின் பிறப்பை கொண்டாடி மகிழ்கிறார்கள்.
ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நபருக்கு இது சந்தோஷத்தை தரவில்லை. அவன் தான் ஏரோது இராஜா. அவன் தனது சிம்மாசனம் பறிபோய்விடும் என்று பயந்தான். எனவே ஞானிகள் வந்தவுடன், இயேசுவின் பிறப்பை அறிந்த அவன் குழந்தை இயேசுவைக் கொலை செய்ய விரும்பினான். ஞானிகள் எருசலேமிற்கு திரும்பி வரவில்லை. வேறுவழியில் செல்லும்படி சொப்பனத்தின் மூலம் இறைவன் அவர்களிடம் பேசினார்.
இறைவன் கூறினார்: “ஏரோது இராஜாவிடம் திரும்பிச் செல்ல வேண்டாம். நீங்கள் வேறு வழியில் உங்கள் சொந்த நாட்டிற்கு செல்லுங்கள்”.
அவர்கள் அப்படியே செய்தார்கள். இயேசுவை தனிப்பட்டவிதத்தில் அறிந்த அனைவரும் அவருக்கு மகிழ்ச்சியுடன் கீழ்ப்படிகிறார்கள். அவர்கள் வேறு வழியில் தங்கள் வீட்டிற்கு திரும்பிச் சென்றார்கள். ஆனாலும் ஆபத்து நீங்கவில்லை. எனவே யோசேப்பிடம் சொப்பனத்தின் மூலம் இறைவன் பேசினார்.
இறைவன் கூறினார்: “எழுந்திரு! உனது மனைவி மற்றும் குழந்தையை கூட்டிக் கொண்டு எகிப்திற்கு தப்பிச்செல். நான் சொல்லும் வரை அங்கே இரு. ஏரோது குழந்தையைக் கொல்ல முயற்சிக்கிறான்”.
யோசேப்பு இறைவனை நேசித்தான். உடனடியாக கீழ்ப்படிந்தான். அவர் உன்னிடம் எதாவது செய்யச் சொல்லும் போது நீ உடனடியாக கீழ்ப்படிகிறாயா? அந்த நடு இராத்திரியில் யோசேப்பு எழுந்து மரியாளையும், குழந்தை இயேசுவையும் கூட்டிக்கொண்டு எகிப்திற்கு தப்பிச்சென்றான். இந்த சமயத்தில் ஞானிகள் தன்னிடம் திரும்பி வரவில்லையென்பதை அறிந்த ஏரோது கடுங்கோபம் கொண்டு ஒரு கொடூரமான கட்டளையை பிறப்பித்தான்.
ஏரோது: “இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் பிள்ளைகளையும் கொல்லுங்கள். பெத்தலகேமின் எல்லைக்குட்பட்ட எல்லா பகுதிகளிலும் இந்தக் கட்டளையை உடனடியாக நிறைவேற்றுங்கள்”.
ஏரோதிற்கு பைத்தியம் பிடித்துவிட்டதா? அவன் மிகுந்த சஞ்சலம் அடைந்தான். ஆனாலும் அவனால் குழந்தை இயேசுவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவருக்கு எந்த தீங்கையும் கொண்டு வர முடியவில்லை.
இயேசுவிற்கு மூன்று வயதான போது, இந்த ஏரோது இராஜா இறந்துவிட்டான். சொப்பனத்தில் யோசேப்பிடம் ஒரு தேவதூதன் தோன்றி சொன்னான்.
இறைவன் கூறினார்: “எழுந்திரு! பிள்ளையையும், தாயையும் கூட்டிக் கொண்டு மீண்டும் இஸ்ரேல் நாட்டிற்கு செல். குழந்தையைக் கொல்ல வகை தேடியவர்கள் இறந்துவிட்டார்கள்”.
இறைவன் யோசேப்பிடம் இரண்டு முறை சொல்லத் தேவையில்லை. யோசேப்பு இறைவனுடைய வார்த்தையை நம்பி கீழ்ப்படிந்தான். அவன் மரியாளுடனும், குழந்தை இயேசுவுடனும் திரும்பிச் சென்றான். இஸ்ரேலில் நாசரேத்தூர் எனும் சிறிய ஊரில் ஆண்டவராகிய இயேசு வளர்ந்து வந்தார். இறைவன் முன்னுரைத்தப்படியே இது நிகழ்ந்தது.
மக்கள்: உரையாளர், இறைவனின் சத்தம், ஏரோது.
© Copyright: CEF Germany