Home -- Tamil -- Perform a PLAY -- 046 (How to become a child of God 5)
46. இறைவனின் பிள்ளையாக மாறுவதுஎப்படி 5
ஹெய்தி பேரழிவு மிக பயங்கரமானது. புயலுக்கு பின்பு அந்த மலைப் பள்ளத்தாக்கில் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக சீரடையத் துவங்கியது. இறைவன் டிபாமை காப்பாற்றினார். மிஷன் மருத்துவமனையில் அவளது உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. தாதிமார்களுக்கு டிபாமை மிகவும் பிடித்து விட்டது. அவளது உடல் நல முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சியடைந்தார்கள்.
தாதி: “நீ இப்போது நன்றாக இருக்கிறாய் டிபாம் நீ வாசிக்க, எழுத கற்றுக்கொள்ள விரும்புகிறாயா?”
டிபாம்: “ஆமாம். எனக்கு விருப்பம். ஆனால் புத்தகத்தைக் குறித்து எனக்கு பயம்”.
தாதி: “நீ வேதாகமம் என்ற புத்தகத்தை குறித்து பயப்படத் தேவையில்லை. இயேசு சிறு பிள்ளைகளை நேசிக்கிறார் என்று நாம் அதில் வாசிக்கிறோம்”.
பின்பு டிபாம் தினந்தோறும் மிஷன் பள்ளிக் கூடத்திற்கு சென்றாள். மத போதனை வகுப்பின் போது அவள் காதை மூடிக் கொள்வாள். சில சமயம் குறைவாக கவனிப்பாள். “இறைவனின் பிள்ளை” என்று ஆசிரியர் கூறியதின் அர்த்தத்தை அவள் உணர்ந்து கொள்ளவில்லை. அவள் தாயத்து கயிறை எடுத்து, தனது கழுத்தில் சுற்றிக் கொண்டாள். ஒரு சிறுமி இதைப் பார்த்து சிரித்தாள். டிபாம் பயந்து, அழுதுகொண்டே வகுப்பறையை விட்டு வெளியே ஓடினாள்.
தாதி: “டிபாம், நீ ஏன் அழுகிறாய்?”
டிபாம்: “எனக்குப் புரியவில்லை. நான் எவ்விதம் இறைவனின் பிள்ளையாக மாற முடியும்?”
தாதி: “யாரெல்லாம் இயேசுவை நம்புகிறார்களோ அவர்கள் இறைவனின் பிள்ளைகளாக மாற முடியும். அவர்கள் வாழ்வில் அவரே ஆண்டவராக இருப்பார்”.
டிபாம்: “நான் அப்படிச் செய்தால் என் அப்பா என்னை தண்டிப்பார். எனக்குப் பயமாக உள்ளது”.
தாதி: “நாம் அவருக்காக விண்ணப்பம் செய்வோம். அவரும் ஒரு நாள் இறைவனின் குமாரன் மீது நம்பிக்கை வைப்பார்”.
டிபாம் இதைக் கேட்டு தைரியம் அடைந்து, விண்ணப்பம் பண்ணினாள்.
டிபாம்: “ஆண்டவராகிய இயேசுவே, நான் உம்மை விசுவாசிக்கிறேன். என் பாவங்களை மன்னியும். என் வாழ்வில் வாரும்”.
தாதி: “இப்போது நீ இறைவனின் பிள்ளை. இயேசு எப்போதும் உன்னுடன் இருப்பார்”.
டிபாம்: (மகிழ்ச்சியுடன்) “நான் இறைவனின் பிள்ளை”.
சில காலம் கழித்து, அவளது அப்பா, அவளை அழைத்துச் செல்ல வந்தார். அவளுக்கு ஒரு வேதாகமம் பரிசாகக் கொடுக்கப்பட்டது. அவளது அப்பா அமைதியுடன் இதைக் கவனித்தார். அவர்கள் வீட்டிற்கு சென்றார்கள்.
ஒரிஸ்டில்: “நீயும் இயேசுவை நம்புகிறாயா?”
டிபாம: “ஆமாம் அப்பா. நான் இறைவனின் பிள்ளை. நீங்களும் இயேசுவை உங்கள் வாழ்வில் ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் அப்படிச் செய்தால் இறைவனின் பிள்ளையாக மாறமுடியும்”.
அவளது அப்பா அவள் கையில் இருந்து வேதாகமத்தை எடுத்தார். அதை தூள் தூளாக கிழித்து, அவைகளை காற்றில் பறக்கவிட்டார். பிறகு … என்ன நிகழ்ந்தது என்பதை அடுத்த நாடகத்தில் காண்போம்.
மக்கள்: உரையாளர், தாதி, டிபாம், ஒரிஸ்டில்.
© Copyright: CEF Germany