STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Tamil? -- Perform a PLAY -- 154 (Jesus the victor 2) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- TAMIL -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாடகங்கள்
154. இயேசு வெற்றியாளர் 2சாத்தான் தந்திரமுள்ளவன், தீயவன். அவனைக் குறித்து சாதாரணமாக எண்ண வேண்டாம். சாத்தான் என்பவன் அழகான உருவம் கொண்டவன் அல்ல. எவனை விழுங்கலாமோ என்று வகை தேடிச் சுற்றித்திரிகிற கர்ச்சிக்கிற சிங்கம் போல் அவன் இருக்கிறான் என்று வேதாகமம் கூறுகின்றது. சிறுவன்: “அவன் உண்மையாகவே இருப்பதாக நான் நினைக்கவில்லை”. அவன் இறைவனின் எதிரி. நாம் இறைவனை விசுவாசிக்காதபடி நம்மை தடுப்பதற்கு செயல்படுகிறான். அவனுடைய முதன்மையான தந்திரம் உனக்கு நினைவிருக்கிறதா? சிறுவன்: “அவன் இறைவனுக்கு எதிராக சந்தேகம் மற்றும் அவநம்பிக்கையை விதைக்கிறான்”. அவன் உன்னிடம் எப்படி செயல்படுகிறான் என்பதைக் குறித்து கவனமாயிரு. அவனுடைய வலையில் வீழ்ந்துவிடாதே. ஆண்டவராகிய இயேசு உன்னைப் பாதுகாக்கும்படி, அவரிடம் கேள். அவர் சாத்தான் மீது வெற்றி பெற்றவர். இறைவனுடைய குமாரன் தான் அவனுடைய பிரதான இலக்கு. இயேசு சிலுவையில் நமக்காக மரிப்பதை தடுக்கும்படி சாத்தான் விரும்பினான். நாம் இறைவனிடம் இருந்து நித்திய வாழ்வை பெறுவதை அவன் தடைசெய்ய விரும்புகிறான். எனவே தான் அவன் எதிர்த்து செயல்படுகிறான். சாத்தான்: “நீ இறைவனுடைய குமாரனேயானால் இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி செய்யும். நீ இறைவனுடைய குமாரனென்றால், இந்த உயரமான கோபுரத்தில் இருந்து கீழே குதியும். இறைவன் உம்மை பாதுகாப்பார்!” இயேசு வெற்றியாளர்! அவர் இறைவனுடைய குமாரன் என்று அவனுக்கு நிரூபிக்க வேண்டிய தேவை அவருக்கு இல்லை. இதற்குப் பின்பு சாத்தான் இரண்டாவது தந்திரத்தைப் பயன்படுத்தினான். அவன் பெரிய வாக்குத்தத்தம் ஒன்றைக் கொடுத்தான். சாத்தான்: “நீ என்னை தாழ விழுந்து பணிந்து கொண்டால், இந்த முழு உலகத்தையும் நான் உமக்குக் கொடுப்பேன்”. இயேசு: “அப்பாலே போ! சாத்தானே! பரிசுத்த வேதாகமம் இப்படிக் கூறுகிறது: உன் இறைவனாகிய கர்த்தர் ஒருவரையே ஆராதனை செய்து, அவரையே பணிந்துகொள்வாயாக”. இயேசு வெற்றியாளர்! அவர் ஒரு வாக்கியத்தை கூறினார். சாத்தான் ஓடிப்போனான். இயேசு வெற்றியாளர்! எனவே தான் சாத்தான் அவரை வெறுக்கிறான். இயேசு சிலுவையில் தொங்கிய போது, சாத்தான் கடைசி ஆயதத்தை பயன்படுத்தினான். சாத்தான்: “நீ இறைவனுடைய குமாரனேயானால், சிலுவையிலிருந்து இறங்கிவாரும்”. இயேசு இதைச் செய்திருந்தால், நாம் இரட்சிப்பை என்றென்றும் இழந்திருப்போம். நமது பாவங்களுக்கான மன்னிப்பு இருந்திருக்காது. இறைவனுடன் நிலைவாழ்வு இருந்திருக்காது. ஆனால் இயேசு பொறுமை காத்தார். அவர் வெற்றியாளர்! அவர் பாவம், மரணம் மற்றும் சாத்தானை மேற்கொண்டார். அவருடைய உயிர்த்தெழுதல் இதற்கு நிரூபணம். நீ இயேசுவை விசுவாசிக்கும்போது, வெற்றியாளர் பக்கம் இருக்கிறாய். பயப்படாதே, இயேசு கிறிஸ்து வெற்றியாளர்! அவரை எப்போதும் நோக்கிப் பார்க்க மறவாதே! அவரிடம் விண்ணப்பம் செய். அவர் உன்னை பாதுகாப்பார். மக்கள்: உரையாளர், சிறுவன், லூசிபர்(சாத்தான்). © Copyright: CEF Germany |