STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Tamil? -- Perform a PLAY -- 155 (Hands off 3) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- TAMIL -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாடகங்கள்
155. கைகளை உயர்த்துங்கள் 3குறிச்சொல்பவள் என்றால் என்ன என்பது உனக்குத் தெரியுமா? சிறுமி: “சாத்தானுக்கு வேலை செய்யும் ஒருத்தி எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பதை அறிந்திருப்பவள்”. அவள் சொல்வது முழுமையும் பொய்யாக இருக்காது. அவள் சில காரியங்களைச் சொல்ல முற்படுகிறாள். மிகநீண்ட காலமாக குறிசொல்பவர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். பவுல் தனது நண்பருடன் பிலிப்பு பட்டணத்திற்குச் சென்றான். அப்போது குறிசொல்லுகிற ஆவியை உடைய ஒரு பெண் அவர்களை நோக்கி ஓடிவந்தாள் என்று வேதாகமம் நமக்கு கூறுகிறது. அவள் தெருவில் சத்தம்போட்டு வந்தாள். குறிசொல்பவள்: “இவர்கள் இறைவனின் ஊழியக்காரர்கள். நீங்கள் எவ்விதம் இரட்சிக்கப்பட முடியும் என்பதை அவர்கள் உங்களுக்குச் சொல்வார்கள்”. சிறுமி: “இங்கே அது உண்மையைச் சொல்லியுள்ளது”. உண்மைதான். ஆனால் பவுல் அதன் மீது கடுங்கோபம் கொண்டான். அவளுடைய விளம்பரம் அவனுக்குத் தேவையில்லை. பவுல்: “இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கட்டளையிடுகிறேன்: இந்தப் பெண்ணை விட்டுப் புறப்பட்டுப் போ!” அவளை விட்டு உடனடியாக குறிச்சொல்லும் ஆவி வெளியேறியது. இயேசு வெற்றியாளர், சாத்தான் அவருக்கு முன்பு நடுங்குகிறான். நாம் அவனைக் காண முடியாவிட்டாலும், மக்கள் இறைவனை விசுவாசிப்பதை தடைசெய்யும் வேலையில் சாத்தான் சுறுசுறுப்பாக செயல்படுகிறான். எனவே தான் அவன் மாற்றுவழியை முன் வைக்கிறான். மூடநம்பிக்கை. இயேசுவிற்கு தனது இதயக்கதவை மூடும் எவரும் மூடநம்பிக்கைக்கு அதை திறக்கிறார். அதிர்ஷ்டம் என்று சொல்லி மக்கள் கழுத்தில் நகை அல்லது கையில் ஆபரணம் அணிவது இதை நமக்கு உணர்த்துகிறது. அநேகர் தங்கள் கார்களில் மந்திரதாயத்தை தொங்க விடுகிறார்கள். பிசாசுகள் நமக்கு எதிர்காலத்தை கணிக்கும் ஒரு விளையாட்டை காண்பிக்கின்றன. பொருட்களை தொடாமல் அதை நகரச்செய்யும் மாய்மாலத்தை வழங்குகின்றன. சிறுமி: “நாம் அதை ஒரு கேளிக்கையாக செய்தால் என்ன?” நகரும் கண்ணாடி டம்ளர்கள் மூலம் ஆவிகளுடன் பேசுவதற்கு பள்ளி நண்பர்கள் முயற்சித்தபோது, மார்டின் இதைக் குறித்து அதிகம் சிந்தித்தான். அவனுக்குள் ஆழமான பயங்கள் இருந்தன. பயங்கரமான கனவுகள் தோன்றின. மை டப்பா பரிசோதனை பற்றி உனக்குத் தெரியுமா? ஒரு விரலை மை டப்பாவிற்குள் விட்டு நனைத்துக்கொள். இன்னொரு விரலைக் கொண்டும் இதைப் போலச் செய். சிறுமி: “இங்கே பார், இரண்டு விரல்களும் நீல மையினால் நனைத்துள்ளது!” எதிரிகளிடம் இருந்து உங்கள் கைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள். வெறும் விளையாட்டிற்காகவோ அல்லது உண்மையாகவோ செய்வது ஒரு விஷயம் அல்ல. எப்போதும் அதற்கான விளைவுகள் இருக்கும். உதாரணத்திற்கும் வேதாகமத்தை வாசிக்கும் அல்லது விண்ணப்பம் செய்யும் ஆர்வம் உங்களுக்கு இல்லாமல் போகலாம். சிறுமி: “நீ உனது இராசிபலனைக் குறித்து வாசிக்கிறாயா?” இல்லை. சிறுமி: “எனது அம்மா அதைச் செய்யவிடுவதில்லை. இறைவன் அதை தடுத்திருக்கிறார் என்று அவள் கூறியுள்ளாள். நாம் எப்போதும் இறைவனை மட்டுமே சார்ந்துவாழ அவர் விரும்புகிறார்”. நீ இயேசுவை உன் வாழ்வில் பெற்றிருந்தால், உனக்கு வேறு எதுவும் தேவையில்லை. அவர் வெற்றியாளர். எதிரியின் தந்திரங்களில் இருந்து அவர் நம்மை காப்பாற்றுகிறார். அவர் உன்னை நேசிக்கிறார். ஆகவே அவர் உன்னை பாதுகாப்பார்! மக்கள்: உரையாளர், சிறுமி, பவுல், குறிசொல்பவள். © Copyright: CEF Germany |