STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Tamil? -- Perform a PLAY -- 152 (Pass it on 2) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- TAMIL -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாடகங்கள்
152. மற்றவர்களுக்குச் சொல் 2பாதிப் பட்டினியுடனும், வியாதியுடனும் இருந்த நான்கு தொழுநோயாளிகள் எதிரிகளின் பாளயத்தில் சென்ற போது, இந்தக் காரியத்தை எதிர்பார்க்கவே இல்லை. தொழுநோயாளி 1: “நான் தெளிவாகக் காண்கிறேனா? இது உண்மையாக இருக்காது!” தொழுநோயாளி 2: “ஆமாம்! பாளயம் காலியாக உள்ளது. எதிரிகள் ஓடிவிட்டார்கள்!” தொழுநோயாளி 1: “ஒருவேளை இது சதித்திட்டமாக இருக்கலாம்!” ஆனால் அது சதித்திட்டம் அல்ல. சமாரியப் பட்டணத்தை முற்றுகையிட்டிருந்த சீரியர்கள் இப்போது இல்லை. இஸ்ரவேலரின் பட்டினிக்கு காரணமானவர்களை காண முடியவில்லை. அவர்களை விரட்டியடித்தது யார்? வேதாகமம் நமக்கு அந்த இரகசியத்தைக் கூறுகிறது: உயிருள்ள இறைவன் மிகப்பெரிய இராணுவத்தின் இரைச்சல் சத்தத்தை கேட்கப்பண்ணினார். இஸ்ரவேலர் மற்ற படைகளுடன் சேர்ந்து தாக்க வருகிறார்கள் என்று அவர்கள் நினைத்தார்கள். அவர்கள் பயத்தில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அப்படியே சென்று விட்டார்கள். இறைவன் இந்த அற்புதத்தை சூரியன் மறையும் நேரம் செய்தார். சரியாக அந்த நேரத்தில் தான் நான்கு தொழுநோயாளிகளும் எதிரிகள் இருக்கும் இடம் நோக்கி வந்தார்கள். அவர்கள் மரணத்தை எதிர்பார்த்து வந்தார்கள். ஆனால் வாழ்வை பெற்றுக் கொண்டார்கள். தொழுநோயாளி 1: “அளவுக்கதிகமான உணவு! என்னால் நம்பவே முடியவில்லை!” தொழுநோயாளி 2: “என்ன விலை! பார்! துணிகள்! தங்கம்! வெள்ளி!” அவர்கள் சாப்பிட்டார்கள், குடித்தார்கள். கனவு காண்பதைப் போல அவர்கள் பாளயத்தினூடே நடந்து சென்றார்கள். தொழுநோயாளி 1: “நாம் செய்வது சரியல்ல. நாம் நம்மைக் குறித்து மட்டுமே நினைப்பது கூடாது. இந்த நல்ல செய்தியை பட்டணத்தில் உள்ளவர்களுக்கு நாம் சொல்ல வேண்டும். நாம் மவுனமாக இருந்தால் மற்றவர்கள் பட்டினியால் செத்துவிடுவார்கள். அவர்களுடைய மரணத்திற்கு நாம் காரணர்கள் ஆகிவிடுவோம்”. இந்த செய்தி எதிரிகளின் தந்திரம் என்று இராஜா முதலில் நினைத்தான். ஆனால் பட்டணத்தார் அனைவரும் வெளியே சென்று, அது உண்மையென்று கண்டார்கள். அவர்கள் சீரியர்களின் பாளயத்தை கொள்ளையிட்டார்கள். கேலி செய்த அரண்மனை அலுவலர் பட்டணத்து வாசலிலே ஜனங்களின் நெரிசலில் சிக்கி இறந்தான். இறைவன் சொன்னதுபோல அனைத்துக் காரியங்களும் நடந்தன. நல்ல செய்தியை ஒருவர் மற்றவருக்கு கூறினார். யார் அதை நம்பினார்களோ, அவர்கள் பிழைத்தார்கள். ஒரு மனிதன் அதைப் பேசாமல் அமைதியாய் இருக்க முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய உண்மை! இயேசு சொன்னதை நான் நினைவுப்படுத்துகிறேன்: நான் வாழ்கிறேன்! எனவே நீங்களும் வாழ்வீர்கள். அவர்கள் மக்கள் வாழும்படி விரும்புகிறார்கள். இந்த உலகில் மட்டுமல்ல. நித்தியமாக வாழும்படி செய்கிறார். அநேகர் இதை அறியவில்லை. எனவேதான் இயேசுவைக் குறித்த நல்ல செய்தியை நான் உங்களுக்கு கூற விரும்புகிறேன். நீயும் அப்படியே செய்வாயா? மக்கள்: உரையாளர், தொழுநோயாளி 1, தொழுநோயாளி 2. © Copyright: CEF Germany |