STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Tamil? -- Perform a PLAY -- 134 (STOP 2) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- TAMIL -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாடகங்கள்
134. நில் 2சிறுமி: “வாழ்க்கைப் பள்ளி பகுதி 1. இன்று நாம் “நில்” குறியீட்டை பார்க்கப்போகிறோம்”. (போக்குவரத்து சத்தங்கள்) சிறுவன்: “அவன் முட்டாளா? நிறுத்தக் குறியீடு இருந்தும், அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டிச் செல்கிறானே!” சிறுமி: “ஒருவேளை அவனுக்கு அவசரவேலை இருந்திருக்கலாம்”. அவசரமாகச் செயல்பட்ட ஒரு மனிதனைக் குறித்து நாம் வேதாகமத்தில் வாசிக்கிறோம். அவன் எப்போது வருவான் என்று யாருக்கும் தெரியாது. எல்லோரும் அவனுக்குப் பயப்பட்டார்கள். அவன் கொலைத்திட்டம் தீட்டியிருந்தான். அப்பாவிகள் அவனால் பாதிக்கப்பட்டார்கள். சவுல்: “நாம் எல்லாக் கிறிஸ்தவர்களையும் அழிக்கப் போகிறோம்”. இயேசுவை இறைவனுடைய குமாரன் என்று ஒவ்வொருவரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நாம் தமஸ்குவுக்குச் செல்வோம்”. அவன் ஆண்களையும், பெண்களையும் சிறைப்பிடிக்க விரும்பினான். பிரதான ஆசாரியன் இதற்கான அனுமதியைக் கொடுத்திருந்தான். (நடக்கும் சத்தம்) சவுல் வேகமாக நடந்தான். திடீரென்று அவன் நின்றான். வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிலும் பிரகாசித்தது. இயேசு: “சவுலே! சவுலே! நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?” சவுல்: “ஆண்டவரே! நீர் யார்?” இயேசு: “நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே! எழுந்திரு. தமஸ்குவுக்குச் செல். நீ செய்ய வேண்டியதை அங்கே உனக்குச் சொல்லப்படும்”. சவுலுடன் வந்தவர்களும் அந்த சத்தத்தை தெளிவாகக் கேட்டார்கள். ஆனால் அவர்கள் யாரையும் காண இயலவில்லை. சவுல் எழுந்திருந்தபோது, அவன் பார்வையை இழந்திருந்தான். அவனுடன் வந்தவர்கள் நகரத்திற்குள் அவனை அழைத்துச் சென்றார்கள். இயேசு சவுலை நிறுத்தினார். அவனது வாழ்க்கை தவறான வழியில் செல்வதை, அவன் உணர்ந்து கொண்டான். அவன் இறைவனுக்கு சொந்தமானவன் என்று நினைத்தான். ஆனால் அது உண்மையல்ல! இயேசு இல்லையெனில், நாம் அனைவரும் தவறான வாழ்க்கைப் பாதையில் தான் செல்கிறோம். பரலோகத்திற்குச் செல்லாத ஒரு வழியில் நாம் இருக்கிறோம். இது ஆபத்தான பாதை. எனவே தான் இயேசு சவுலை நிறுத்தினார். இன்னும் அநேகருக்கு இப்படிச் செய்கிறார். சிறுமி: “நான் ஒளியைப் பார்த்ததே இல்லை”. இறைவன் “நிறுத்தக் குறியீட்டு அடையாளங்கள்” ஒவ்வொரு நபருக்கும் வித்தியாசமாகத் தோன்றலாம். சிறுவன்: “உதாரணத்திற்கு அது ஒரு விபத்து அல்லது வியாதியாக இருக்கலாம். உனக்கு எப்படி இருந்தது?” எனது “நிறுத்த குறியீட்டு அடையாளம்” ஒரு பிரசங்கம் ஆகும். சில சமயம் இறைவன் மக்களையும் நிறுத்த அடையாளமாகப் பயன்படுத்துகிறார். சிறுமி: “சவுலுக்கு பின்பு என்ன நிகழ்ந்தது?” அவன் தவறான வழியில் செல்வதை அறிக்கையிட்டான். பின்பு விண்ணப்பம் ஏறெடுத்தான். மூன்று நாட்களுக்குப் பின்பு, ஒரு மனிதன் அவனை சந்திக்க வந்தான். அனனியா: “பிரியமான சகோதரனாகிய சவுலே! நீ பார்வையடையும்படி ஆண்டவராகிய இயேசு என்னை உன்னிடம் அனுப்பினார். நீ பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவாயாக! அவர் உனது வாழ்க்கைப் பயணத்திற்குத் தேவையான பெலனைக் கொடுப்பார்”. உடனடியாக சவுல் பார்வையடைந்தான். சிறுவன்: “பிறகு என்ன நிகழ்ந்தது?” அவன் கொல்ல விரும்பிய கிறிஸ்தவர்கள் அவனுக்கு சிறந்த நண்பர்களாக மாறினார்கள். அவன் அநேகரை இயேசுவிடம் வழிநடத்தினான். அவர்களுக்கு சரியான வழியைக் காண்பித்தான். மக்கள்: உரையாளர், சிறுமி, சிறுவன், சவுல், இயேசு, அனனியா. © Copyright: CEF Germany |