STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Tamil? -- Perform a PLAY -- 110 (Only 8 and already King ) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- TAMIL -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாடகங்கள்
110. 8 வயது இராஜா(கிளர்ச்சியின் சத்தம்) ஆமோன் இராஜாவிற்கு எதிராக சதித்திட்டம். அவனுடைய பெயரின் அர்த்தம் உண்மையுள்ளவன்; சார்ந்திருப்பவன். ஆனால் அவன் அப்படி இல்லை. குறிப்பாக இறைவனுடனான உறவில் அப்படி இல்லை. மரத்தினாலும், கல்லினாலும் செய்யப்பட்ட உருவங்களை அவன் ஆராதித்தான். விக்கிரக ஆராதனை என்பது இறைவனுக்கு அருவருப்பான காரியம் ஆகும். வேலைக்காரன்: “நாங்கள் அவனைக் கொல்லப்போகிறோம். அவனுடைய அறையில் அவன் இருக்கிறான்”. (கதவைத் திறக்கும் சத்தம், கொந்தளிப்பு, அழுகை) தனது சொந்த வேலைக்காரர்களினால் ஆமோன் இராஜா கொலைச் செய்யப்பட்டான். அவனது மகன் புதிய இராஜாவாக மாறினான். நீ யோசியாவைக் குறித்து கேள்விப்பட்டதுண்டா? அவன் 8 வயதாயிருக்கும் போது இராஜாவாக மாறினான். அவனது அப்பாவைப் போல இறைவனை அவன் புறக்கணித்தானா? அல்லது இறைவனை நேசித்தானா? அவனது வாழ்வு அற்புதமாக இருந்ததை வேதாகமம் விளக்குகின்றது. இறைவனுக்குப் பிரியமானதை யோசியா செய்தான். உன்னைக் குறித்தும் இதைப் போல சொல்ல முடியுமா? உனது வாழ்வின் நோக்கம் இப்படி இருக்க வேண்டும். இறைவனுக்கு பிரியமில்லாததை நாம் செய்திருந்தால், இயேசு அவற்றையெல்லாம் மன்னிக்கிறார். நீ அவரிடம் மன்னிப்பைக் கேட்கும்போது, அவர் உனக்குச் செவி கொடுக்கிறார். யோசியா இறைவனை நேசித்தான். அவன் வயது முதிர்ந்த போது, தேசத்தில் உள்ள அனைத்து விக்கிரகங்களையும் அழித்தான். இறைவனுக்குப் பிரியமற்ற அனைத்துக் காரியங்களும் நிர்மூலமாக்கப்பட்டன. உனது வாழ்வில் சுத்தம்பண்ண வேண்டிய காரியங்கள் உண்டா? அசுத்தமான வீடியோ காட்சிகள் மற்றும் பத்திரிக்கைகள்? உனது படுக்கையின் கீழே இருக்கும் இறைவனை துக்கப்படுத்தும் காரியங்கள்? யோசியா அனைத்தையும் சரியாக நிறைவேற்றினான். அவன் இறைவனை நேசித்ததினால் மனப்பூர்வமாக செயல்பட்டான். யோசியா: “தேவாலயத்தைப் பாருங்கள். இறைவனுடைய ஆலயம் செயலற்றுக் காணப்படுகிறது. இது இறைவனை நிந்திக்கும் காரியம் ஆகும். கட்டுவதற்கு தேவையான பொருட்களை வாங்குங்கள். வேலையை ஆரம்பியுங்கள்”. (கட்டுமான சத்தம்) ஆசாரியன்: “நான் கண்டுபிடித்ததைப் பாருங்கள். அந்த வழியின் பின்புறத்தில் மூலைப் பகுதியில் இந்த சுருள்களை கண்டுபிடித்தேன். வாருங்கள்! நாம் இதை யோசியா இராஜாவிடம் கொண்டு செல்வோம்”. இறைவனுடைய வார்த்தை, வேதாகமம், ஒரு மூலையில் கிடந்தது. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. நம்முடைய வாழ்வில் இறைவன் முதல் இடத்தைப் பெறவில்லை. ஆசாரியன்: “யோசியா இராஜாவே! நாங்கள் இந்த சுருள்களை இடிபாடு பகுதிகளில் கண்டுபிடித்தோம்”. யோசியா: “அதை சத்தமாக வாசியுங்கள்”. தங்கள் முழு இருதயத்தோடும் இறைவனை நேசிக்காதவர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பதை ராஜா கேட்டான். அதிர்ச்சியடைந்து, தரையில் அமர்ந்து, அழத் தொடங்கினான். அவனுடைய மக்கள் இறைவனை மிகவும் வேதனைப்படுத்தியிருப்பதை எண்ணி வருத்தப்பட்டான். இதற்குப் பின்பு, இறைவன் அவனிடம் கூறினார்: இறைவன்: “நான் இந்த நகரத்தை தண்டிக்கப் போகிறேன். நீ என்னை நேசிப்பதால், உன்னை விடுவிப்பேன்”. இறைவனை ஆராதிக்கும்படி வாலிபர்களையும், சிறியவர்களையும் யோசியா இராஜா அழைத்தான். இறைவனை நேசிக்கும்படியாகவும், அவர்களது வாழ்வில் இறைவனுக்கு முதலிடம் கொடுக்கவும் சொன்னான். நீ இந்த அழைப்பை ஏற்றுக்கொள்வாயா? மக்கள்: உரையாளர், வேலைக்காரன், யோசியா, ஆசாரியன், இறைவனின் சத்தம். © Copyright: CEF Germany |