STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Tamil? -- Perform a PLAY -- 071 (The cast-your-cares hint ) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malagasy -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Sindhi -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- TAMIL -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாடகங்கள்
71. உங்கள் கவலைகளை அவர் மீது வைத்துவிடுங்கள்நமக்கு கவலைகள் அல்லது பிரச்சினைகள் இல்லாமல் இருந்தால் எவ்வளவு அருமையாக இருக்கும்? சிறுமி: “இனி மேல் யுத்தம் இருக்கக் கூடாது என்று நான் விரும்புகிறேன்”. சிறுவன்: “விபத்துகள் அல்லது புற்றுநோய் இருக்கக்கூடாது”. சிறுமி: “பெற்றோர்கள் விவாகரத்து செய்யக் கூடாது”. சிறுவன்: “ஒருவரும் பட்டினியாய் இருக்கக் கூடாது என்று நான் விரும்புகிறேன்”. இது உண்மையாக நடந்தால் எவ்வளவு அருமையாக இருக்கும். நானும் சில சமயங்களில் இதைப் போலவே எண்ணுகிறேன். நீயும் அப்படி நினைக்கிறாயா? ஆனால் இந்தப் பூமியில் நாம் வாழும் வரைக்கும் இவைகள் உண்மையாகப் போவதில்லை. உனக்கு நான் ஒரு நற்செய்தியை வைத்திருக்கிறேன். உங்கள் கவலைகளின் மத்தியில் உங்களை கைவிடாத ஒருவர் இருக்கிறார். அவர் இயேசு, அது எப்படி எனக்குத் தெரியும்? பேதுருவிடம் இருந்து அறிந்துகொண்டேன். அவர் எழுதிய கடிதங்கள் வேதாகமத்தில் உள்ளன. அதில் அவர் கூறுகிறார், உங்கள் கவலைகளையெல்லாமல் இயேசுவின் மீது வைத்துவிடுங்கள். ஏனெனில் அவர் உங்களை விசாரிக்கிறவர். பேதுரு அனுபவத்திலிருந்து பேசுகிறார். ஒரு முறை அவருடைய மாமி மிகவும் சுகவீனமாய் இருந்தாள். அவள் காய்ச்சலினால் அவதிப்பாட்டாள். ஒருவரும் அவளுக்கு உதவ முடியவில்லை. பேதுருவும், அவருடைய மனைவியும் நம்பிக்கையற்ற நிலையில் இருந்தார்கள். இயேசு அவர்களை சந்திக்க வந்த போது, தங்கள் கவலையைக் குறித்து அவரிடம் கூறினார்கள். பேதுரு: “இயேசுவே, எங்களுக்கு உதவும். எனது மாமி மிகவும் சுகவீனமாய் இருக்கிறாள். நாங்கள் அவளைக் குறித்து மிகவும் கவலைப்படுகிறோம்”. இயேசு நம்முடைய சிறிய மற்றும் பெரிய பிரச்சினைகளைப் புரிந்துகொள்கிறார். நமக்கு மகிழ்ச்சியுடன் அவர் உதவி செய்கிறார். வேதாகமம் கூறுகிறது: இயேசு படுக்கையில் இருந்த அப்பெண்ணிடம் சென்றார். அவள் கைளைப் பிடித்து தூக்கிவிட்டார். அவள் எழுந்து நிற்க உதவினார். அப்போது அவளுடைய காய்ச்சல் உடனடியாக நீங்கியது. ஒரு நொடிப்பொழுதில் அவள் சுகமானாள். அவள் சுகம்பெற்று அனைவருக்கும் அருமையான உணவை சமைத்தாள். உனக்கு கவலைகள் உண்டா? இயேசுவிடம் அதைக் குறித்து சொல். அவர் உனது விண்ணப்பத்தைக் கேட்கிறார். ஒருவேளை பேதுருவிற்கு உடனடியாக உதவியது போல, உனக்கு செய்யாமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் அவர் உதவி செய்வார். சில சமயங்களில் அவருடைய பதிலுக்காக நாம் காத்திருக்க வேண்டும். பேதுருவின் நல்ல ஆலோசனையை எப்போதும் நினைவிற்கொள்ளுங்கள். பேதுரு: “இயேசு உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளை எல்லாம் அவர் மீது வைத்துவிடுங்கள்”. மக்கள்: உரையாளர், சிறுமி, சிறுவன், பேதுரு. © Copyright: CEF Germany |