STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Tamil":

Home -- Tamil? -- Perform a PLAY -- 141 (Up at 5.00 o‘clock 2)

Previous Piece -- Next Piece

நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாங்ள்

141. 5.00 மணிக்கு துயில் எழுதல் 2


(கடிகாரத்தின் அலார சத்தம்)

காலை 5.00 மணிக்கு அலாரம் அடித்தது. ஹட்சன் டெய்லர் எழுந்திருந்தார்.

சிறுவன்: “இவ்வளவு சீக்கிரமா? ஏன்?”

அவன் தடையில்லாமல் வேதாகமத்தைப் படிக்க அதிக நேரம் அவனுக்குத் தேவைப்பட்டது. அவன் நற்செய்தியாளராக விரும்பினான். அது அவனுடைய முதலாவது பயிற்சிப் பாடம் ஆகும். அவன் சரீரத்திலும் திடகாத்திரமாக இருக்க விளையாட்டுகளில் ஈடுபட்டான்.

150 ஆண்டுகளுக்கு முன்பு இது நிகழ்ந்தது. ஹட்சன் டெய்லர் ஆண்டவராகிய இயேசுவை நேசித்தான். அவன் நற்செய்தியாளராக விரும்பினான்.

(தட்டும் சத்தம்)

ஹட்சன்: “ஹலோ, பாஸ்டர். சீனாவைக் குறித்த புத்தகத்தை எனக்குத் தர முடியுமா?”

பாஸ்டர்: “ஏன் சீனாவைக் குறித்த புத்தகம்?”

ஹட்சன்: “நான் அங்கு நற்செய்தியாளராகப் போகும்படி இயேசு விரும்புகிறார்”.

பாஸ்டர்: “நீ எப்படி சீனாவிற்கு செல்ல முடியும்?”

ஹட்சன்: “எனக்குத் தெரியவில்லை. ஆண்டவராகிய இயேசுவை நான் நம்புகிறேன். அவர் என்னை வழிநடத்துவார்”.

இயேசுவை நம்புவது மிகவும் முக்கியமானது. நாம் இதைச் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். ஹட்சன் டெய்லர் இயேசுவுடன் ஒரு உடன்படிக்கை செய்தான். அது அவனுக்கு உதவி செய்தது”.

ஹட்சன்: “ஆண்டவராகிய இயேசுவே, எனக்கு என்ன தேவையென்றாலும், நான் உம்மிடம் மட்டுமே கேட்பேன்”.

ஹட்சன் பணக்காரன் அல்ல. ஒரு முறை அவனிடம் 3 டாலர்கள் மதிப்புள்ள பணம் மட்டுமே இருந்தது. இருப்பினும் அவன் மகிழ்ச்சியாக இருந்தான். ஏழைகளை சந்தித்தான்.

மனிதன்: “மிஸ்டர் திரு.டெய்லர். தயவுசெய்து வந்து என்னுடைய மனைவிக்காக விண்ணப்பம் பண்ணுங்கள். அவள் மிகவும் வியாதிப்பட்டிருக்கிறாள்”.

ஹட்சன் அந்த மனிதனைப் பின்தொடர்ந்து, சிறிய, அழுக்கு நிறைந்த அறைக்குள் சென்றார். அவர் பசியுள்ள குழந்தையையும், மரணப்படுக்கையில் இருந்த மனைவியையும் கண்டார். அவர்களுக்காக விண்ணப்பம் செய்தார். தன்னிடம் இருந்த கடைசிப் பணத்தையும் அவர்களுக்குக் கொடுத்தார். அவருக்கு மதிய உணவு இல்லை என்பதை அவர் ஆண்டவராகிய இயேசுவுக்கு மட்டுமே சொன்னார். இயேசு அவருடைய நம்பிக்கையை கனப்படுத்தினார். மெயில் மூலமாக ஒரு அற்புதம் நிகழ்ந்தது. அறிமுகம் இல்லாத ஒருவரிடமிருந்து 12 டாலர்கள் கிடைத்தது. மேலும் அந்த வியாதியுள்ள பெண்ணும் சுகமடைந்தாள்.

டாக்டர் ஹார்டிக்காக ஹட்சன் பணிசெய்தார். அவர் நல்ல மருத்துவர். ஆனால் மறதி நிறைந்த மனிதன்.

டாக்டர்.ஹார்டி: “மிஸ்டர்.டெய்லர், நான் உனக்குச் சம்பளம் கொடுத்துவிட்டேனா?”

ஹட்சன்: “இல்லை”.

டாக்டர் ஹார்டி: “என்னை மன்னித்துவிடு. நான் இப்போது தான் எல்லாப் பணத்தையும் வங்கியில் செலுத்தினேன். நீ எனக்கு ஞாபகப்படுத்த வேண்டும்”.

தனக்குத் தேவையானதை இயேசுவிடம் மட்டுமே சொல்ல வேண்டும் என்ற அவருடைய ஒப்பந்தத்திற்கு எதிராக இது மாறிவிடும். இப்போது எப்படி அவருடைய வீட்டின் வாடகையை அவர் செலுத்த முடியும்? டாக்டர்.ஹார்டி மீண்டும் ஒருமுறை வரவேற்பறைக்கு வந்தார்.

டாக்டர்.ஹார்டி: “உனது சம்பளம் இதோ! ஒரு நோயாளி வந்தார். தன்னுடைய பில்லின் தொகையை செலுத்தினார்”.

ஹட்சனை இயேசு இவ்விதமாக பராமரித்தார். அவர் மீது நம்பிக்கை கொள்ளும் ஒவ்வொருவர் மீதும் அக்கறை கொள்கிறார். பின்பு லண்டனில் ஹட்சன் மருத்துவம் படித்தார். பல்கலைக்கழக மருத்துவமனையில் அவருக்கு ஒரு விநோதமான காரியம் நேரிட்டது. நீ அதை அடுத்த நாடகத்தில் காண்பாய்.


மக்கள்: உரையாளர், ஹட்சன்.டெய்லர், பாஸ்டர், ஹார்டி, சிறுவன், மனிதன்.

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on July 27, 2018, at 09:28 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)