Home -- Tamil? -- Perform a PLAY -- 091 (Who is the thief 3)
91. யார் திருடன் 3
அந்த வெள்ளை மனிதன் ஒரு பெட்டியில் இருந்து ஜீப் வண்டிக்கு ஒரு மின்சார வயரை இணைப்பதை ரிங்குவும், பட்டுவும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.
பின்பு ஒரு வெள்ளைச் சுவர் உருவாக்கப்பட்டது. அந்த சிறிய கிராமத்தில் அந்த மக்களுக்கு அனைத்தும் புதிதாக, இருந்தது. அவர்கள் இதற்கு முன்பு திரைப்படத்தை பார்த்ததே இல்லை.
ஷாகிப் குரூப்: “இறைவன் உங்கள் அனைவரையும் நேசிக்கிறார். அவர் இந்த உலகிற்கு தனது ஒரே பேறான குமாரனை அனுப்பினார். அவர் பெயர் இயேசு. அவர் நம்மைப் போன்ற மனிதன் ஆனார். ஆனால் அவரிடத்தில் பாவம் இல்லை. இறைவன் பாவத்தை வெறுக்கிறார். பாவத்திற்கான தண்டனை மரணம் ஆகும். இயேசு இந்த தண்டனையாகிய மரணத்தை தன் மீது ஏற்றுக்கொண்டு, நமது இடத்தில் சிலுவையில் மரித்தார். இறைவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார். இயேசுவை விசுவாசியுங்கள். அப்போது நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள். உங்களுக்கு பரலோகில் இடம் உண்டு”.
அந்த திரைப்படக் காட்சி முடிந்தது. பாண்டு சிறிய ஆர்கனில் ஒரு பாடலை வாசித்தான். ஷாகிப் குரூப்புடன் பேச விரும்பியவர்கள் அங்கு தங்கினார்கள்.
ரிங்கு: “ஷாகிப்! நீங்கள் எவ்வளவு காலம் எங்களுடன் இருப்பீர்கள்? உங்கள் இறைவனைக்குறித்து அதிகம் அறிய வேண்டும்”.
ஷாகிப் குரூப்: “நாங்கள் நாளைக்கு அடுத்த கிராமத்திற்கு சென்றுவிடுவோம். நாம் நிச்சயம் மீண்டும் ஒருவரையொருவர் சந்திப்போம்”.
ரிங்குவும், பட்டுவும் வீட்டிற்கு போக வேண்டும். ஆனால் ஜீப் வண்டியில் ஆர்கன் … யாராவது அதைப் பார்த்தார்களா? மின்னலைப் போல அவர்கள் அந்தப் பெட்டியை எடுத்துக்கொண்டு மறைந்துப் போனார்கள். ஒரு பழைய பொருட்கள் வைக்கும் அறையில் அதை மறைத்து வைத்தார்கள். அந்த இரவு அவர்களுக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டது. தங்களது மனச்சாட்சி குத்துவதினால் மட்டுமல்ல, அந்த இரவு கழுதை புலிகளிடமிருந்து தங்கள் விளை நிலங்களை அவர்கள் பாதுகாக்க வேண்டும். நிலா மிகவும் வெளிச்சத்துடன் பிரகாசித்தது.
ரிங்க: “பட்டு! அங்கே ஏதோ ஒன்று அசைந்து செல்கிறது. ஒரு புலி. நிச்சயம் அது புலி தான். அதன் கண்கள் ஒளிர்வதை நான் கண்டேன்”.
பட்டு: “நீ கனவு காண்கிறாயா?”
ரிங்கு: “இல்லை, நான் உண்மையாகவே பார்த்தேன்”.
அடுத்த நாள் காலை அந்த கிராமத்தினர் அந்த கோர செய்தியைக் குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
மனிதன்: “அது ஒரு புலி. மனிதனைத் தின்னும் புலி”.
பெண்: “என்ன? என்ன? எங்கே?”
மனிதன்: “அடுத்த கிராமத்தில் ஒரு மனிதனை புலி தாக்கியுள்ளது”.
ரிங்கு: “நாங்களும் புலியைக் கண்டோம்”.
என்ன செய்வது? புலியைப் பிடிக்க என்ன செய்யலாம்?
வேட்டைக்காரன்: “ஒரு காளையைக் கொன்று, அதன் மாம்சத்தை இரத்தத்துடன் புலி சாப்பிடும் படி நாம் வைக்க வேண்டும். நாம் பெரிய மரத்தில் ஆயுதங்களுடன் அமர்ந்திருந்து, அது வருவதைக் கண்காணிக்க வேண்டும். அந்தக் காளையின் இரத்த வாசனையைக் கண்டு அந்தப் புலி வரும். அது வந்து காளையின் மாம்சத்தை தின்னும் போது, நாம் அதை சுட்டு வீழ்த்த வேண்டும்”.
மனிதன்: “ரிங்கு! நீ எங்களுடன் வருகிறாயா? உனது உதவி தேவை”.
அவர்களுடன் இணைந்து வேட்டைக்கு செல்வதில் அவனுக்கு பெருமை. அதே சமயத்தில் அவனுக்கு பயமும் இருந்தது. புலியை வேட்டையாடுவது மிகவும் ஆபத்தானது. என்ன நிகழ்ந்தது என்பதை அடுத்த நாடகத்தில் காண்போம்.
மக்கள்: உரையாளர், ஷாகிப் குரூப், ரிங்கு, பட்டு, வேட்டைக்காரன், மனிதன், பெண்.
© Copyright: CEF Germany