Home -- Tamil? -- Perform a PLAY -- 073 (Shock in the classroom 1)
73. வகுப்பறையில் அதிர்ச்சி 1
விடுமுறை முடிந்துவிட்டது. இந்த முறை பள்ளி ஆண்டு நன்றாக இருக்கும். ஓர்ட்ரீ பள்ளியில் மாணவர்கள் சிறு குழுக்களாக நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் பழைய நாகரீகத்தின்படி ஆடை அணிந்திருந்தார்கள்.
ஒவ்வொருவரும் தங்களை உயர்வாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக ஜிம் பேசினான். அவன் சொன்ன அனைத்தையும் மற்றவர்கள் செய்தார்கள்.
ஜிம்: “கவனியுங்கள்! புதிய ஆசிரியர் வருவார். தன்னை பெரியவர் போல காண்பிப்பார். பின்பு வந்த இடம் தெரியாமல் போய்விடுவார். நாம் ஏற்கெனவே மூன்று பேரை துரத்தியுள்ளோம். இந்த ஆசிரியரும் நீண்டநாள் நிற்கமாட்டார்”.
பள்ளி சிறுமி 1: “யாரும் நம்மை கையாள முடியாது. நாம் ரொம்ப நல்லா … கீழ்ப்படிகிறோம். படிக்க ஆர்வமுடன் இருக்கிறோம்”. (அனைவரும் சிரித்தல்)
பள்ளி சிறுமி 2: “இதோ அவர் வருகிறார். சீக்கிரம் வகுப்பறைக்குள் செல்லுங்கள்”.
பள்ளி சிறுமி 1: “அவர் எப்படி நமது பள்ளிக்கு வந்தார்?”
பள்ளி சிறுமி 2: “பள்ளி முதல்வர் கூறினார். அவரை இறைவன் இங்கு அனுப்பி இருக்கிறாராம்”.
ஜிம்: “நாம் அவரை இங்கிருந்து அனுப்பிடுவோம்”. (அனைவரும் சிரித்தல்)
(பள்ளி மணியின் சத்தம்)
பள்ளி மணி ஒலித்தது. ஜிம் மற்றும் அவனுடைய நண்பர்கள் பின் வரிசையில் அமர்ந்திருந்தார்கள். என்ன நடக்கப் போகிறது என்பதைக் காண அவர்கள் ஆவலாய் இருந்தார்கள். ஆசிரியர் பள்ளி அறைக்கு வந்தார். அவர் வகுப்பறையைக் கண்டு சந்தோஷப்பட்டார்.
ஆசிரியர்: “காலை வணக்கம் மாணவ மாணவிகளே, நாம் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொள்வோம். இந்தப் பள்ளி ஆண்டு மிகவும் நல்ல ஆண்டாக இருக்க வேண்டும். அதற்கு நமக்கு நல்ல ஆரம்பம் தேவை. தயை கூர்ந்து அனைவரும் எழும்பி நில்லுங்கள். நாம் விண்ணப்பம் பண்ணப் போகிறோம்”.
விண்ணப்பமா? மாணவர்கள் வாயடைத்துப் போனார்கள். ஜிம் மிகவும் அதிர்ச்சியுற்றான் அவன் தானாகவே எழுந்து நின்று தனது கைகளை கூப்பினான்.
ஆசிரியர்: “ஆண்டவராகிய இயேசுவே, இந்த ஆண்டு முழுவதும் நீங்கள் இணைந்து பணி செய்ய எங்களுக்கு உதவும். ஒவ்வொரு மாணவனுக்காகவும் உமக்கு நன்றி. ஒவ்வொருவரும் உம்மை அறிந்துகொள்ள உதவும். நீர் ஒவ்வொருவரையும் நேசிக்கிறீர். ஆமென்”.
மாணவர்கள் இதன் அர்த்தத்தை புரிந்துகொள்ளவில்லை. ஆனாலும் இந்த விண்ணப்பம் அவர்களுடைய இருதயத்தைப் பாதித்தது. இயேசு அவர்களை நேசிப்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று ஆசிரியர் விரும்பினார். அவர்கள் இதற்கு முன்பு இதைப் போன்று கேட்டதில்லை. இதைக் குறித்து சிந்திக்க அவர்களுக்கு போதுமான நேரம் இருக்கவில்லை. அவர்கள் முதல் அதிர்ச்சியில் இருந்து வெளியில் வருவதற்குள் இரண்டாவது அதிர்ச்சி வந்தது. என்ன நிகழ்ந்தது என்பதை அடுத்த நாடகத்தில் காண்போம்.
மக்கள்: உரையாளர், ஜிம், இரண்டு பள்ளி சிறுமிகள், ஆசிரியர்.
© Copyright: CEF Germany