Home -- Tamil -- Perform a PLAY -- 020 (On the run 5)
20. எலியா ஓடிப் போனான் 5
இராஜாவின் அரண்மனை நோக்கிச் செல்லும் சாலையில் குதிரைகளின் கால் தடங்கள் காணப்பட்டன. கடுமையான மழை பெய்தது. அரண்மனையை நெருங்கியவுடன் ஆகாப் விரைந்து உள்ளே சென்றான்.
ஆகாப்: “யேசபேல், யேசபேல், இன்று என்ன நிகழ்ந்தது என்பதை உன்னால் யூகிக்க முடியாது. வானத்திலிருந்து அக்கினி வந்தது. எலியாவின் இறைவனே உண்மையான இறைவன் என்பதை ஒவ்வொருவரும் கண்டார்கள். பாகால் எதுவும் செய்யவில்லை. பாகாலின் அனைத்து தீர்க்கதரிசிகளும் இறந்து விட்டார்கள்”.
ராணி ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டாள். ஆகாபின் அறிக்கை அல்லது மழை பெய்த செய்தியைக் கேட்டு அவள் கர்த்தரே இறைவன் என்பதை ஒத்துக் கொண்டாளா? இல்லை. அவள் இதைக் கேட்ட போது கடுங்கோபமுற்றாள்.
யேசபேல்: “நான் எலியாவை கொல்லப் போகிறேன்”.
ராணி தன்னை கொல்லப் போவதை எலியா கேள்விப்பட்டான். அவன் பயந்து ஓடினான். அவன் மிக வேகமாக ஓடினான். 125 மைல்கள் கடந்து சென்றான். அப்போதும் அவன் பாதுகாப்பாக உணரவில்லை. எனவே அவன் தெற்கு பக்கமாக தொடர்ந்து ஓடினான். அவனது பயம் அவனை வனாந்தரத்திற்குள் துரத்தியது.
நீ பயப்படும் போது என்ன செய்வாய்? இறைவன் அங்கு இருக்கிறார். இறைவன் தன்னை வழிநடத்தும்படி எலியா எப்போதும் ஒப்புக்கொடுப்பான். ஆனால் இந்த முறை அவனது பயம் அவனை நடத்தியது. அவன் அடுத்த அடி எடுத்து வைக்க இயலவில்லை. அவன் சூரைச் செடியின் கீழ் படுத்துக் கொண்டு, விண்ணப்பம் பண்ணினான்.
எலியா: “ஆண்டவரே! நான் சாக வேண்டும்”.
தூதன்: “எலியா, எழுந்திரு, போஜனம்பண்ணு”.
எலியா எழுந்து தன் கண்களைத் திறந்து சுற்றிலும் பார்த்தான். அவன் தண்ணீரைக் கண்டான். சுடப்பட்ட ரொட்டியைக் கண்டான். அது அதிக சுவையாய் இருந்தது. எலியா சாப்பிட்ட பின்பு மீண்டும் தூங்கினான். இறைவன் அங்கிருக்கிறார். அவனை பராமரிக்கிற இறைவனுடைய அன்பை இறைதூதன் அறிந்து கொண்டான். இப்போது மீண்டும் இறைவனின் சத்தம் கேட்டது. அவன் புதிய இறை பணியோடு புறப்பட்டுச் சென்றான்.
இறைவன் அங்கிருக்கிறார். நீ பயப்படத் தேவையில்லை. வேதாகமத்திலிருந்து ஒரு வசனத்தைக் கூறி, நான் உங்களை உற்சாகப்படுத்த விரும்புகிறேன்.
“கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்?” (சங்கீதம் 27:1)
மக்கள்: உரையாளர், ஆகாப், யேசபேல், எலியா, தூதன்.
© Copyright: CEF Germany