Home -- Tamil -- Perform a PLAY -- 019 (Who is the true God 4)
19. உண்மையுள்ள இறைவன் யார் 4
ஆகாப் இராஜா எலியா மீது கடுங்கோபம் கொண்டான்.
ஆகாப்: “நீண்ட காலம் மழை பெய்யாமல் இருப்பதற்கு இந்த தீர்க்கதரிசி தான் காரணம். ஆகாப் கோபமுற்றான். உயிருள்ள இறைவனுக்கு எதிராக அவன் நடந்து கொண்டதால்தான் பெரிய பஞ்சம் ஏற்பட்டது என்ற உண்மையை அவன் மறந்து விட்டானோ?”
மூன்று ஆண்டுகள் கடந்தன. ஒரு துளி மழை கூட பெய்யவில்லை. பின்பு ஆகாப் அரசனிடம் எலியா சென்றான்.
எலியா: “ஆகாப் இராஜாவே, மழை பெய்ய வேண்டுமென நீ விரும்பினால் தேசத்தின் எல்லா மக்களையும், பாகாலை வழிபடும் பூசாரிகளையும் கர்மேல் மலைக்கு வரச் சொல். அங்கு உண்மையான இறைவன் கர்த்தரா அல்லது பாகாலா என்பதைக் காண்போம்”.
ஆகாப் எலியா சொற்படி கேட்டான்.
அடுத்த நாள் காலை முழு தேச மக்களும் மலை மீது ஏறினார்கள். என்ன நடக்கப் போகிறது? எலியா கூட்டத்தைப் பார்த்து கேட்டான்.
எலியா: “இன்னும் எந்த மட்டும் குந்தி குந்தி நடப்பீர்கள்?” கர்த்தரையா? அல்லது பாகாலையா? யாரை சேவிப்பீர்கள் என்று இன்று முடிவு செய்யுங்கள்.
தேசம் அமைதியாய் இருந்தது. எலியா பலிபீடம் கட்டுவதையும், பலிக்கான மிருகத்தை அதில் கிடத்துவதையும் கவனித்தார்கள். பாகாலின் தீர்க்கதரிசிகளும் இதே காரியத்தை செய்தார்கள்.
எலியா: “பொறுங்கள்! நெருப்பு மூட்ட வேண்டாம்! ஒவ்வொருவரும் அவர்கள் இறைவனை நோக்கி வேண்டுவோம். வானத்திலிருந்து அக்கினியால் உத்தரவு அருளும் இறைவனே மெய்யான இறைவன்”.
உடனடியாக பாகாலைப் பின்பற்றுவோர் கூப்பிட ஆரம்பித்தார்கள். மணிக்கணக்காக கூப்பிட்டார்கள். வானத்திலிருந்து ஒரு பதிலும் இல்லை. எலியா அவர்களை பரியாசம் பண்ணினான்.
எலியா: “ஹா ஹா. இன்னும் சத்தமாக கூப்பிடுங்கள். உங்கள் கடவுள் தூங்கிக் கொண்டிருப்பான் அல்லது விடுமுறையில் சென்றிருப்பான்!”
எலியா பலிபீடத்தைச் சுற்றிலும், விறகுகள் மீதும் தண்ணீரை ஊற்றினான். ஈரமான விறகுகள் எரியாது. அப்படி நிகழ்ந்ததா? எலியா முழு இருதயத்தோடும் உரக்கக் கூப்பிட்டான். எலியா விண்ணப்பம் பண்ணினான்.
எலியா: “கர்த்தராகிய இறைவனே. நீரே இஸ்ரவேலின் இறைவன் என்பதையும், நான் உமது ஊழியக்காரன் என்பதையும், உமது மக்களுக்கு காண்பியும்”.
என்ன ஆச்சரியம்! உடனடியாக வானத்திலிருந்து அக்கினி வந்தது. பலியையும், விறகுகளையும், கறிகளையும் அக்கினி பட்சித்தது. தண்ணீரையும் பட்சித்தது. எல்லாருக்கும் அதிர்ச்சி முகங்களில் பயம் தொற்றியது. அவர்கள் ஒருமிக்க கூக்குரலிட்டாரக்ள்.
தேசம்: “கர்த்தரே இறைவன்! கர்த்தரே இறைவன்!”
இப்போது மக்கள் உணர்வடைந்தார்கள். பாகாலின் தீர்க்கதரிசிகள் தங்கள் பலனை அடைந்தார்கள். அவர்கள் அனைவரும் மரித்தார்கள்.
கர்த்தரே தேவன். எலியா மீண்டும் விண்ணப்பம் பண்ணினான். கருமேகங்கள் சூழ்ந்தன. மழை பொழிந்தன. ஒரே உயிருள்ள இறைவன் மீண்டும் மழையைக் கொண்டு வந்தார்.
மக்கள்: உரையாளர், ஆகாப், எலியா, தேசம்.
© Copyright: CEF Germany