Home -- Tamil? -- Perform a PLAY -- 164 (The lost sheep 2)
164. தொலைந்து போன ஆடு 2
ரூத் கோபத்துடன் ஓடிப்போனாள். மார்கரெட் அத்தையின் வார்த்தைகள் அவளைப் பின் தொடர்ந்தன. “நான் உன்னை தங்கும் விடுதிப் பள்ளிக்கு அனுப்பப் போகிறேன்”.
சூரியன் மறைந்த போது, அவள் வீட்டை விட்டு வெகுதூரம் சென்றிருந்தாள். அந்த இரவு எங்கே தூங்குவது என்று யோசித்தாள். கல்லறைக்குப் பின்பு இருந்த சபையில் தங்கலாமா?
அவள் கல்லறையின் வழியே வேகமாகக் கடந்து சென்றாள். அவள் சிறிய வெள்ளை நிற சிலுவையைக் கண்டு நின்றாள்.
ரூத்: “ஜோகன்னா கொலின்ஸ்! 9 வயது! அவள் இயேசுவுடன் இருக்கும்படி சென்றுவிட்டாள். நான் இன்று மரித்தால், நானும் இயேசுவுடன் இருப்பேனா?”
சிந்தனையில் ஆழ்ந்தாள். ரூத் சபைக்குள் சென்றாள் (கதவை திறக்கும் சத்தம்) அவள் திண்ணை பகுதியில் படுத்து உறங்கினாள்.
அடுத்த நாள் போதகர் சபைக்குள் வந்தார். ரூத்தைக் கண்டார்.
போதகர்: “குட்மார்னிங்! நீ எங்கிருந்து வருகிறாய்?”
ரூத் போதகர் மீது நம்பிக்கை வைத்து, அவள் வீட்டை விட்டு ஓடி வந்ததை அவரிடம் கூறினாள்.
பின்பு அவள் போதகரின் வீட்டில் ருசிமிக்க காலை உணவை உண்டாள். அப்போது திரு.ரொபிங்கர் அவளது அத்தையிடம் தொலைபேசியில் பேசினாள். ரூத் அந்த அறையில் சுற்றிலும் பார்த்தாள். சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த ஒரு படத்தைக் கண்டாள்.
போதகர்: “உனக்கு அந்த படம் பிடித்திருக்கிறதா? அது நல்ல மேய்ப்பன் இயேசுவின் படம். அவர் தனது கரத்தில் தொலைந்து போன ஆட்டை சுமந்து கொண்டிருக்கிறார். அவர் அதைக் காப்பாற்ற விரும்புகிறார். அந்த ஆடு உன் நிலையைக் குறித்து எனக்கு நினைவுப்படுத்துகிறது”.
ரூத்: “அவர் என்னையும் கண்டுபிடிப்பாரா? நானும் ஜோகன்னா கொலின்ஸைப் போல பரலோகிற்கு செல்வேனா?”
போதகர்: “ஆமாம். நான் உமக்கு சொந்தமாக விரும்புகிறேன் என்று நீ அவரிடம் சொல்ல வேண்டும். நான் உனக்கு அந்தப் படத்தைத் தருகிறேன். இப்போதே வீட்டிற்கு திரும்பிச் செல். உனது அத்தை உன்னைக் குறித்து கவலைப்படுகிறாள்”.
அவள் வீட்டிற்கு திரும்பிச் செல்லும் வழியில், தனது பாக்கெட்டில் இருந்து அந்தப் படத்தை எடுத்தாள். அவள் அதைப் பார்த்து, விண்ணப்பம் செய்தாள்.
ரூத்: “ஆண்டவராகிய இயேசுவே, நான் தான் இந்த கீழ்ப்படியாத ஆடு. தயவுசெய்து என்னுடைய எல்லாப் பாவத்தையும் மன்னித்து விடுங்கள். நான் உமக்குச் சொந்தமாக விரும்புகிறேன். பரலோகில் உம்முடன் வாழ வேண்டும். ஆமென்”.
இப்படிப்பட்ட விண்ணப்பங்களுக்கு இயேசு உடனடியாக பதில் அளிக்கிறார். ரூத் ஆண்டவருக்கு நன்றி செலுத்தினாள். மகிழ்ச்சியில் குதித்தாள்.
வாசலின் முன்பு மார்கரெட் அத்தை காத்துக் கொண்டிருந்தாள். அவர்கள் ஒருவரையொருவர் கட்டித் தழுவினார்கள்.
ரூத்: “மார்கரெட் அத்தை, நடந்த எல்லாவற்றிற்காகவும் என்னை மன்னித்துவிடுங்கள். தயவுசெய்து என்னை தங்கும் விடுதிப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். நான் இனிமேல் நல்ல பிள்ளையாக இருப்பேன்”.
மார்கரெட் அத்தை: “நான் உன்னை நேசிக்கிறேன். நாம் இன்னும் ஒருமுறை முயற்சிப்போம்”.
ரூத் தனது குணங்களில் மாற்றத்தைக் காண்பிக்க கடினமாக பிரயாசப்பட்டாள். நல்ல மேய்ப்பன் வேதாகமத்தின் மூலம் அவளது இருதயத்தில் பேசும்போது, அந்த சத்தத்தைக் கவனித்தாள். அவளது இருதயத்தில் மேலோங்கும் பெருமையின் சத்தத்திற்கு அவள் செவி கொடுக்கவில்லை.
ரூத் உண்மையாகவே மாறிவிட்டாள். சில காலம் எல்லாக்காரியங்களும் நன்றாக சென்றது. ஆனால்.
இந்த சுவாரஸ்யமான கதையின் தொடர்ச்சியை நான் உங்களுக்கு அடுத்த நாடகத்தில் சொல்வதைக் கவனியுங்கள்.
மக்கள்: உரையாளர், ரூத், போதகர், மார்கரெட் அத்தை.
© Copyright: CEF Germany