Home -- Tamil? -- Perform a PLAY -- 138 (An awful accident 1)
138. கோர விபத்து 1
நகரம் முழுவதும் கலக்கமுற்றிருந்தது. அங்கே சிரிப்பு இல்லை, பாடல் இல்லை. ஒவ்வொருவரும் பயந்திருந்தார்கள்.
தாதிப்பெண்: “இந்தக் கொடிய யுத்தம் சீக்கிரம் முடிந்துவிடும் என்று நம்புகிறேன்”.
பெண்: “சவுல் இராஜா எதிரியைத் தோற்கடித்துவிட்டாரா?”
அலங்கச் சுவர் மீது இருக்கும் காவற்காரர்கள் தான் செய்தி கொண்டு வருபவனை முதலாவது பார்ப்பார்கள். அவன் யுத்தகளத்தின் செய்திகளை கொண்டு வருவான். அவனுடைய முகத்தைப் பார்த்து, அது நல்ல செய்தி இல்லை என்று ஒருவன் சொல்லிவிட முடியும்.
செய்தியாளர்: “எதிரிகள் நமது படையைத் தோற்கடித்துவிட்டார்கள். சவுல் இராஜா, யோனத்தான் இளவரசன் இறந்துவிட்டார்கள். ஓடிப்போங்கள்! உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்”.
ஒவ்வொருவரும் பயமடைந்து, அந்த நகரத்தை விட்டு ஓடிப்போனார்கள்.
எவ்வளவு பரிதாபமான நாள் அது! குறிப்பாக மேவிபோசேத்திற்கு. அவன் ஐந்து வயது நிரம்பியவன். எல்லாவற்றையும் அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. அவனுடைய அப்பா யோனத்தான் இளவரசன் இறந்துவிட்டான்.
அவனுடைய அப்பா இனி ஒருபோதும் வீட்டிற்கு திரும்பி வரமாட்டார். அவனை தோள்மீது சுமக்கமாட்டார். அவனுக்கு அம்பு எய்ய கற்றுக்கொடுக்க மாட்டார். அவனுக்கு கதைகள் சொல்லமாட்டார். மேவிபோசேத் அழுதான். அவனுடைய தாதி அவனைப் பராமரித்துக் கொண்டாள்.
தாதிப் பெண்: “மேவிபோசேத், வா! நாம் இந்த இடத்தை விட்டுச் செல்ல வேண்டும். நாம் காலம் தாமதிக்கக் கூடாது”.
அவர்கள் உடனடியாக அரண்மனையைவிட்டப் போனார்கள். அப்போது இந்தக் காரியம் நிகழ்ந்தது.
மேவிபோசேத்: “ஆ! ஊ! ஆ! என் கால்!”
மேவிபோசேத் இனி நடக்க முடியாதபடி, மிகமோசமாக கீழே விழுந்ததினால் பாதிப்பு ஏற்பட்டது. கற்பனை செய்து பார். இந்த விபத்தின் நிமித்தம், அவனுடைய இரண்டு கால்களும் முடமாயின. அவனுடைய வாழ்வில் மிகவும் துக்கமான நாள் அது. அவனுக்கு இப்போது வீடும் இல்லை.
லோதேபார் என்ற இடத்தை அவர்கள் அடைந்தார்கள். லோதேபார் என்றால் “முக்கியமல்லாத, மதிப்பில்லாத” என்று அர்த்தம். மேவிபோசேத்திற்கு இது பொருந்திவந்தது. திடீரென்று அவனுடைய வாழ்வு மதிப்பற்றதாக மாறியது. இனிமேல் தான் எதற்கும் பயனற்றவன் என்று அவன் நினைத்தான்.
சில நேரங்களில் நீயும் முக்கியமற்றவன் என்பதைப் போல உணருகிறாயா? நீ வகுப்பறையில் சிறந்த மாணவன் இல்லை. நீ விளையாட்டில் எதுவும் சாதனை படைக்கவில்லை. எல்லோரும் உன்னை விட சிறந்தவர்கள் என்றும், உன்னைவிட மற்றவர்கள் அதிகம் நேசிக்கப்படுகிறார்கள் என்றும் நீ நினைக்கிறாய்.
உன்னால் மேவிபோசேத்தைப் புரிந்துகொள்ள முடிகிறதா? அவன் லோதேபாரில் அநேக ஆண்டுகள் இவ்விதமாக வாழ்ந்தான்.
அவனுடைய அப்பாவின் சிறந்த நண்பன் தாவீது. அவன் இஸ்ரவேலின் அரசனாக மாறிய போது, அரண்மனைக்குள் கெம்பீரமாக நடந்து சென்றான்.
தாவீது: “சீபா என் வேலைக்காரனே, சவுலின் குடும்பத்தில் இன்னும் யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா?”
சீபா: “ஆமாம், யோனத்தானின் மகன், முடவனாகிய மேவிபோசேத்”.
தாவீது: “அவன் எங்கே இருக்கிறான்?”
சீபா: “அவன் லோதேபாரில் இருக்கிறான்”.
தாவீது இராஜா என்ன செய்யப் போகிறார்? அடுத்த நாடகத்தில் நான் அதை உங்களுக்குச் சொல்வேன்.
மக்கள்: உரையாளர், தாதிப்பெண், பெண், செய்தியாளர், மேவிபோசேத், தாவீது, சீபா.
© Copyright: CEF Germany