Home -- Tamil? -- Perform a PLAY -- 132 (Fish and questions at breakfast)
132. காலை உணவு - மீன்களும் கேள்விகளும்
சம்பவங்கள் மிகவும் வேகமாக நடக்கின்றன. அப்போது செய்தித்தாள்கள் இருந்திருந்தால், கி.பி 33-ம் ஆண்டில் முதல் பக்க செய்தியாக ஈஸ்டர் இடம் பெற்றிருக்கும்.
வாசிப்பவர் (ஆண்): “இயேசு மரித்தபோது காரிருள் ஏற்பட்டது”.
வாசிப்பவர் (பெண்): “மரித்தவர் உயிருடன் எழும்பியுள்ளார். அவர் நகரத்தில் வந்துள்ளார்”.
வாசிப்பவர் (ஆண்): “பூமி அதிர்ச்சி ஏற்பட்டு கன்மலை பிளந்துள்ளது”.
வாசிப்பவர் (பெண்): “நூற்றுக்கு அதிபதி இயேசு இறைவனுடைய குமாரன் என்பதை அறிக்கை செய்திருக்கிறார்”.
வாசிப்பவர் (ஆண்): “இயேசுவின் கடைசி வார்த்தைகள்: “எல்லாம் முடிந்தது”.
வாசிப்பவர் (பெண்): “முதல்பக்கத்தில் பெரிய எழுத்துகளில்: “கல்லறை காலியாக உள்ளது!”
எருசலேம் பத்திரிக்கைகளில் இப்படி செய்தி வந்ததா? இல்லை. இவைகள் வேதாகமத்தில் உள்ள கண்கண்ட சாட்சிகளின் அறிக்கைகள் ஆகும். நீங்கள் வாசிப்பதற்காக இப்படி கொடுக்கப்பட்டுள்ளது. கல்லறை காலியாக உள்ளது. இயேசு உயிருடன் இருக்கிறார். அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பின்பு, அவர் தம்முடைய சீஷர்களிடம் சென்றார். அவர்கள் மிகவும் வேதனையுடனும், பயத்துடனும் இருந்தார்கள். ஆனால் அவர்கள் இயேசுவைக் கண்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.
இதற்கு பின்பு பேதுருவும், மற்ற சீஷர்களும் எருசலேமை விட்டு, கலிலேயாக் கடல் அருகே உள்ள தங்கள் வீடுகளுக்குச் சென்றார்கள்.
பேதுரு: “நான் மீன் பிடிக்கப் போகிறேன்”.
யோவான்: “நாங்களும் உன்னுடன் வருகிறோம்”.
அன்று மாலை அவர்கள் கலிலேயா கடலில் படகில் சென்றார்கள். இரவு முழுவதும் அவர்கள் ஒரு மீனைக் கூட பிடிக்கவில்லை. காலை பொழுது விடிந்தபோது, இயேசு கரையில் நின்று கொண்டிருந்தார். அவர் யார் என்பதை சீஷர்கள் அறியவில்லை.
இயேசு: “சாப்பிட எதாகிலும் உங்களிடம் உண்டா?”
யோவான்: “இல்லை”.
இயேசு: “உனது வலையை படகின் வலது புறம்போடு”. (தண்ணீர் சத்தம்)
பேதுரு: “வலை நிரம்பியிருந்தது”.
யோவான்: “அவர் இயேசு! அவர் கர்த்தர்!”
கரையில் இருந்து வெறும் 300 அடி தூரத்தில் அவர்கள் 153 பெரிய மீன்களை வலையில் பிடித்தார்கள்.
இயேசு: “வாருங்கள்! காலை உணவை உட்கொள்ளுங்கள்!”
நெருப்பினருகே அப்பமும், வறுத்த மீனும் ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. இயேசு தமது நண்பர்களுக்கு அளித்த மூன்றாவது தரிசனம் இது. பேதுருவுக்கு தர்மசங்கடமாக இருந்தது. அவன் இயேசுவைத் தெரியாது என்று மூன்று முறை மறுதலித்ததை நினைத்துப் பார்த்தான். உணவை உட்கொண்ட பின்பு இயேசு பேதுருவிடம் தனியாகப் பேசினார்.
இயேசு: “பேதுரு, நீ என்னை நேசிக்கிறாயா?”
பேதுரு: “ஆம், ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்”.
இயேசு: “பேதுரு, நீ என்னை நேசிக்கிறாயா?”
பேதுரு: “ஆம், ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன் என்பது உமக்குத் தெரியும்”.
இயேசு: “பேதுரு, நீ என்னை நேசிக்கிறாயா?”
இயேசு தன்னிடம் மூன்று முறை கேட்டதினால், பேதுரு மிகவும் துக்கமடைந்தான்.
பேதுரு: “ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிவீர். நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் அறிந்திருக்கிறீர்”.
இன்று இயேசுவின் கேள்விக்கான உனது பதில் இது தானா?
இயேசு பேதுருவை மன்னித்தார். எவனுக்கு அதிகம் மன்னிக்கப்பட்டதோ, அவன் இயேசுவை அதிகமாக நேசிக்கிறான்.
மக்கள்: உரையாளர், வாசிப்பவர் ஆண், பெண், பேதுரு, யோவான், இயேசு.
© Copyright: CEF Germany