Home -- Tamil? -- Perform a PLAY -- 111 (A promise is a promise)
111. வாக்குத்தத்தம் நிச்சயம் நிறைவேறும்
பகைவன் 1: “உங்கள் ராஜாவை விட்டு எங்கள் பக்கம் வாருங்கள்! நாங்கள் உங்களை தோற்கடிப்போம்.”
பகைவன் 2: “உங்கள் ராஜா சொல்வதை நம்ப வேண்டாம். அவன் உங்களிடம் பொய் பேசுகிறான்!”
பகைவன் 1: “எங்கள் ராஜா சனகெரிப் வலிமை மிக்கவன்!”
பகைவன் 2: “ஹா! ஹா! நீங்கள் வீரர்கள் அல்ல! வீழப்போகிறவர்கள்!”
பகைவன் 1: “இன்னமும் உங்கள் இறைவனை நம்பினால் எதுவும் நடக்காது”.
200,000 போர் வீரர்களுடன் எதிரியாகிய அசீரியா இராஜா எருசலேம் பட்டணத்தை சூழ்ந்துகொண்டான். நகரத்து வாசலில் இருக்கும் மனிதர்கள் அமைதியுடன் இருந்தார்கள். அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள் என்பதை எசேக்கியா அறிந்திருந்தான். எதிரி அறியாத ஒரு ஆயுதத்தை அவன் வைத்திருந்தான். அந்த ஆயுதம் எப்போதுமே ஜெயிக்கும்.
அந்த ஆயுதத்தை இராணுவத்தில் காணமுடியாது. ஆனால் இருதயத்தில் காண முடியும். அது தான் இறைவன் மீதான நம்பிக்கை ஆகும். இந்த ஆயுதத்தை வைத்திருக்கும் எவரும் எதிரிக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை.
எசேக்கியாவின் தூதுவன்: “எசேக்கியா ராஜாவே! இதோ சனகெரிப்பிடம் இருந்து வந்திருக்கும் கடிதம்”.
எசேக்கியா: “பயப்படாதேயுங்கள்! இறைவன் நம் பக்கம் இருக்கிறார். அவர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்!”
எசேக்கியா அந்தக் கடிதத்தை எடுத்தான். தேவாலயத்திற்கு சென்று விண்ணப்பம் செய்தான்.
எசேக்கியா: “ஆண்டவரே! நீரே எங்கள் இறைவன். நீர் மட்டுமே இராஜா. நீர் உயிருள்ள இறைவன் என்பதை அனைவரும் அறியும்படி எங்களைக் காப்பாற்றும்”.
இறைவன் மீது விசுவாசம் வைக்கும் போது, வாழ்வில் எல்லாம் எளிதாக நடக்கும் என்று சிலர் எண்ணுகிறார்கள். ஆனால் வேதாகமம் அப்படிப் போதிக்கவில்லை. நமக்கு கடினமான காரியங்கள் நிகழும்படி இறைவன் அனுமதிக்கிறார். நாம் உண்மையாகவே இறைவன் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறோமோ என்பதைக் காணக்கூடிய பரீட்சைகளாக அவைகள் உள்ளன.
எசேக்கியா இந்தப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றான். அவனிடம் இறைவன் கூறினார்: கர்த்தராகிய இறைவன் சொல்லுகிறார்: நான் உனது விண்ணப்பத்தைக் கேட்டேன். பட்டணத்திற்குள் ஒரு அம்பைக் கூட எதிரியால் எய்ய முடியாது.
உண்மையாகவே? ஒரு அம்பு கூட வராதா?
அடுத்த நாளில் அனைவரும் அதை அறிந்துகொண்டார்கள்.
மனிதன்: “பாருங்கள்! எதிரி தோற்றுப்போனான்!”
மனிதன்: “எங்கு பார்த்தாலும் பிணங்கள். யார் எதிரியை வீழ்த்தியது?”
அந்த இரவில் இறைவன் தூதனை அனுப்பினார் என்று வேதாகமம் நமக்கு கூறுகிறது. அந்தத் தூதன் 185,000 எதிரி நாட்டு போர்வீரர்களைக் கொன்றான். எனவே தான் பட்டணத்திற்குள் ஒரு அம்பு கூட எய்யப்பட முடியவில்லை.
இறைவன் வாக்குப்பண்ணியதை நிறைவேற்றுகிறார்.
நாம் அவரை முழுமையாக நம்பமுடியும். வேதாகமத்தில் சங்கீதம் 33 வசனம் 4- இவ்விதமாகக் கூறுகிறது. “கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது”.
இறைவனுடைய வார்த்தையை வாசி. அதைச் சார்ந்துகொள். எசேக்கியாவின் அனுபவம் இன்றும் உன் வாழ்வில் உண்மையாக நடக்கும். இறைவன் வாக்குப்பண்ணியதை நிறைவேற்றுகிறார். உனக்கு வேதாகமம் இல்லையென்றால் எனக்கு எழுது. நீ ஒரு வேதாகமத்தைப் பரிசாக பெற்றுக்கொள்வாய்.
மக்கள்: உரையாளர், இரண்டு பகைவர்கள், எசேக்கியா, எசேக்கியாவின் தூதுவன், மனிதன்.
© Copyright: CEF Germany