Home -- Tamil? -- Perform a PLAY -- 095 (I can’t see him)
95. நான் அவரை காணவில்லை
மிகவும் அருமை. எனக்கு ஆங்க்கிடமிருந்து ஒரு கடிதம் வந்துள்ளது. அவள் என்ன எழுதியிருப்பாள் என்று நான் ஆச்சரியப்படுகிறேன்?
(கடிதத்தை பிரிக்கும் சத்தம்)
ஆங்க்: “ஹலோ, எனக்கு உண்மையாகவே நாடகங்கள் மிகவும் பிடித்துள்ளது. நான் அந்த இசையை, பாடல்களை ஒவ்வொரு முறையும் கேட்கிறேன். எனக்கு 10 வயது. எனக்கு வேதாகமத்தின் சாகசக் கதைகள் பிடிக்கும். இறைவன் என்னை நேசிப்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு இது மிகவும் பிடித்தமானது.
உங்கள் உண்மையுள்ள ஆங்க். விடை பெறுகிறேன்”.
ஆங்க்கின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இதோ அந்தப் பாடல். “நான் அவரைக் காணவில்லை. அவர் சத்தம் கேட்கவில்லை, ஆனாலும் அவர் இங்கு இருக்கிறார்”.
நீங்கள் எளிதாக இதை விரைவில் கற்றுக்கொள்ள முடியும். இணைந்து பாடமுடியும்.
(பின்னணியில் இசை. உரையாளர் சத்தமாக வாசிக்க வேண்டும்)
நான் அவரைக் காணவில்லை. அவர் சத்தம் கேட்கவில்லை.
ஆனாலும் அவர் இங்கு இருக்கிறார், என்னால் இறைவனைக் காண முடியாது.
ஆனால் இயேசு என் அருகில் இருக்கிறார்.
இதை விசுவாசிக்காதவர்கள், இதை புரிந்துக்கொள்ளாதவர்கள் கொஞ்சம் எனது பாடலை கவனியுங்கள்.
நான் அவரைக் காணவில்லை. அவர் சத்தம் கேட்கவில்லை.
ஆனாலும் அவர் இங்கு இருக்கிறார், என்னால் இறைவனைக் காண முடியாது.
ஆனால் இயேசு என் அருகில் இருக்கிறார்.
இந்த உலகில் இயேசு இருப்பதை ஒருவன் எப்போதும் காண முடியாது.
சிலர் தங்களை கிறிஸ்தவர்கள் என்கிறார்கள், ஆனால் இறைவனை மறந்துவிட்டார்கள்.
நான் அவரைக் காணவில்லை. அவர் சத்தம் கேட்கவில்லை.
ஆனாலும் அவர் இங்கு இருக்கிறார், என்னால் இறைவனைக் காண முடியாது.
ஆனால் இயேசு என் அருகில் இருக்கிறார்.
நாம் இயேசுவுக்கு உண்மையாயிருப்போம், அவருடன் மகிழ்ச்சியோடு நடப்போம்.
அப்போது நம்மில் இயேசு வாழ்வதை மற்றவர்கள் காண்பார்கள்.
நான் அவரைக் காணவில்லை. அவர் சத்தம் கேட்கவில்லை.
ஆனாலும் அவர் இங்கு இருக்கிறார், என்னால் இறைவனைக் காண முடியாது.
ஆனால் இயேசு என் அருகில் இருக்கிறார்.
இயற்கையின் அழகை அதன் மகிமையோடு பாருங்கள்.
காடுகள், விளைநிலைங்கள், வான்வெளிகள் – இறைவன் அனைத்தையுமம் உண்டாக்கினார்.
நான் அவரைக் காணவில்லை. அவர் சத்தம் கேட்கவில்லை.
ஆனாலும் அவர் இங்கு இருக்கிறார், என்னால் இறைவனைக் காண முடியாது.
ஆனால் இயேசு என் அருகில் இருக்கிறார்.
நான் ஆபத்தில் இருந்த போது இறைவன் என்னை பாதுகாத்தார்.
ஒவ்வொரு துன்பத்தில் இருந்தும் என்னை விடுவித்தார்.
நான் அவரைக் காணவில்லை. அவர் சத்தம் கேட்கவில்லை.
ஆனாலும் அவர் இங்கு இருக்கிறார், என்னால் இறைவனைக் காண முடியாது.
ஆனால் இயேசு என் அருகில் இருக்கிறார்.
மகிழ்ந்து களிகூருங்கள். இறைவன் பிரசன்னமாயிருக்கிறார். உன்னுடன் இருக்கிறார். இயேசு கூறினார்: “இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே இருக்கிறேன்”. (மத் 28:20)
மக்கள்: உரையாளர், ஆங்க்.
© Copyright: CEF Germany